
TAMIL TUTOR இணையத்தில் ஒரு
கல்வி பாசறை
TAMIL TUTOR இணையத்தில் ஒரு
கல்வி பாசறை
From text book: கி.மு. (பொ.ஆ.மு.) மூன்றாம் நூற்றாண்டுக்கு முன்பிருந்தே தமிழ்ப் பண்பாடு தோன்றிவிட்டது. தமிழகத்து வணிகர்களும் கடலோடிகளும் கடல் கடந்த நாடுகளுடன் வணிகத் தொடர்புகளையும் பண்பாட்டுத் தொடர்புகளையும் கொண்டிருந்தனர். வெளிநாட்டு வணிகர்கள் கடல்வழியே தமிழகத்திற்கு வந்துபோயினர். வெளிநாட்டினருடன் ஏற்பட்ட பண்பாட்டுத் தொடர்புகளும், வணிக நடவடிக்கைகளும், தமிழகத்தின் உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியும் வாழ்க்கைமுறைகளும் இணைந்து தமிழ்நாட்டில் முதல் நகரமயமாதல் உருவானது. தலைநகரங்களும் துறைமுகப்பட்டிணங்களும் தோன்றின. நாணயங்களும் பணமும் புழக்கத்திற்கு வந்தன. 'தமிழ் பிராமி' என்ற வரிவடிவத்தில் தமிழ் மொழி முதன்முதலில் எழுதப்பட்டது. ஆவணங்கள் உருவாக்கப்பட்டன. செம்மொழித் தமிழ்ச் செய்யுள்கள் இயற்றப்பட்டன.
சங்க காலத்தில் பயன்படுத்தப்பட்ட எழுத்துமுறை யாது?
தமிழ்நாட்டிலிருந்து இலங்கைக்குச் சென்ற வியாபாரிகளையும் குதிரை வணிகர்களையும் பற்றிக் குறிப்பிடுகின்ற, இலங்கையின் பாலி மொழி வரலாற்று நூல் எது?
காடாக இருந்த இடங்களை வேளாண் நிலங்களாக மாற்றுதல், நீர்ப்பாசன வசதிகளை மேம்படுத்துதல் ஆகிய பெருமைகளுக்கு உரிய சோழ அரசன் யார்?
சேரர்களை பற்றிக் குறிப்பிடும் கல்வெட்டு எது?
1. பொருள் பரிமாற்றத்துக்கான ஊடகமாக நாணயங்கள் இடைக்கற்காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டன. 2. மௌரியர் காலத்தில் வட இந்தியாவில் இருந்த சாதாரண மக்கள் பிராகிருத மொழி பேசினார்கள். 3. ரோமானிய ஆவணமான வியன்னா பாப்பிரஸ், முசிறி உடனான வணிகத்தைக் குறிப்பிடுகிறது. 4. தமிழ் இலக்கண நூலான பத்துப்பாட்டில் திணைக் குறித்தகருத்து இடம்பெற்றுள்ளது.
1. பதிறுப்பத்து பாண்டிய அரசர்களையும் அவர்களின் ஆட்சிப் பகுதிகளையும் குறித்துச் சொல்கிறது. 2. காவிரிப்பூம்பட்டினத்தில் நடந்த வணிக நடவடிக்கைகளை அகநானூறு விவரிக்கிறது. 3. சோழர்களின் சின்னம் புலி ஆகும்; அவர்கள் புலி உருவம் பொறித்த, சதுர வடிவிலான செம்பு நாணயங்களை வெளியிட்டார்கள். 4. நெய்தல் என்பது மணற்பாங்கான பாலைவனப் பகுதி ஆகும்.
கற்கள், செப்பேடுகள், நாணயங்கள், மோதிரங்கள் ஆகியவற்றின் மீது பதிவு செய்யப்பட்ட ஆவணங்கள் _______ ஆகும்.
�
கடந்தகாலச் சமூகங்கள் குறித்து அறிந்து கொள்வதற்கான சான்றுகளாக உள்ள சில பொருட்களை மீட்டெடுப்பதற்கு ஓரிடத்தை முறைப்படி தோண்டுதல் _______ ஆகும்.
�
மௌரியர் காலத்தில் ஆட்சிக்கலை மற்றும் பொருளாதாரம் குறித்து கௌடில்யர் எழுதிய நூல், _______ ஆகும்.
_______ என்பது பிரிவு அல்லது வகை என்ற பொருளில் செய்யுள்களில் பயன்படுத்தப்பட்ட கருப்பொருள்; மேலும், இது ஒரு வாழ்விடத்தை அதன் தனித்தன்மை வாய்ந்த இயற்கைக்கூறுகளுடன் குறிப்பதாகவும் உள்ளது.
�
கிரேக்கர்கள், ரோமானியர்கள், மேற்கு ஆசியர்கள் ஆகியோரை உள்ளடக்கிய மேற்கத்தியர்களை _______ என்னும் சொல் குறிக்கிறது.
�
சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்
சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்
9 ஆம் வகுப்பு அலகு 4 வது பாடத்தின் வினா விடைகள் இங்கு தரப்பட்டுள்ளன. இந்த வினாக்களுக்கு விடை கண்டறிய முயற்சி செய்யவும். உங்களுக்கு வேறு ஏதேனும் கருத்துக்கள் இருந்தால் அதை எங்களுக்கு தெரிவிக்கவும்.
Next: Social Science class 9th வரலாறு அலகு 4 - அறிவு மலர்ச்சியும், சமூக - அரசியல் மாற்றங்களும்
Would you like to read similar lesson? Please go to School books lessons