tamiltutor

TAMIL TUTOR இணையத்தில் ஒரு
கல்வி பாசறை

நீங்கள் உறங்கும் போது வருவது அல்ல கனவு, உங்களை உறங்க விடாமல் செய்வதே கனவு. -- அப்துல் கலாம்

Social Science class 9th வரலாறு அலகு 5 - செவ்வியல் உலகம்

From text book: அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஆப்பிரிக்கா ஆகிய கண்டங்கள் உலக வரலாற்றின் மைய நீரோட்டத்திலிருந்து விலகியிருந்தபோது யூரேசியா என்றழைக்கப்பட்ட ஆசிய ஐரோப்பியக் கண்டங்களின் பெருநிலப்பரப்பில் நாகரிகங்கள் மலர்ந்தன. அவற்றில் சில விரைவில் செவ்வியல் நிலையை அடைந்து புகழ் பெற்றன. இச்செவ்வியல் காலத்தில் ரோமிலிருந்து பாரசீகம் அங்கிருந்து பெஷாவர் வரை என சங்கிலித்தொடர் போன்று பல பேரரசுகள் உருவாகத் தொடங்கின. நாகரிகங்களின் விரிவாக்கம் புவியியல் அடிப்படையிலான இடைவெளிகளை அகற்றி, பிரதேசங்களுக்கிடையே வணிக உறவுகளும் பண்பாட்டுப் பரிமாற்றங்களும் நடைபெற வழிவகுத்தன. நாளடைவில் இவ்வுறவுகள், சிந்தனை, தொழில்நுட்பம் கலைகள் ஆகியவற்றின் பரிமாற்றங்களுக்கு இட்டுச் சென்றன. இப்பின்னணியில்தான் பௌத்தம் தொடங்கி, கிறித்தவம், இஸ்லாம் வரையிலான உலகின் மிகப்பெரிய மதங்கள் பரவியதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். பண்டைய கிரீஸ் மற்றும் ரோமை உள்ளடக்கியதே செவ்வியல் உலகமென்றும் ஒன்றுடன் ஒன்று பின்னிப்பிணைந்த பண்டையகிரேக்க, ரோமானிய நாகரிகங்களை உள்ளடக்கிய காலமே செவ்வியல் காலமென்றும், கிரேக்கோ - ரோமானிய கால உலகமென்றும் அறியப்படுகின்றது.

Go to quiz

question 1

_______ என்ற கிரேக்க நகர அரசு, பாரசீகர்களை இறுதிவரை எதிர்த்து நின்றது.

 • Option 1: அக்ரோபொலிஸ்
 • Option 2: ஸ்பார்ட்டா
 • Option 3: ஏதென்ஸ்
 • Option 4: ரோம்
 • Answer: ஏதென்ஸ்

answer

question 2

கிரேக்கர்களின் மற்றொரு பெயர் _______ ஆகும்

 • Option 1: ஹெலனிஸ்டுகள்
 • Option 2: ஹெலனியர்கள்
 • Option 3: பீனிசியர்கள்
 • Option 4: ஸ்பார்ட்டன்கள்
 • Answer: ஹெலனியர்கள்

answer

question 3

ஹன் அரச வம்சத்தைத் தோற்றுவித்தவர் _______ ஆவார்.

 • Option 1: வு – தை
 • Option 2: ஹங் சோவ்
 • Option 3: லீயு – பங்
 • Option 4: மங்கு கான்
 • Answer: லீயு – பங்

answer

question 4

இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்படுவதற்குக் காரணமாக இருந்த ரோமானிய ஆளுநர் _______ ஆவார்.

 • Option 1: முதலாம் இன்னசென்ட்
 • Option 2: ஹில்ட்பிராண்டு
 • Option 3: முதலாம் லியோ
 • Option 4: போன்டியஸ் பிலாத்து
 • Answer: போன்டியஸ் பிலாத்து

answer

question 5

பெலப்பொனேஷியப் போர் _______ மற்றும் _______ ஆகியோர்களுக்கிடையே நடைபெற்றது.

 • Option 1: கிரேக்கர்கள் மற்றும் பாரசீகர்கள்
 • Option 2: பிளேபியன்கள் மற்றும் பெட்ரீசியன்கள்
 • Option 3: ஸ்பார்ட்டா மற்றும் ஏதென்ஸ் நகர வாசிகள்
 • Option 4: கிரேக்கர்கள் மற்றும் ரோமானியர்கள்
 • Answer: ஸ்பார்ட்டா மற்றும் ஏதென்ஸ் நகர வாசிகள்

answer

question 6

கிரேக்கர்கள் _______ என்ற இடத்தில் பாரசீகர்களைத் தோற்கடித்தனர்.

 • Option 1: ரோம்
 • Option 2: ஏதென்ஸ்
 • Option 3: அக்ரோபொலிஸ்
 • Option 4: மராத்தான்
 • Answer: மராத்தான்

answer

question 7

ரோமானியக் குடியரசில் ஏழை விவசாயிகளுக்கு ஆதரவாக இருந்தவர் _______

 • Option 1: எபிகியுரஸ் மற்றும் மாரியஸ்
 • Option 2: டைபிரியஸ் கிராக்கஸ் மற்றும் ஜீயஸ்
 • Option 3: காரியஸ் டோ கிராக்கஸ் மற்றும் எபிகியுரஸ்
 • Option 4: டைபிரியஸ் கிராக்கஸ் மற்றும் காரியஸ் டோ கிராக்கஸ்
 • Answer: டைபிரியஸ் கிராக்கஸ் மற்றும் காரியஸ் டோ கிராக்கஸ்

answer

question 8

_______ வம்சத்தினரின் ஆட்சியின் போது தான் பௌத்தம் இந்தியாவிலிருந்து சீனாவிற்கு வருகை தந்தது.

 • Option 1: ஹன்
 • Option 2: ஹூன்
 • Option 3: ஸௌ
 • Option 4: ஷங்
 • Answer: ஹன்

answer

question 9

_______ ஐரோப்பியாவின் மிக நேர்த்தியான கட்டடம்.

 • Option 1: ஒலிம்பியா ஜீயஸ் கோவில்
 • Option 2: பாந்தியன்
 • Option 3: புனித சோபியா ஆலயம்
 • Option 4: பார்த்தனன்
 • Answer: புனித சோபியா ஆலயம்

answer

question 10

_______ மற்றும் _______ ரோம நீதிபதிகள் ஆவார்கள்.

 • Option 1: எட்ருஸ்கான்ஸ், ஹில்ட்பிராண்டு
 • Option 2: ஜூலியஸ் சீசர், யூக்ளிட்
 • Option 3: மாரியஸ், சுல்லா
 • Option 4: மார்க்கஸ் அரிலியஸ், ரோமுலஸ் அரிலிஸ்
 • Answer: மாரியஸ், சுல்லா

answer

question 11

1. கிரீஸின் மீதான முதல் பாரசீகத் தாக்குதல் தோல்வியடைந்தது. 2. ரோமப் பேரரசின் வீழ்ச்சிக்கு ஜுலியஸ் சீஸர் ஒரு காரணமாயிருந்தார். 3. ரோமின் மீது படையெடுத்த கூட்டத்தினர் பண்பாட்டில் மேம்பட்டவர்களாகக் கருதப்படுகின்றனர். 4. பௌத்தமதம் ரோமப் பேரரசை வலுவிழக்கச் செய்தது.

 • Option 1: (i) சரி
 • Option 2: (i) மற்றும் (ii) சரி
 • Option 3: (ii) மற்றும் (iii) சரி
 • Option 4: (iv) சரி
 • Answer: (i) சரி

answer

question 12

1. யூகிளிட் கோள்கள் மற்றும் நட்சத்திரங்கள் எவ்வாறு நகர்கின்றன என்பது குறித்து ஒரு மாதிரியை உருவாக்கினார். 2. எட்ருஸ்கர்களை முறியடித்து, ரோமானியர்கள் ஒரு குடியரசை நிறுவினர். 3. அக்ரோபொலிஸ் புகழ்பெற்ற அடிமைச் சந்தை ஆனது. 4. ரோமும் கார்த்தேஜும் கிரேக்கர்களைத் துரத்துவதற்கு ஒன்றிணைந்தன.

 • Option 1: (i) சரி
 • Option 2: (ii) சரி
 • Option 3: (ii) மற்றும் (iv) சரி
 • Option 4: (iv) சரி
 • Answer: (ii) மற்றும் (iv) சரி

answer

question 13

1. பட்டு வழித்தடம் ஹன் வம்ச ஆட்சியின்போது மூடப்பட்டது. 2. வேளாண் குடிமக்களின் எழுச்சி, ஏதேனிய குடியரசுக்கு அச்சத்தைக் கொடுத்தது. 3. விர்ஜில் எழுதிய ‘ஆனெய்ட்’ ரோம ஏகாதிபத்தியத்தைப்புகழ்வதாய் அமைந்தது. 4. ஸ்பார்ட்டகஸ், ஜுலியஸ் சீஸரைக் கொன்றார்.

 • Option 1: (i) சரி
 • Option 2: (ii) சரி
 • Option 3: (ii) மற்றும் (iv) சரி
 • Option 4: (iii) சரி
 • Answer: (iii) சரி

answer

question 14

1. ரோமப் பேரரசர் மார்க்கஸ் அரிலியஸ் ஒரு கொடுங்கோலன். 2. ரோமுலஸ் அரிலிஸ், ரோமானிய வரலாற்றில் மிகவும் மெச்சத்தக்க அரசர். 3. பேபியஸ் ஒருபுகழ்பெற்ற ஒரு கார்த்தேஜியப் படைத்தலைவர் ஆவார். 4. வரலாற்றாளராக, லிவியை விட, டாசிடஸ் மதிக்கத்தக்கவர்.

 • Option 1: (i) சரி
 • Option 2: (ii) சரி
 • Option 3: (ii) மற்றும் (iii) சரி
 • Option 4: (iv) சரி
 • Answer: (iv) சரி

answer

question 15

1. பௌத்தமதம் ஜப்பானில் இருந்து சீனாவிற்கு பரவியது. 2. இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட பின்னர், புனித தோமையர் கிறித்தவக் கொள்கைகளைப் பரப்பினார். 3. ஐரோப்பாவில் புனித சோபியா ஆலயம் மிக நேர்த்தியான கட்டடம் ஆகும். 4. டிராஜன், ரோமனின் மோசமான சர்வாதிகாரிகளில் ஒருவராவார்.

 • Option 1: (i) சரி
 • Option 2: (ii) சரி
 • Option 3: (iii) சரி
 • Option 4: (iv) சரி
 • Answer: (iii) சரி

answer

9 ஆம் வகுப்பு வரலாறு 6 ஆம் பாடத்தின் கேள்வி மற்றும் பதில் இந்த பயிற்சியில் தரப்பட்டுள்ளது. கேள்விகளுக்கு நீங்களே பதிலளிக்க முயற்சி செய்யுங்கள். இல்லையெனில் கொடுக்கப்பட்ட பதிலை இறுதியில் பார்க்கலாம். ஏதேனும் கருத்துக்கள் இருந்தால் அவற்றை எங்களுக்குத் தெரிவிக்கவும்.
Next: Social Science class 9th வரலாறு அலகு 6 - இடைக்காலம்
Would you like to read similar lesson? Please go to School books lessons

Leave a Reply


Please send your report

latest lessons

{{message}}