tamiltutor

TAMIL TUTOR இணையத்தில் ஒரு
கல்வி பாசறை

நீங்கள் உறங்கும் போது வருவது அல்ல கனவு, உங்களை உறங்க விடாமல் செய்வதே கனவு. -- அப்துல் கலாம்

emergency provisions part 1

அரசியலமைப்பில் சாதாரண சட்டங்கள் மட்டுமல்லாமல் நெருக்கடி காலங்களில் நடைமுறைப்படுத்த வேண்டிய சட்டங்களும் தெளிவாக தரப்பட்டுள்ளன. நெருக்கடி காலங்கள் என்பது மூன்று வகையாக பிரிக்கப்பட்டுள்ளது. நிதி பற்றாக்குறை காரணமாக நெருக்கடி காலங்கள் ஏற்படலாம். அல்லது, அயல்நாட்டு படையெடுப்பு அல்லது உள்நாட்டு கிளர்ச்சி போன்ற காலங்களில் இந்த நெருக்கடிநிலை தொடர்பான சட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும். இந்தியாவில் இந்த சட்டங்கள் அடிக்கடி பயன்படுத்தப்படுவதில்லை என்றாலும், போட்டித் தேர்வுகளில் அவ்வப்போது இந்த சட்டங்களை குறித்த கேள்விகள் இடம்பெறுகின்றன. எனவே, போட்டி தேர்வுகளுக்கு தயாராகிக் கொண்டிருப்பவர்கள் அரசியலமைப்பு பகுதியில் முழு மதிப்பெண் எடுக்க வேண்டும் என்றால், இந்தப் பகுதியை கவனமாக படித்திருக்க வேண்டும். அதோடு மட்டுமல்லாமல், திரும்பத் திரும்ப பயிற்சி செய்தால் தான் முழு மதிப்பெண் எடுப்பது சாத்தியமாகும். கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை பயன்படுத்தி உங்களது பயிற்சியை இன்றே தொடங்குங்கள். மேலும் ஏதேனும் கருத்துக்கள் அல்லது பரிந்துரைகள் இருந்தாள் அதை நீங்கள் தாராளமாக எங்களுக்கு தெரிவிக்கலாம். நமது தளம் குறித்து உங்களது நண்பர்களுக்கும் நீங்கள் தெரிவிப்பதற்கு எங்களின் நன்றிகள். Practice questions for emergency provisions in Tamil. Indian polity in Tamil for TNPSC, TRB, TET, UPSC, RRB, SSC. practice emergency quiz. Go to quiz

Go to quiz

question 1

அவசர காலங்களைக் கொண்டு வருவதை குறித்து கூறும் சட்ட பிரிவுகள் யாவை?

  • Option 1: 354 முதல் 358 வரை
  • Option 2: 352 முதல் 360 வரை
  • Option 3: 362 முதல் 370 வரை
  • Option 4: 342 முதல் 350 வரை

answer

352 முதல் 360 வரை

question 2

அவசர காலம் அறிவித்து இருக்கும் பொழுது இந்திய அரசியல் ஆட்சி கூட்டாட்சி முறையில் இருக்குமா அல்லது ஒற்றையாட்சி முறையில் இருக்குமா?

  • Option 1: ஒற்றையாட்சி முறையில் இருக்கும்
  • Option 2: கூட்டாட்சி முறையில் இருக்கும்
  • Option 3: அது சூழ்நிலைக்கு ஏற்ப மாற தக்கது
  • Option 4: பஞ்சாயத்து ராஜிக்கு முழு அதிகாரங்கள் தரப்படும்

answer

ஒற்றையாட்சி முறையில் இருக்கும்

question 3

அவசர காலங்களைக் கொண்டு வருவதற்கு அமைச்சர்களின் கையெழுத்து ஒப்புதலும் வேண்டும் என்று கூறப்பட்ட சட்டத்திருத்தம் எது?

  • Option 1: 38 வது சட்டத்திருத்தம் 1975
  • Option 2: 32 வது சட்டத்திருத்தம் 1973
  • Option 3: 44 வது சட்டத்திருத்தம் 1978
  • Option 4: 42 வது சட்டத்திருத்தம் 1976

answer

44 வது சட்டத்திருத்தம் 1978

question 4

அவசர காலங்களை நீட்டிப்பு செய்யலாமா? அவ்வாறு செய்ய வேண்டும் என்றால் யாருடைய ஒப்புதல் தேவை?

  • Option 1: நீட்டிப்பு செய்ய இயலாது
  • Option 2: நீட்டிப்பு செய்யலாம் அவ்வாறு செய்ய வேண்டுமெனில் பாராளுமன்றத்தின் அனுமதி தேவை
  • Option 3: நீட்டிப்பு செய்யலாம் அவ்வாறு செய்ய வேண்டுமெனில் பிரதமரின் அனுமதி தேவை
  • Option 4: நீட்டிப்பு செய்யலாம் அவ்வாறு செய்ய வேண்டுமெனில் குடியரசுத் தலைவரின் அனுமதி தேவை

answer

நீட்டிப்பு செய்யலாம் அவ்வாறு செய்ய வேண்டுமெனில் பாராளுமன்றத்தின் அனுமதி தேவை

question 5

அவசர காலங்களில் மாநில பட்டியலில் உள்ள சட்டங்களை மத்திய அரசு திருத்தலாமா?

  • Option 1: திருத்த முடியாது
  • Option 2: திருத்தலாம்
  • Option 3: சில மாநிலங்களில் மட்டும் திருத்தலாம்
  • Option 4: நிச்சயம் இல்லை

answer

திருத்தலாம்

question 6

சட்டப்பிரிவு 358 இல் கூறப்பட்டுள்ளது யாது?

  • Option 1: சட்டப்பிரிவு 358 இன் படி அவசரகாலம் அறிவிக்கப்பட்டால் சட்டப்பிரிவு 18 இல் உள்ள அனைத்து அடிப்படை உரிமைகளும் முடக்கப்படும்
  • Option 2: சட்டப்பிரிவு 358 இன் படி அவசரகாலம் அறிவிக்கப்பட்டால் சட்டப்பிரிவு 19 இல் உள்ள அனைத்து அடிப்படை உரிமைகளும் முடக்கப்படும்
  • Option 3: சட்டப்பிரிவு 358 இன் படி அவசரகாலம் அறிவிக்கப்பட்டால் சட்டப்பிரிவு 20 இல் உள்ள அனைத்து அடிப்படை உரிமைகளும் முடக்கப்படும்
  • Option 4: சட்டப்பிரிவு 358 இன் படி அவசரகாலம் அறிவிக்கப்பட்டால் சட்டப்பிரிவு 21 இல் உள்ள அனைத்து அடிப்படை உரிமைகளும் முடக்கப்படும்

answer

சட்டப்பிரிவு 358 இன் படி அவசரகாலம் அறிவிக்கப்பட்டால் சட்டப்பிரிவு 19 இல் உள்ள அனைத்து அடிப்படை உரிமைகளும் முடக்கப்படும்

question 7

அவசர காலங்களில் குடியரசுத் தலைவராலும் மறுக்கமுடியாத அடிப்படை சட்டங்கள் யாவை?

  • Option 1: சட்ட பிரிவு 20 மற்றும் 21
  • Option 2: சட்ட பிரிவு 18 மற்றும் 19
  • Option 3: சட்ட பிரிவு 16 மற்றும் 17
  • Option 4: சட்ட பிரிவு 14 மற்றும் 15

answer

சட்ட பிரிவு 20 மற்றும் 21

question 8

சட்டப்பிரிவு 358 இருக்கும் 359 இருக்கும் இடையே உள்ள வித்தியாசத்தை கூறுக?

  • Option 1: எந்த ஒரு வித்தியாசமும் இல்லை
  • Option 2: இரண்டுமே 
  • Option 3: சட்டப்பிரிவு 358 இன் படி சட்டப்பிரிவு 19 உள்ள அனைத்து அடிப்படை உரிமைகளும் முடக்கப்படும் ஆனால் சட்டப்பிரிவு 359 இன்படி சட்டப்பிரிவு 20 மற்றும் 21 தவிர அனைத்து அடிப்படை உரிமைகளும் முடக்கப்படலாம்
  • Option 4: சட்டப்பிரிவு 358 இன் படி, நாடு முழுவதும் சட்டப்பிரிவு 19 இன் படி கொடுக்கப்படும் உரிமைகள் மறுக்கப்படும் ஆனால் சட்டப்பிரிவு 359 இன்படி முழு நாட்டிற்கோ அல்லது ஒரு குறிப்பிட்ட பகுதி கோ அவசர காலங்களை கொண்டுவரலாம்

answer

இரண்டுமே 

question 9

முதல் முதலில் எப்பொழுது அவசர காலம் கொண்டுவரப்பட்டது? அது எத்தனை காலங்கள் நீட்டிக்கப்பட்டது?

  • Option 1: 26 அக்டோபர் 1962 to 10 ஜனவரி1968
  • Option 2: 26 அக்டோபர் 1962 to 10 ஜனவரி1966
  • Option 3: 26 அக்டோபர் 1964 to 10 ஜனவரி1968
  • Option 4: 26 அக்டோபர் 1966 to 10 ஜனவரி1972

answer

26 அக்டோபர் 1962 to 10 ஜனவரி1968

question 10

நிதி அவசர காலத்தில் அதை எதிர்த்து நீதிமன்றத்தில் கேள்வி கேட்க முடியுமா?

  • Option 1: முடியாது
  • Option 2: முடியும்
  • Option 3: நிச்சயமில்லை
  • Option 4: அது சூழ்நிலைக்கு ஏற்ப மாற தக்கது

answer

முடியும்

நம் இந்திய அரசியல் அமைப்பில் பாராளுமன்ற முறை சம்பந்தமான ஒரு சில முக்கிய கேள்விகள் இங்கு தரப்பட்டுள்ளது. முயற்சி செய்து பாருங்கள் வாழ்த்துக்கள்!
Next: Parliamentary system part 1
Would you like to read similar lesson? Please go to polity lessons

Leave a Reply


Please send your report

latest lessons

{{message}}