
TAMIL TUTOR இணையத்தில் ஒரு
கல்வி பாசறை
TAMIL TUTOR இணையத்தில் ஒரு
கல்வி பாசறை
You can find and read all lessons in polity in this page
அரசியல் அறிவியல் அறிமுக பகுதியில் இருந்து, ஒரு சில முக்கிய கேள்விகள் இங்கு தரப்பட்டுள்ளது. பயிற்சி எடுத்து பாருங்கள். நீங்கள் முழு மதிப்பெண் எடுக்க, எங்களுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்!
அரசியல் அறிவியல் அறிமுக பகுதியில் இருந்து, ஒரு சில முக்கிய கேள்விகள் இங்கு தரப்பட்டுள்ளது. பயிற்சி எடுத்து பாருங்கள். நீங்கள் முழு மதிப்பெண் எடுக்க, எங்களுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்!
அரசியல் அறிவியல் அறிமுக பகுதியில் இருந்து, ஒரு சில முக்கிய கேள்விகள் இங்கு தரப்பட்டுள்ளது. பயிற்சி எடுத்து பாருங்கள். நீங்கள் முழு மதிப்பெண் எடுக்க, எங்களுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்!
பஞ்சாயத்து ராஜ் முறை பகுதி இரண்டில் இருந்து முக்கியமான பத்து வினாக்கள் இந்த பாடத்தில் இடம் பெற்றுள்ளன. இவற்றை மீண்டும் மீண்டும் பயிற்சி செய்து உங்களது வெற்றி வாய்ப்பை அதிகரித்துக் கொள்ளுங்கள். டிஎன்பிஎஸ்சி யுபிஎஸ்சி போன்ற தேர்வுகளில் இந்த பாடத்திலிருந்து நிச்சயமாக ஒரு கேள்வியாவது இடம்பெறும். எனவே, இதை நன்கு படித்து புரிந்து கொள்ளுங்கள்
பாராளுமன்றம் என்பது இந்தியாவில் அதிக அதிகாரம் படைத்த அமைப்பாகும். இது மக்களவை மாநிலங்களவை என இரண்டு அவைகளை கொண்டுள்ளது. மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் மக்களவை உறுப்பினர்களாகவும் ஒற்றை மாற்று வாக்கு முறை மற்றும் நியமிக்கப்படுபவர்கள் மாநிலங்களவை உறுப்பினர்களாக உள்ளனர். ஏறத்தாள அனைத்து போட்டித் தேர்வுகளிலும் அரசியல் அறிவியலில் இருந்து வினாக்கள் கண்டிப்பாக கேட்கப்படும். அதில் பாராளுமன்றம் தொடர்பாக கேள்விகள் இடம் பெறுவதற்கான வாய்ப்பு உண்டு. இந்த பாடத்தில் பாராளுமன்றத்தின் பணிகள் மற்றும் அதிகாரங்கள் குறித்து பார்க்கவிருக்கிறோம்.
பஞ்சாயத்து ராஜ் முறை என்பது இந்திய ஆட்சி முறையில் ஒரு சிறப்பம்சமாகும். சாதாரண மக்களுக்கும் அதிகாரம் கிடைத்திட வேண்டும் என்ற காந்தியடிகளின் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் இது செயல்பட்டு வருகின்றது. பஞ்சாயத்து ராஜ் முறை கொண்டுவரப்பட்ட தன் மூலமாக இந்தியாவில் மூன்று அடுக்கு ஆட்சி முறை வெற்றிகரமாக செயல்முறை படுத்தப்பட்டுள்ளது. இந்தப் பாடத்தில் இருந்து டிஎன்பிஎஸ்சி யூபிஎஸ்சி போன்ற தேர்வுகளில் நிச்சயமாக கேள்விகள் இடம் பெறும். இதில் கொடுக்கப்பட்டுள்ள கேள்வி பதில்களை படித்த பிறகு தவறாமல் பயிற்சி செய்து பார்க்கவும். மேலும், எங்களுக்கு தொடர்ந்து ஆதரவளித்து வரும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் எங்களின் மனமார்ந்த நன்றிகள். நீங்கள் விரைவில் ஒரு அரசு அதிகாரியாக மாற எங்களின் வாழ்த்துக்கள்.
இந்திய அரசியலமைப்பு உருவாக்கப்பட்ட நாள் முதலே அதன் அடிப்படைக் கூறுகள் தொடர்பான விவாதங்கள் தொடர்ந்து வருகின்றன. அரசியலமைப்பிற்கு அதிக அதிகாரம் உண்டா அல்லது பாராளுமன்றம் தான் அதிக அதிகாரம் படைத்ததா என்று உச்சநீதிமன்றத்தில் எண்ணற்ற வழக்குகள் நடைபெற்றுள்ளன. இன்றளவும் அதிக அதிகாரம் உடையது அரசியல் அமைப்பா அல்லது பாராளுமன்றமா என்று அறுதியிட்டு கூற முடிவதில்லை. இந்தப் பாடத்தில் அரசியலமைப்பின் அடிப்படை கூறுகள் குறித்து படித்து தெரிந்து கொள்ளுங்கள். பெரும்பாலான அடிப்படை அம்சங்கள் உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட பல்வேறு வழக்குகளின் மூலமாகவே அறியப்பட்டுள்ளன. எனவே, இந்த பாடத்தின் மூலமாக உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற சில முக்கியமான வழக்குகள் குறித்து நீங்கள் தெரிந்து கொள்ள முடியும்.
எங்களுக்கு தொடர்ந்து ஆதரவளித்து வரும் அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் Tamiltutor சார்பாக மனமார்ந்த நன்றிகள். மேலும், நீங்கள் விரைவில் ஒரு அரசு அதிகாரியாக பணியாற்ற எங்களின் வாழ்த்துக்கள். மாநிலத்தில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுதல், நிதி நிலைமைகளை பராமரித்தல், போன்ற ஒரு குறிப்பிட்ட மாநிலம் தொடர்பான பணிகளை மாநில அரசுகள் மேற்கொள்கின்றன. முதலமைச்சரை அரசின் தலைவராக கொண்டு செயல்படும் இந்த மாநில அரசுகளின் அச்சாணியாக விளங்குவது சட்டமன்றங்களே. இவை குறித்து இந்திய அரசியலமைப்பில் சட்டப்பிரிவு 168 முதல் 212 வரை குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தப் பாடத்தில் மாநில சட்டமன்றத்தின் பணிகள் மற்றும் அதிகாரங்கள் குறித்து மேலும் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
தேசிய அளவில் பாராளுமன்றம் செயல்படுவதை போலவே மாநில அளவில் சட்டமியற்றும் பணிகளை மாநில சட்ட மன்றங்கள் செயல்படுத்தி வருகின்றன. பாராளுமன்றத்தில் மக்களவை மாநிலங்களவை என்று இரு அவைகள் இருப்பதைப் போலவே மாநிலத்திலும் சட்டமன்ற கீழ் அவை மற்றும் மேலவை என்ற இரு அவைகள் ஒரு சில மாநிலங்களில் மட்டும் உள்ளன. மாநில சட்டமன்றத்தின் பெரும்பாலான பணிகள் பாராளுமன்றத்தை போலவே இருந்தாலும், பல்வேறு வேறுபாடுகள் காணப்படுகின்றன. இந்த பாடத்தில் சட்டமன்றத்தின் பணிகள் குறித்து படித்து தெரிந்து கொள்ளுங்கள் மேலும், பயிற்சியும் செய்து பாருங்கள். உங்களைப் போலவே போட்டித் தேர்வுக்கு தயாராகிக் கொண்டிருக்கும் உங்களின் நண்பர்களுக்கும் இந்த பாடத்தை பகிர்ந்து எங்களுக்கும் உங்களது நண்பர்களுக்கும் உதவி செய்யுங்கள்.
சென்ற பகுதியில் குடியரசுத் தலைவர் மற்றும் துணை குடியரசுத் தலைவரின் பணிகள் மற்றும் அதிகாரங்கள் குறித்து பார்த்தோம். இந்தப் பகுதி அதன் தொடர்ச்சியாக பத்து கேள்விகளை கொண்டுள்ளது. இந்த வினாக்களுக்கு உங்களால் விடை அளிக்க முடியுமா? பத்திற்குப் பத்து எடுத்துக் காட்டுங்கள் பார்க்கலாம்.