tamiltutor

TAMIL TUTOR இணையத்தில் ஒரு
கல்வி பாசறை

நீங்கள் உறங்கும் போது வருவது அல்ல கனவு, உங்களை உறங்க விடாமல் செய்வதே கனவு. -- அப்துல் கலாம்

Social Science class 9th வரலாறு அலகு 8 நவீன யுகத்தின் தொடக்கம்

From text book: பதினான்காம், பதினைந்தாம் நூற்றாண்டுகளில், மேற்கத்திய ஐரோப்பா, அரசியல், சமூக, பண்பாடு, மதம் மற்றும் பொருளாதாரக் களங்களில் எதிர்பாராத மாற்றங்களுக்கு உள்ளானது. நவீன சகாப்தத்தின் வைகறையைப் பறைசாற்றி அறிவித்தவையாக இத்தாலிய மனிதநேயரான பெட்ராக்கின் நூலான கான்ஸோனியர், ஜெர்மன் இறையியலாளர் மார்ட்டின் லூதரின் ‘தொண்ணூற்றைந்து குறிப்புகள்’ மற்றும் போர்ச்சுகல் இளவரசரான ஹென்றியின் கடற்பயணப்பள்ளி போன்றவை நவீன சகாப்தத்தை முன்னறிவிப்பு செய்தன. புனித ரோமானியப் பேரரசும், கத்தோலிக்கத்திருச்சபையும் பலவீனமடைந்து அவப்பெயருக்கு ஆளாகியிருந்தன. அவற்றின் இடத்தில் தனிநபரின் நம்பிக்கைக்கு முக்கியத்துவம் தரும் புதிய திருச்சபைகளும், தேசிய அரசுகளும், வர்த்தகத் திறன்களின் அடிப்படையில் அமைந்த ஒரு வணிகப் புரட்சியும் தோன்றின. சிந்தனையின் சுதந்திரம், தனிநபர்வாதம், பகுத்தறிவுவாதம் மற்றும் பொருளாதார, அறிவியல் சார்ந்த முன்னேற்றம் ஆகிய பண்புகளால் நவீனயுகம் அடையாளப்படுத்தப்பட்டது. மறுமலர்ச்சி, மதச்சீர்திருத்தம் மற்றும் புவியியல் ரீதியான கண்டுபிடிப்புகளால் உண்டான மாற்றங்களைப் பற்றி இப்பாடத்தில் காண்போம்.

Go to quiz

question 1

கீழ்க்கண்டவர்களில் யார் மனித நேயத்தின் தந்தை என்று அழைக்கப்படுகிறார்?

 • Option 1: லியானார்டோ டாவின்சி
 • Option 2: பெட்ரார்க்
 • Option 3: ஏராஸ்மஸ்
 • Option 4: தாமஸ் மூர்
 • Answer: பெட்ரார்க்

answer

question 2

‘ஸ்கூல் ஆஃப் ஏதென்ஸ்’ என்ற ஓவியத்தை வரைந்தவர்.

 • Option 1: ரஃபேல்
 • Option 2: மைக்கேல் ஆஞ்சலோ
 • Option 3: அல்புருட் டியரர்
 • Option 4: லியானார்டோ டாவின்சி
 • Answer: ரஃபேல்

answer

question 3

வில்லியம் ஹார்வி _______ கண்டுபிடித்தார்.

 • Option 1: சூரியனே பிரபஞ்சத்தின் மையம்
 • Option 2: பூமியே பிரபஞ்சத்தின் மையம்
 • Option 3: புவியீர்ப்பு விசை
 • Option 4: இரத்தத்தின் சுழற்சி
 • Answer: இரத்தத்தின் சுழற்சி

answer

question 4

“தொண்ணூற்றைந்து கொள்கைகள்" களை எழுதியவர் யார்?

 • Option 1: மார்ட்டின் லூதர்
 • Option 2: ஸ்விங்லி
 • Option 3: ஜான் கால்வின்
 • Option 4: தாமஸ்மூர்
 • Answer: மார்ட்டின் லூதர்

answer

question 5

‘கிறிஸ்தவ மதத்தின் நிறுவனங்கள்’ என்ற நூலை எழுதியவர் _______

 • Option 1: மார்ட்டின் லூதர்
 • Option 2: ஸ்விங்லி
 • Option 3: ஜான் கால்வின்
 • Option 4: செர்வாண்டிஸ்
 • Answer: ஜான் கால்வின்

answer

question 6

பூமத்திய ரேகையை கடந்த முதல் மாலுமி யார்?

 • Option 1: மாலுமி ஹென்றி
 • Option 2: லோபோ கோன்ஸால்வ்ஸ்
 • Option 3: பார்த்தலோமியோ டயஸ்
 • Option 4: கொலம்பஸ்
 • Answer: லோபோ கோன்ஸால்வ்ஸ்

answer

question 7

பசிபிக் பெருங்கடல் எனப் பெயரிட்டவர் _______

 • Option 1: கொலம்பஸ்
 • Option 2: அமெரிகோ வெஸ்புகி
 • Option 3: ஃபெர்டினான்ட் மெகெல்லன்
 • Option 4: வாஸ்கோடகாமா
 • Answer: ஃபெர்டினான்ட் மெகெல்லன்

answer

question 8

அமெரிக்க கண்டம் _______ என்பவரின் பெயரால் பெயரிடப்பட்டுள்ளது.

 • Option 1: அமெரிகோ வெஸ்புகி
 • Option 2: கொலம்பஸ்
 • Option 3: வாஸ்கோடகாமா
 • Option 4: ஹெர்நாண்டோ கார்டஸ்
 • Answer: அமெரிகோ வெஸ்புகி

answer

question 9

கிழக்கு இந்தியாவில் போர்ச்சுசீசியர்களின் வசமிருந்த பகுதிகளுக்குத் தலைமையகமாக _______ இருந்தது.

 • Option 1: மணிலா
 • Option 2: பம்பாய்
 • Option 3: பாண்டிச்சேரி
 • Option 4: கோவா
 • Answer: கோவா

answer

question 10

கீழ்க்கண்ட தாவரங்களுள் எது அமெரிக்காவிலிருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு அறிமுகப்படுத்தப்பட்டது?

 • Option 1: கரும்பு
 • Option 2: சர்க்கரைவள்ளிக்கிழங்கு
 • Option 3: அரிசி
 • Option 4: கோதுமை
 • Answer: சர்க்கரைவள்ளிக்கிழங்கு

answer

question 11

கி.பி.1453ல் கான்ஸ்டாண்டிநோபிளை _______ கைப்பற்றினர்.

 • Option 1: பைசாண்டியர்
 • Option 2: பிரஞ்சுகாரர்
 • Option 3: போர்ச்சுக்கீசியர்
 • Option 4: துருக்கியர்
 • Answer: துருக்கியர்

answer

question 12

_______ என்பவர் மனிதநேயவாதிகளிடையே ஒரு இளவரசர் என்று அறியப்படுகிறார்.

 • Option 1: லியானார்டோ டாவின்சி
 • Option 2: பெட்ரார்க்
 • Option 3: ஏராஸ்மஸ்
 • Option 4: தாமஸ் மூர்
 • Answer: ஏராஸ்மஸ்

answer

question 13

_______ சிஸ்டைன் திருச்சபை மேற்கூரைகளில் வரையப்பட்ட தன்னுடைய ஓவியங்களுக்காக புகழ்பெற்றவராவார்.

 • Option 1: ரஃபேல்
 • Option 2: மைக்கேல் ஆஞ்சலோ
 • Option 3: அல்புருட் டியரர்
 • Option 4: லியானார்டோ டாவின்சி
 • Answer: மைக்கேல் ஆஞ்சலோ

answer

question 14

கத்தோலிக்க திருச்சபை நிறுவனத்துக்கு உள்ளேயே மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்தம் _______ ஆகும்.

 • Option 1: ஆங்கிலிக்க மத சீர்திருத்தம்
 • Option 2: எதிர் மத சீர்திருத்தம்
 • Option 3: பிராட்டஸ்டண்டு மதச்சீர்திருத்தம்
 • Option 4: உள்மத சீர்திருத்தம்
 • Answer: எதிர் மத சீர்திருத்தம்

answer

question 15

வணிகப்புரட்சியின் தலையாய அம்சங்கள் _______, _______ மற்றும் _______ ஆகும

 • Option 1: சுரண்டல், ஏற்றுமதி மற்றும் ஆட்சி
 • Option 2: வங்கிகள், கூட்டுப் பங்கு நிறுவனங்களின் தோற்றம் மற்றும் வர்த்தகத்தின் வளர்ச்சி
 • Option 3: பணம், வங்கிகள் மற்றும் ஏற்றுமதி
 • Option 4: விவசாயம், கூட்டுப் பங்கு நிறுவனங்களின் தோற்றம் மற்றும் வங்கிகள்
 • Answer: வங்கிகள், கூட்டுப் பங்கு நிறுவனங்களின் தோற்றம் மற்றும் வர்த்தகத்தின் வளர்ச்சி

answer

question 16

சரியான கூற்றினைக் கண்டுபிடி

 • Option 1: மார்ட்டின் லூதர், கத்தோலிக்க திருச்சபையால் பாகுபாட்டுடன் நடத்தப்பட்டதால் அவர். அதனுடனான உறவைத் துண்டித்துக் கொண்டார்.
 • Option 2: ஜெனிவாவில் இருந்து ஜான் கால்வினின் அரசாங்கம் தாராளமயமானதாகவும் வேடிக்கை நிரம்பியதாகவும் இருந்தது.
 • Option 3: எட்டாம் ஹென்றி கத்தோலிக்க திருச்சபையுடன் ஆழமான இறையியல் வேறுபாடுகளைக் கொண்டிருந்தார்.
 • Option 4: தேவாலயத்துக் கூட்டு வழிபாட்டின் முக்கியத்துவத்தையும், விழாக்களின் முக்கியத்துவத்தையும் ட்ரென்ட் கவுன்சில் மீண்டும் வலியுறுத்தி அழுத்தம் தந்தது.
 • Answer: தேவாலயத்துக் கூட்டு வழிபாட்டின் முக்கியத்துவத்தையும், விழாக்களின் முக்கியத்துவத்தையும் ட்ரென்ட் கவுன்சில் மீண்டும் வலியுறுத்தி அழுத்தம் தந்தது.

answer

question 17

சரியான கூற்றினைக் கண்டுபிடி

 • Option 1: புதிய தரை மற்றும் கடல்வழி கண்டுபிடிப்புகளால் பொருளாதார மையங்கள் இத்தாலிய நகர அரசுகளிலிருந்து ஸ்பெயின் மற்றும் போர்ச்சுகலுக்கு மாற்றப்பட்டன.
 • Option 2: குதிரைகள் அமெரிக்காவை பிறப்பிடமாகக் கொண்டவை.
 • Option 3: நவீன யுகத்தின் தொடக்க காலத்தில், பொருளாதார நடவடிக்கைகளில் தலையிடவில்லை.
 • Option 4: போர்ச்சுகீசியர்கள் அரேபியர்களுடன் இணைந்து இந்தியாவில் வாணிக நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
 • Answer: புதிய தரை மற்றும் கடல்வழி கண்டுபிடிப்புகளால் பொருளாதார மையங்கள் இத்தாலிய நகர அரசுகளிலிருந்து ஸ்பெயின் மற்றும் போர்ச்சுகலுக்கு மாற்றப்பட்டன.

answer

9 ஆம் வகுப்பு 10 ஆவது பாடத்திளிருந்து வினா விடைகள் இங்கு தரப்பட்டுள்ளன. இந்த பாடத்தில் உள்ள (கோடிட்ட இடங்களை நிறப்பும்) வினாக்களும் (சரியான விடையைத் தேர்ந்தெடுக்கும்) வினாக்களாக மாற்றப்பட்டு சரியான விடைகளும் தரப்பட்டுள்ளன. இந்த பயிற்சி தொடர்பான வேறு ஏதேனும் கருத்துக்கள் இருந்தால் எங்களுக்கு அவற்றை அனுப்பிவைக்கவும்.
Next: Social Science class 9th வரலாறு அலகு 10 தொழிற்புரட்சி
Would you like to read similar lesson? Please go to School books lessons

Leave a Reply


Please send your report

latest lessons

{{message}}