
TAMIL TUTOR இணையத்தில் ஒரு
கல்வி பாசறை
TAMIL TUTOR இணையத்தில் ஒரு
கல்வி பாசறை
From text book: காலனியாதிக்கம் என்பது ஒரு மற்றொரு நாட்டை அடிமை படுத்தி மேலாதிக்கம் செய்வதாகும். காலனியாதிக்கத்தைப் போல் ஏகாதிபத்தியமும் தன்னைச் சார்ந்திருக்கும் பகுதியின் அரசியலையும் பொருளாதாரத்தையும் கட்டுப்படுத்துவதாகும். ஸ்டான்போர்டு தத்துவக் கலைக்களஞ்சியம் இவ்விரண்டையும் பின்வருமாறு வேறுபடுத்துகிறது:காலனி என்னும் சொல் 'கலோனஸ்' என்னும் லத்தீன் வேர்ச்சொல்லிலிருந்து பிறந்ததாகும். இதன் பொருள் விவசாயி என்பதாகும். காலனியாதிக்கம் என்பது மக்களை ஒரு புதிய இடத்தில் குடியேற்றுவது. குடியேறியவர்கள் அங்கேயே நிரந்தரமாகத் தங்கி வாழ்வர். ஆனால் சொந்த நாட்டின் மீதே அரசியல் விசுவாசம் கொண்டிருப்பர் என்பதை இவ்வேர்ச்சொல் சுட்டுகிறது. மாறாக ஏகாதிபத்தியம் (இம்பீரியம் என்னும் லத்தீன் சொல்லிலிருந்து பிறந்தது. ஆதிக்கம் செய்தல் என்று பொருள்) என்பது ஒரு நாடு, குடியேறுதல் மூலமாகவோ இறையாண்மை செலுத்துதல் மூலமாகவோ மறைமுகமாகக் கட்டுப்படுத்தும் வழிகளிலோ வேறொரு நாட்டின் மீது அதிகாரம் செலுத்துவதைக் குறிக்கும். உலக வரலாற்றில், நவீன ஐரோப்பாவைப் போல வேறு எந்தக் கண்டமும் பல காலனிகளைப் பெற்றிருந்ததில்லை; அவ்வாறு உலகின் பகுதிகளுக்குச் செல்ல முடிந்ததை நாகரிகத்தைப் பரப்பும் செயல் என நியாயப்படுத்தியதுமில்லை. நடைமுறையில் மேலைநாடுகள் அல்லாத உலகம் முழுவதும் ஏதேனும் ஓர் ஐரோப்பிய சக்தியின் கீழ் நான்கு நூற்றாண்டுகள் இருந்துள்ளன. இரண்டாவது உலகப் போருக்குப் பின் காலனியாதிக்கம் நீக்கப்படும் வரை இந்தநிலை நீடித்துள்ளது.
பிரான்ஸிஸ் லைட் _______ பற்றி ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கம்பெனியின் கவனத்திற்குக் கொண்டுவந்தார்.
1896 இல் _______ நாடுகள் ஒருங்கிணைக்கப்பட்டு மலாய் ஐக்கிய நாடுகள் உருவாக்கப்பட்டது.