
TAMIL TUTOR இணையத்தில் ஒரு
கல்வி பாசறை
TAMIL TUTOR இணையத்தில் ஒரு
கல்வி பாசறை
சமூக முன்னேற்றத்தை கருத்தில் கொண்டு அரசியலமைப்பில் இணைக்கப்பட்ட பகுதிதான் அரசுக்கு வழிகாட்டும் நெறிமுறைகள். அரசாங்கங்கள் புதிய கொள்கைகளை வகுக்கும்போது மனதில் வைத்துக்கொள்ள வேண்டிய முக்கிய அம்சங்களை இந்த பகுதி குறிப்பிடுகின்றது. பெரும்பாலான சமூக சீர்திருத்த சட்டங்கள் இந்தப் பகுதியின் குறிப்பிடப்பட்டுள்ள சட்டவிதிகளை பின்பற்றியே உருவாக்கப்பட்டுள்ளன. சமூகநல சட்டங்கள் ஏற்றுவதற்கு தேவையான அறிவுரைகளை இந்தப்பகுதி வழங்குவதால், இதில் உள்ள விதிகள் வழிகாட்டும் நெறிமுறைகள் என்று அழைக்கப்படுகின்றன. கடந்தகால தேர்வுத் தாள்களை எடுத்துப்பார்த்தால் TNPSC, UPSC போன்ற தேர்வுகளில் அரசுக்கு வழிகாட்டும் நெறிமுறை கோட்பாடுகள் பாடத்திலிருந்து அதிக கேள்விகள் கேட்கப் பட்டிருப்பதை காணமுடிகிறது. கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை கிளிக் செய்து இந்த பாடத்தில் நீங்கள் படித்ததை பயிற்சி செய்து பாருங்கள். 10 minutes quiz on directive principles of State policy for TNPSC GROUP I, II, IV. SSC, RRB, UPSC. practice quiz for dpsp in tamil. learn by practice. Go to quiz
அடிப்படை உரிமைகளைப் போல அரசு வழிகாட்டும் நெறிமுறைகள் நீதிமன்றத்தால் உறுதிப் படுத்தப் படாமல் இருப்பதற்கான காரணம் யாது
�
புத்தாண்டு நாளில் எடுத்துக்கொள்ளப்பட்ட உறுதிமொழிகள் இரண்டாவது நாளே முறிந்து போவதை போன்றவைதான் அரசு வழிகாட்டும் நெறிமுறைகள் என்று கூறியவர் யார்?
�
அரசு வழிகாட்டு நெறிமுறைகள் முறையாக வகைப்படுத்தப்பட்டு அறிவுபூர்வமாக தொகுக்கப்படவில்லை என்ற விமர்சனத்தை முன் வைப்பவர் யார்?
�
அரசு வழிகாட்டும் நெறிமுறைகள் மீதான ஐவர் ஜெண்ணிங்ஸ் அவர்களின் விமர்சனம் என்ன?
�
அரசுக்கு வழிகாட்டும் நெறிமுறைகளில் கூறப்பட்டுள்ள கொள்கைகள் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட்டால் பூமியில் ஒரு சொர்க்கமாக நமது தேசம் விளங்கும் என்ற கருத்தை கூறியவர் யார்?
�
தனது எந்த அடிப்படை உரிமை பாதிக்கப்படுவதாக திருமதி சம்பகம் துரைராஜன் உச்ச நீதிமன்றத்தை நாடினார்? மற்றும் அவருக்கு கிடைத்த தீர்ப்பு என்ன?
�
அடிப்படை உரிமைகள் புனித தன்மை வாய்ந்தவை. அரசு வழிகாட்டும் நெறிமுறைகளை நடைமுறைப் படுத்துவதற்காக அடிப்படை உரிமைகளில் திருத்தம் செய்ய முடியாது என்று எந்த வழக்கின் தீர்ப்பில் உச்ச நீதிமன்றம் தெரிவித்திருந்தது?
�
அரசியலமைப்பு சட்டப்பிரிவு 39b வில் அடிப்படையில் கொண்டுவரும் சட்டங்களை அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது என்று கூற முடியாது. மேலும், இது நீதிமன்றத்தின் ஆய்வுக்கு அப்பாற்பட்டது என்று கூறும் சட்டப்பிரிவு எந்த சட்டத் திருத்தத்தின்படி கொண்டு வரப்பட்டது?
2
தனிநபர் நலனை மேம்படுத்தும் நோக்கத்தைக் கொண்ட அரசியலமைப்பு பகுதி மூன்றா நான்கா?
�
மினர்வா மில்ஸ் வழக்கின் தீர்ப்பு என்று வழங்கப்பட்டது?
1
இந்திய அரசியலமைப்பில் இக்கட்டான சூழ்நிலைகளை கையாள்வதற்கு கொண்டுவரப்படும் அவசரகால சட்டங்கள் பற்றி ஒரு சில முக்கிய கேள்விகள் இங்கு தரப்பட்டுள்ளது. முயற்சி செய்து பாருங்கள் வாழ்த்துக்கள்!
Next: emergency provisions part 1
Would you like to read similar lesson? Please go to polity lessons