
TAMIL TUTOR இணையத்தில் ஒரு
கல்வி பாசறை
TAMIL TUTOR இணையத்தில் ஒரு
கல்வி பாசறை
From text book: பதினெட்டாம் நூற்றாண்டில் நடைபெற்ற மூன்று மாபெரும் புரட்சிகள் மேலைச் சமூகத்தில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தின. அமெரிக்கப் புரட்சி, பிரெஞ்சுப் புரட்சி, தொழிற்புரட்சி ஆகியனவாகும். இவற்றுள் அமெரிக்கப் புரட்சியே முதல் அரசியல் புரட்சியாகும். ஐரோப்பாவின் சமூக அடித்தளத்தை ஆட்டங்காண வைத்த பிரெஞ்சுப் புரட்சியைப் போன்று இது இல்லாவிட்டாலும் அமெரிக்கப் புரட்சி ஏற்படுத்திய அரசியல் மாற்றங்கள் இருபதாம் நூற்றாண்டில் ஆசிய ஆப்பிரிக்க நாடுகளின் காலனியாதிக்க எதிர்ப்புப் போராட்டங்களுக்கு உந்துசக்தியாகத் திகழ்ந்தது. “சுதந்திரப் பிரகடனத்தை” எழுதிய தாமஸ் ஜெபர்சன் 1776 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் கூட ‘ஆங்கிலேய முடியாட்சியிலிருந்து தனித்துச் செல்லும் விருப்பமோ ஆர்வமோ அமெரிக்கர்களுக்கில்லை' என உறுதிபடக் கூறினார். அதே ஜெபர்சன் 1776 ஆம் ஆண்டு ஜூலையில் தனது “சுதந்திரப் பிரகடனத்தை" 13 குடியேற்ற நாடுகள் பங்கேற்ற, 'கண்டங்களின் மாநாட்டில்’, “மனிதர்கள் அனைவரும் சமமாகவே படைக்கப்பட்டுள்ளார்கள்” என உறுதிப்பாட்டுடன் ஏற்கச் செய்தார். அரசர்களுக்கும் பிரபுக்களுக்குமான மரியாதை, உலகம் தழுவியதாக இருந்த அக்காலச் சூழலில் இவருடைய கூற்று புரட்சிகரமானதாக இருந்தது. இப்பாடத்தில் அமெரிக்காவில் ஆங்கிலக் குடியேற்றங்கள் நிறுவப்பட்டதும் இங்கிலாந்துக்கு எதிரான அக்குடியேற்ற நாடுகளின் கிளர்ச்சியும் எடுத்துரைக்கப்பட்டுள்ளன.
அமெரிக்காவில் ஏற்படுத்தப்பட்ட ஆங்கிலேய காலனி _______ ஆகும்
பிரஞ்சுப் புரட்சியின் முன்னோடியாக, வாஷிங்டனுடன் கூட்டுச் சேர்ந்து ஆங்கிலேயருக்கு எதிராக போராடியவர் _______.
லஃபாயட் தாமஸ் ஜெபர்சன், மிரபு ஆகியோர் _______ எழுதினர்.
_______ இல்ஆங்கிலேயரின் தோல்வி பிரான்சிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான நட்புக்கு வழிவகுத்தது.
பிரான்சில் அரச சர்வாதிகாரத்தின் சின்னமாக _______ இருந்தது.
ஆஸ்திரியா மற்றும் பிரஷ்யாவின் படைகள், பிரெஞ்சுப் புரட்சியாளர் படைகளால் _______ போர்க்களத்தில் தோற்கடிக்கப்பட்டன.
'கான்டீட்’என்ற நூல் _______ ஆல் எழுதப்பட்டது.
பதினாறாம் லூயியின் கீழ்க் குறைந்தபட்ச அதிகாரங்களைக் கொண்ட முடியாட்சியைத் தக்கவைத்துக்கொள்ள விரும்பிய மிதவாத தாராளவாதிகள் _______
_______ ஆம் ஆண்டில் பாரிஸ் உடன்படிக்கையின்படி அமெரிக்க சுதந்திரப் அமைதி போர் முடிவுக்கு வந்தது.
தாமஸ் பெயின் எழுதிய புகழ்வாய்ந்த நூல் _______ ஆகும்.
இரண்டாம் கண்டங்கள் மாநாட்டால் அஞ்சல்துறை தலைமை அதிகாரியாக நியமிக்கப்பட்டவர் _______.
�
பங்கர் குன்றுப் போர் நடைபெற்ற ஆண்டு _______.
_______ சட்டம் கடனைத் தங்கமாகவும் வெள்ளியாகவும் திரும்பச் செலுத்த வற்புறுத்தியது.
�
பிரான்சின் தேசியச் சட்டமன்றத்தின் தலைவர் _______ ஆவார்.
சுதந்திரத்திற்கும் பகுத்தறிவிற்கும் பெரும்விழா நடத்தியதால் _______ கில்லட்டினால் கொல்லப்பட்டார்.
�
பதினாறாம் லூயி பிரான்சை விட்டு தப்பியோட முயன்றபோது _______ நகரில் அவர் தனது குடும்பத்துடன் கைது செய்யப்பட்டார்.
�
1. கடலாய்வுப்பயணங்களைமேற்கொண்டதில் போர்த்துகீசியர் முன்னோடியாவர் 2. பென் என்ற குவேக்கரால் புதிய பிளைமவுத் பெயரிடப்பட்டது 3. குவேக்கர்கள் போருக்கு ஆதரவாக இருந்தமைக்கு நற்பெயர் பெற்றனர் 4. ஆங்கிலேயர்கள் நியூ ஆம்ஸ்டர்டாமை நியூயார்க் என பெயர் மாற்றம் செய்தனர்
1. அமெரிக்க விடுதலைப் போர் இங்கிலாந்துடன் செய்யப்பட்ட போராக மட்டுமல்லாது உள்நாட்டுப் போராகவும் அமைந்தது. 2. ஆங்கிலேயப் படைகள் யார்க்டவுனில் வெற்றிபெற்றன 3. வளர்ந்துவரும் நடுத்தர வர்க்கத்தினரைப் பிரெஞ்சு பிரபுக்கள் ஆதரித்தனர். 4. ஆங்கிலேய நாடாளுமன்றம் காகிதத்தின் மீதான வரி நீங்கலாக ஏனைய பொருட்களின் மீதான டவுன்ஷெண்ட் சட்டங்களை ரத்து செய்தது
கூற்று (கூ): ஆங்கிலேயப் பொருட்களைப் பாஸ்டன் வணிகர்கள் புறக்கணித்தனர். காரணம் (கா): ஆங்கிலேய நிதி அமைச்சர், அமெரிக்க காலனிகளில் இறக்குமதி செய்யப்பட்ட பொருட்கள் மீது புதிய வரி அறிமுகப்படுத்தினார்
கூற்று (கூ): கட்டாய இராணுவச் சேவைக்கு எதிராக வெண்டி என்னுமிடத்தில் விவசாயிகள் ஒரு பெரும்புரட்சி செய்தனர். காரணம் (கா): அரசரின் ஆதரவாளர்கள் விவசாயிகள் அவருக்கெதிராகப் போரிட விரும்பவில்லை.
9 ஆம் வகுப்பு 8 ஆவது பாடத்திளிருந்து வினா விடைகள் இங்கு தரப்பட்டுள்ளன. இந்த பாடத்தில் உள்ள (கோடிட்ட இடங்களை நிறப்பும்) வினாக்களும் (சரியான விடையைத் தேர்ந்தெடுக்கும்) வினாக்களாக மாற்றப்பட்டு சரியான விடைகளும் தரப்பட்டுள்ளன. இந்த பயிற்சி தொடர்பான வேறு ஏதேனும் கருத்துக்கள் இருந்தால் எங்களுக்கு அவற்றை அனுப்பிவைக்கவும்.
Next: Social Science class 9th வரலாறு அலகு 8 நவீன யுகத்தின் தொடக்கம்
Would you like to read similar lesson? Please go to School books lessons