tamiltutor

TAMIL TUTOR இணையத்தில் ஒரு
கல்வி பாசறை

நீங்கள் உறங்கும் போது வருவது அல்ல கனவு, உங்களை உறங்க விடாமல் செய்வதே கனவு. -- அப்துல் கலாம்

Social science 9th புவியியல் அலகு 2 - நிலக்கோளம் – II - புவிப் புறச்செயல்பாடுகள்

From text book: புவியின் அக மற்றும் புறச்செயல்பாடுகளால் புவி பல்வேறு மாறுதல்களுக்கு உள்ளாகிறது. இவ்விரு தொடர்ச்சியான செயல்பாடுகள், புவியின் நிலத்தோற்றத்தை வடிவமைக்கின்றன. புறச்செயல்பாடுகள் சூரிய சக்தி மற்றும் புவியீர்ப்பு விசையாலும் அகச்செயல்பாடுகள் புவியின் உட்புற வெப்பத்தாலும் இயக்கப்படுகின்றன.

Go to quiz

question 1

பாறைகளின் சிதைவுறுதலும் அழிதலும் _______ என்று அழைக்கப்படுகிறது.

  • Option 1: வானிலைச் சிதைவு
  • Option 2: அரித்தல்
  • Option 3: கடத்துதல்
  • Option 4: படியவைத்தல்
  • Answer: வானிலைச் சிதைவு

answer

question 2

இயற்கைக் காரணிகளால் நிலம் சமப்படுத்தப்படுதலை _______ என்று அழைக்கின்றோம்.

  • Option 1: படிவுகளால் நிரப்படுதல்
  • Option 2: அரிப்பினால் சமப்படுத்துதல்
  • Option 3: நிலத்தோற்ற வாட்டம் அமைத்தல்
  • Option 4: ஏதுமில்லை
  • Answer: நிலத்தோற்ற வாட்டம் அமைத்தல்

answer

question 3

_______ ஆற்றின் மூப்பு நிலையில் உருவாகும் நிலத்தோற்றம் ஆகும்.

  • Option 1: துள்ளல்
  • Option 2: வண்டல் விசிறி
  • Option 3: டெல்டா
  • Option 4: மலை இடுக்கு
  • Answer: டெல்டா

answer

question 4

சுண்ணாம்புப் பாறை நிலத்தோற்றங்கள் உருவாவதற்கு காரணம் _______

  • Option 1: பனியாறு
  • Option 2: காற்று
  • Option 3: கடல் அலைகள்
  • Option 4: நிலத்தடி நீர்
  • Answer: நிலத்தடி நீர்

answer

question 5

கீழே கொடுக்கப்பட்டுள்ள நிலத்தோற்றங்களில் எது பனியாறுகளின் படியவைத்தலால் உருவாக்கப்படவில்லை.

  • Option 1: சர்க்
  • Option 2: மொரைன்
  • Option 3: டிரம்லின்
  • Option 4: எஸ்கர்
  • Answer: சர்க்

answer

question 6

காற்றின் படியவைத்தலால் உருவாக்கப்படும் மென்படிவுகளைக் கொண்ட நிலத்தோற்றம் _______ ஆகும்.

  • Option 1: காற்றடி வண்டல்
  • Option 2: பர்கான்
  • Option 3: வரமாடா
  • Option 4: மணல் சிற்றலைகள்
  • Answer: காற்றடி வண்டல்

answer

question 7

கடல் தூண்கள் உருவாவதற்குக் காரணம் _______

  • Option 1: கடல் அலை அரித்தல்
  • Option 2: ஆற்று நீர் அரித்தல்
  • Option 3: பனியாறு அரித்தல்
  • Option 4: காற்றின் படியவைத்தல்
  • Answer: கடல் அலை அரித்தல்

answer

question 8

_______ ன் அரித்தல் செய்கையினால் சர்க்குகள் உருவாக்கப்படுகின்றன.

  • Option 1: காற்று
  • Option 2: பனியாறு
  • Option 3: ஆறு
  • Option 4: நிலத்தடி நீர்
  • Answer: பனியாறு

answer

question 9

1. “I” வடிவ பள்ளத்தாக்கு ஆறுகளின் அரித்தல் செயலால் உருவாகிறது. 2. “U” வடிவ பள்ளத்தாக்கு பனியாறுகளின் அரித்தல் செயலால் உருவாகிறது. 3. “V” வடிவ பள்ளத்தாக்கு பனியாறுகளின் அரித்தல் செயலால் உருவாகிறது.

  • Option 1: 1, 2 மற்றும் 3 ம் சரி
  • Option 2: 1,2 சரி
  • Option 3: 1 மற்றும் 3 ம் சரி
  • Option 4: 2 மட்டும் சரி
  • Answer: 1,2 சரி

answer

question 10

கூற்று I: ஆறுகள் சமன்படுத்துதலின் முக்கிய காரணியாகும். கூற்று II: ஆறுகள் ஓடும் சரிவுகளை பொருத்து அதன் செயல்பாடு இருக்கும்

  • Option 1: வாக்கியம் I தவறு II சரி
  • Option 2: வாக்கியம் I மற்றும் II தவறு
  • Option 3: வாக்கியம் I சரி வாக்கியம் II தவறு
  • Option 4: வாக்கியம் I மற்றும் II சரி
  • Answer: வாக்கியம் I மற்றும் II சரி

answer

question 11

கூற்று: சுண்ணாம்பு பாறை பகுதிகளில் நிலத்தடி நீர் குறைவாக இருக்கும் காரணம்: நீர் சுண்ணாம்பு பாறையில் உட்புகாது

  • Option 1: கூற்று சரி, காரணம் தவறு
  • Option 2: கூற்று தவறு. காரணம் சரி
  • Option 3: கூற்று மற்றும் காரணம் தவறு
  • Option 4: கூற்று மற்றும் காரணம் சரி
  • Answer: கூற்று சரி, காரணம் தவறு

answer

9 ஆம் வகுப்பு புவியியல் அலகு 3 பாடத்திளிருந்து வினா விடைகள் இங்கு தரப்பட்டுள்ளன. இந்த பாடத்தில் உள்ள (கோடிட்ட இடங்களை நிறப்பும்) வினாக்களும் (சரியான விடையைத் தேர்ந்தெடுக்கும்) வினாக்களாக மாற்றப்பட்டு சரியான விடைகளும் தரப்பட்டுள்ளன. இந்த பயிற்சி தொடர்பான வேறு ஏதேனும் கருத்துக்கள் இருந்தால் எங்களுக்கு அவற்றை அனுப்பிவைக்கவும்.
Next: Social science 9th புவியியல் அலகு 3 - வளிமண்டலம்
Would you like to read similar lesson? Please go to School books lessons

Leave a Reply


Please send your report

latest lessons

{{message}}