tamiltutor

TAMIL TUTOR இணையத்தில் ஒரு
கல்வி பாசறை

தன்னுடைய திறமையை பயன்படுத்துவதில் மகிழ்ச்சி காணாதவன், என்றுமே மகிழ்ச்சி காணமாட்டான்! -- கதே

State Reorganisation part 3

ஏறத்தாள 550 சிற்றரசுகளாக பிரிந்து கிடந்த இந்தியாவை ஒன்றிணைப்பதற்கு எத்தனை சிரமப்பட வேண்டி இருந்ததோ, அதே அளவிற்கு இந்தியாவை பல்வேறு மாநிலங்களாக பிரிப்பதற்கும் பல்வேறு கட்டங்களை கடக்க வேண்டியிருந்தது. மொழிவாரியாக மாநிலங்களை பிரிக்க வேண்டும் என்று மக்கள் ஒரு புறம் போராட்டம் நடத்தினர். மறுபுறம், மொழிவாரியாக மாநிலங்களை பிரித்தால் அது தேசப் பிரிவினைக்கு வழிவகுக்கலாம் என்று ஆட்சியாளர்கள் அஞ்சினர். எனவே, மாநில எல்லைகளை மறு சீரமைப்பது குறித்து ஆய்வு செய்ய பல குழுக்களை இந்திய அரசாங்கம் உருவாக்கியது. இறுதியில் மக்களின் விருப்பப்படி மொழிவாரி மாநிலங்கள் உருவாக்கப்பட்டன. இது தொடர்பான கேள்விகள் அவ்வப்போது போட்டித் தேர்வுகளில் கேட்கப்படுவது உண்டு. எனவே கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை பயன்படுத்தி உங்களது பயிற்சியின் திறனை அதிகரித்துக் கொள்ளுங்கள். உங்களின் கருத்துக்கள் மற்றும் பரிந்துரைகளை எங்களுக்கு நீங்கள் தாராளமாக அனுப்பலாம். மேலும், இந்த பயிற்சி தேர்வை உங்கள் நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள மறக்காதீர்கள். 10 minutes practice test for TNPSC, UPSC, SSC, TRB, TET, RRB. Go to quiz

Go to quiz

question 1

கன்னியாகுமரி தினம் என்பது எந்த நாள்?

 • Option A: 1 நவம்பர்
 • Option B: 2 நவம்பர்
 • Option C: 1 டிசம்பர்
 • Option D: 19 நவம்பர்

answer

1 நவம்பர்

question 2

கன்னியாகுமரியை தமிழ்நாட்டோடு இணைப்பதற்காக நடைபெற்ற தெற்கெல்லை போராட்டத்திற்கு தலைமை தாங்கியவர் யார்?

 • Option A: மா பொ சிவஞானம்
 • Option B: மார்ஷல் நேசமணி
 • Option C: t பிரகாசம்
 • Option D: கூ சிவஞானம்

answer

மார்ஷல் நேசமணி

question 3

98 ஆவது சட்டத்திருத்தம் எதற்காக கொண்டு வரப்பட்டது?

 • Option A: மிசோரம் யூனியன் பிரதேசமாக அறிவிக்க படுதல்
 • Option B: அண்டை நாடுகளுக்கு இந்திய நிலப் பகிர்வு
 • Option C: ஹைதராபாத் பழங்குடியினருக்கான இட ஒதுக்கீடு சட்டம்
 • Option D: கல்யாண் கர்நாடகா வுக்கான சிறப்பு அந்தஸ்து தருவதற்காக

answer

கல்யாண் கர்நாடகா வுக்கான சிறப்பு அந்தஸ்து தருவதற்காக

ஆங்கிலத்தில் புலமை வேண்டுமா?

அவ்வாறென்றால், பழைய கற்றல் முறையை கைவிட்டு, புதுமையான எளிய விதிமுறைகளைக் கொண்ட இந்த, புதிய வகுப்பில் இப்பொழுதே சேருங்கள்.

இந்த வகுப்பை பற்றி மேலும் அறிந்து கொள்ள, கீழே உள்ள தொலைபேசி எண்களுக்கு, தயங்காமல் தொடர்பு கொள்ளுங்கள்.

 • VIGNESH 6383073556 /
 • VENKATESH 9360662257

 • அல்லது இங்கு முன்பதிவு செய்து, டெமோ வகுப்புகளை பாருங்கள்.
  Banner of abacus of English

  question 4

  மும்பை மாகாணம் எந்த ஆண்டு குஜராத் மற்றும் மகாராஷ்டிரா என்ற இரண்டு மாநிலங்களாக பிரிக்கப்பட்டது?

  • Option A: 1963
  • Option B: 1962
  • Option C: 1960
  • Option D: 1970

  answer

  1960

  question 5

  போர்ச்சுக்கீசிய பகுதியாக இருந்த கோவா மீது இந்தியா எந்த ஆண்டு ராணுவ நடவடிக்கை மேற்கொண்டு இணைத்துக்கொண்டது?

  • Option A: 1960
  • Option B: 1962
  • Option C: 1961
  • Option D: 1975

  answer

  1961

  question 6

  14 ஆவது சட்ட திருத்தத்தின்படி இந்தியாவோடு இணைக்கப்பட்ட பகுதி எது

  • Option A: பாண்டிச்சேரி
  • Option B: கோவா
  • Option C: தாத்ரா நகர் ஹவேலி
  • Option D: மிசோரம்

  answer

  பாண்டிச்சேரி

  question 7

  இந்தியாவில் 16 ஆவது மாநிலமாக உருவானது எது?

  • Option A: நாகாலாந்து
  • Option B: ராஜஸ்தான்
  • Option C: மணிப்பூர்
  • Option D: அசாம்

  answer

  நாகாலாந்து

  question 8

  இரண்டு மாநிலங்களுக்கு தலைநகராகவும் ஒரு யூனியன் பிரதேசமாகவும் உள்ள பகுதி எது?

  • Option A: ஆந்திரா
  • Option B: சட்டீஷ்கர்
  • Option C: காஷ்மீர்
  • Option D: சண்டிகர்

  answer

  சண்டிகர்

  question 9

  யூனியன் பிரதேசமாக இருந்து மாநிலமாக மாற்றப்பட்ட முதல் பகுதி எது?

  • Option A: மணிப்பூர்
  • Option B: இமாச்சலப் பிரதேஷ்
  • Option C: அசாம்
  • Option D: அருணாச்சல் பிரதேஷ்

  answer

  இமாச்சலப் பிரதேஷ்

  question 10

  எந்த சட்ட திருத்தத்தின்படி டெல்லி தலைநகரப் பிரதேசம் ஆக அறிவிக்கப்பட்டது?

  • Option A: 70 ஆவது சட்டத் திருத்தம்
  • Option B: 69 ஆவது சட்டத்திருத்தம்
  • Option C: 91 ஆவது சட்டத் திருத்தம்
  • Option D: 90 ஆவது சட்டத் திருத்தம்

  answer

  69 ஆவது சட்டத்திருத்தம்

  You can practice this lesson
  here
  Would you like to read similar lesson? Please go to polity lessons

  Leave a Reply


  Please send your report

  latest lessons

  {{message}}