tamiltutor

TAMIL TUTOR இணையத்தில் ஒரு
கல்வி பாசறை

நீங்கள் உறங்கும் போது வருவது அல்ல கனவு, உங்களை உறங்க விடாமல் செய்வதே கனவு. -- அப்துல் கலாம்

Social Science class 9th வரலாறு அலகு 4 - அறிவு மலர்ச்சியும், சமூக - அரசியல் மாற்றங்களும்

From text book: கி.மு. (பொ.ஆ.மு) ஆறாம் நூற்றாண்டில் வணிகமும் நகரமயமாக்கமும் மீட்டுருவாக்கம் பெற்று வடஇந்தியாவில் ஒருபுதிய நாகரிகம் வளர்ச்சி பெறக் காரணமாயின. முக்கியமான சமூக அரசியல் மாற்றங்கள் நிகழ்ந்த இக்கால கட்டத்தில்தான் புத்தரும் மகாவீரரும் தோன்றினர். அவர்களின் மறைவுக்குப் பிந்தைய நூற்றாண்டில், புத்த, சமணக் கோட்பாடுகள் இந்தியாவில் முக்கியமான சமயங்களாகப் பரவின. புதிய நம்பிக்கைகளையும் தத்துவங்களையும் தாங்கி, அவற்றைப் பின்பற்றும் பெரும் எண்ணிக்கையிலான ஆதரவாளர்களுடன் எழுச்சிமிக்க சமயக் கோட்பாடுகளாக இவை பரவின. இதே காலகட்டத்தில் புத்த, சமண சமயங்களைப் போலவே பாரசீகத்தில் ஜொராஸ்ட்டிரியனிசமும் சீனாவில் கன்பூசியனிசமும் தாவோயிசமும் தோன்றின.

Go to quiz

question 1

ஒரு தத்துவப் பிரிவை நிறுவிய _______ எளிமைக்கும் தன்னல் மறுப்பிற்கும் உதாரணமாக விளங்கினார்.

 • Option 1: புத்தர்
 • Option 2: வாவோட்சே
 • Option 3: கன்ஃபூசியஸ்
 • Option 4: ஜொராஸ்டர்
 • Answer: புத்தர்

answer

question 2

மகாவீரரின் போதனைகளால் ஈர்க்கப்பட்ட மகத அரசர் _______

 • Option 1: தனநந்தர்
 • Option 2: சந்திரகுப்தர்
 • Option 3: பிம்பிசாரர்
 • Option 4: சிசுநாகர்
 • Answer: பிம்பிசாரர்

answer

question 3

வடக்கில் காபூல் பள்ளத்தாக்கிலிருந்து தெற்கில் கோதாவரி வரை பரவியிருந்த வட இந்தியாவின் _______ எனப்பட்ட பதினாறு மாநிலங்களின் அரசுகளின் எழுச்சி ஏற்பட்டது.

 • Option 1: மஹாஜனபதங்கள்
 • Option 2: கனசங்கங்கள்
 • Option 3: திராவிடம்
 • Option 4: தட்சிணபதா
 • Answer: மஹாஜனபதங்கள்

answer

question 4

மும்மணிகள் (திரி ரத்னா) என்ற மூன்று கொள்கைகளை போதித்தவர் _______

 • Option 1: புத்தர்
 • Option 2: மகாவீரர்
 • Option 3: வாவோட்சே
 • Option 4: கன்ஃபூசியஸ்
 • Answer: மகாவீரர்

answer

question 5

மௌரிய ஆட்சி அமைப்பு மற்றும் சமூகம் குறித்த செய்திகளைத் தன் குறிப்புகளால் அளித்தவர்.

 • Option 1: மார்க்கோ போலோ
 • Option 2: ஃபாஹியான்
 • Option 3: மெகஸ்தனிஸ்
 • Option 4: செல்யூகஸ்
 • Answer: மெகஸ்தனிஸ்

answer

question 6

1. மகத அரசர்களின் கீழ் இருந்த மகாமாத்ரேயர்கள் அமைச்சர்களுக்குச் செயலாளர்களாகச் செயல்பட்டார்கள். 2. மெகஸ்தனிஸ் எழுதிய ‘இண்டிகா’ என்னும் வரலாற்றுக் குறிப்பு மௌரிய ஆட்சி அமைப்பு மற்றும் சமூகம் குறித்த ஆவணமாக விளங்குகிறது. 3. ஒரு பேரரசைக் கட்டமைக்க நந்தர் செய்த முயற்சியை, மௌரிய அரசை உருவாக்கிய அசோகர் தடுத்து நிறுத்தினார். 4. மரபுகளின்படி, சந்திரகுப்தர் அவரது வாழ்வின் இறுதியில் புத்த சமயத்தின் தீவிரமான ஆதரவாளராக இருந்தார்.

 • Option 1: (i) சரி
 • Option 2: (ii) சரி
 • Option 3: (i) மற்றும் (ii) சரி
 • Option 4: (iii) மற்றும் (iv) சரி
 • Answer: (i) மற்றும் (ii) சரி

answer

question 7

வெவ்வேறு காலகட்டங்களைச் சேர்ந்த, பிரார்த்தனைகளும் மரபுவழிக் கதைகளும் அடங்கிய புனித இலக்கியத் தொகுப்பு _______ ஆகும்.

 • Option 1: இண்டிகா
 • Option 2: திரி ரத்னா
 • Option 3: மகாவம்சம்
 • Option 4: ஜென்ட் அவெஸ்தா
 • Answer: ஜென்ட் அவெஸ்தா

answer

question 8

கங்கைச் சமவெளியில் _______ வேளாண்மைக்கு மாடுகளின் தேவை அவசியமானது.

 • Option 1: கிணற்று பாசனம்
 • Option 2: இரும்பு கலப்பை
 • Option 3: ஆற்றுப் பாசனம்
 • Option 4: எதுவும் இல்லை
 • Answer: இரும்பு கலப்பை

answer

question 9

_______ தீர்த்தங்கரர்களின் நீண்ட மரபில் வந்தவர் என்றும் 24வது மற்றும் கடைசி தீர்த்தங்கரர் என்றும் சமணர்கள் நம்புகிறார்கள்.

 • Option 1: புத்தர்
 • Option 2: மகாவீரர்
 • Option 3: சிசுநாகர்
 • Option 4: வாவோட்சே
 • Answer: மகாவீரர்

answer

question 10

புத்தருக்கு ஞானோதயம் ஏற்பட்ட இடத்தில் கட்டப்பட்டுள்ள மஹாபோதி கோயில் இன்றும் _______ இல் உள்ளது.

 • Option 1: புத்த கயா
 • Option 2: லும்பினி
 • Option 3: குஷினாரா
 • Option 4: வாரணாசி
 • Answer: புத்த கயா

answer

question 11

மௌரியப் பேரரசைப் பற்றியும் குறிப்பாக அசோகரின் தர்மம் சார்ந்த ஆட்சியைப் பற்றியும் அறிந்து கொள்ள _______ பாறைக் குறிப்புகள் பெரிதும் உதவுகின்றன.

 • Option 1: சமுத்திர குப்தரின்
 • Option 2: அசொகரின்
 • Option 3: சந்திர குப்தரின்
 • Option 4: பிம்பிசாரரின்
 • Answer: அசொகரின்

answer

question 12

சரியான கூற்றைத் தேர்வு செய்க

 • Option 1: வெண்கலக் கருவிகளின் வரவால் கங்கை ஆற்றங்கரையில் இருந்த அடர்த்தியான காடுகளை அகற்றுவது எளிதானது.
 • Option 2: அசிவிகம் மேற்கு இந்தியாவில் சிறு அளவில் பரவியிருந்தது.
 • Option 3: குறிப்பிட்ட இனக்குழுக்கள் ஆதிக்கம் செலுத்திய நிலத்தொகுதிகள் மௌரியர்களுக்கு முற்பட்ட அரசுகள் எனப்பட்டன.
 • Option 4: இலக்கியங்களில் குறிப்பிடப்படும் அரசுகளில் காசி, கோசலம், மகதம் ஆகியவை வலிமை படைத்தவையாக இருந்தன.
 • Answer: இலக்கியங்களில் குறிப்பிடப்படும் அரசுகளில் காசி, கோசலம், மகதம் ஆகியவை வலிமை படைத்தவையாக இருந்தன.

answer

question 13

சரியான கூற்றைத் தேர்வு செய்க

 • Option 1: மகதத்தின் முதல் முக்கியமான அரசன் அஜாதசத்ரு.
 • Option 2: நிர்வாகத்துக்கான ஒரு விரிவான கட்டமைப்பை உருவாக்குவதில் பிம்பிசாரர் வெற்றிகரமாகச் செயல்பட்டார்.
 • Option 3: வட இந்தியாவில் ஆட்சி செய்த சத்ரியர் அல்லாத அரச வம்சங்களில் முதலாமவர்கள் மௌரியர்களாகும்.
 • Option 4: ஒரு பேரரசுக்கான கட்டமைப்பை உருவாக்க மேற்கொண்ட முயற்சியை அசோகர் தடுத்து நிறுத்தினார்.
 • Answer: நிர்வாகத்துக்கான ஒரு விரிவான கட்டமைப்பை உருவாக்குவதில் பிம்பிசாரர் வெற்றிகரமாகச் செயல்பட்டார்.

answer

ஒன்பதாம் வகுப்பு வரலாறு அலகு 5 ஆம் பாடத்தின் வினா விடைகள் இங்கு தரப்பட்டுள்ளன. இந்த வினாக்களுக்கு விடை கண்டறிய முயற்சி சய்யவும். உங்களுக்கு ஏதேனும் கருத்துக்கள் இருந்தால் அவற்றை எங்களுக்கு தெரிவிக்கவும்.
Next: Social Science class 9th வரலாறு அலகு 5 - செவ்வியல் உலகம்
Would you like to read similar lesson? Please go to School books lessons

Leave a Reply


Please send your report

latest lessons

{{message}}