
TAMIL TUTOR இணையத்தில் ஒரு
கல்வி பாசறை
TAMIL TUTOR இணையத்தில் ஒரு
கல்வி பாசறை
From text book: சுற்றுச்சூழல் என்பது மனிதனுக்கும் இயற்கைக்கும் இடையே உள்ள தொடர்புகளைப் பற்றியது ஆகும். மனிதன் தொன்றுதொட்டு ஒன்றி வாழ்ந்து வரும் சுற்றுப்புறம் 'சூழல்' என்று அழைக்கப்படுகிறது. சுற்றுச்சூழல் (Environment) என்ற சொல் என்விரான் (Environ) என்ற பிரெஞ்சு மொழி சொல்லிலிருந்து பெறப்பட்டது ஆகும். Environ என்பதன் பொருள் சுற்றுப்புறம் என்பதாகும். சுற்றுச்சூழல் என்பது உயிருள்ள மற்றும் உயிரற்ற கூறுகளை உள்ளடக்கியதாகும்.
வாழும் உயிரினங்களின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்தைப் பாதிக்கக்கூடிய காரணிகள் மற்றும் அனைத்து வெளிப்புறச் செல்வாக்குகளை _______ என்கிறோம்.
ஒவ்வோர் ஆண்டும் மக்கள் தொகை தினம் _______ ஆம் நாள் கடைபிடிக்கப்படுகிறது.
மக்கள்தொகை பற்றி புள்ளியியல் விவரக் கல்வி _______ஆகும்.
விலை மதிப்புமிக்க கனிமங்கள் மற்றும் பிற புவி அமைப்பியல் கனிமங்களைச் சுரங்கங்களிலிருந்து வெட்டி எடுப்பது, _______ ஆகும்.
பொருளாதார நடவடிக்கையில் இரண்டாம் நிலைத் தொழிலில் மூலப்பொருள்களிலிருந்து உற்பத்தி செய்யப்படுவன _______.
கூற்று (A): படுக்கை அடுக்கில் உள்ள ஓசோன் படலத்தை பாதுகாப்பு கேடயம் என்கிறோம். காரணம் (R): புற ஊதாக்கதிர் வீச்சு புவியை அடையாமல் தடுக்கிறது.
கூற்று (A): மூன்றாம் நிலைத் தொழிலில், பொருள்கள் நேரடியாக உற்பத்தி செய்யப்படாமல் உற்பத்தி செய்வதற்கான செயல்முறைகளில் உறுதுணையாக உள்ளது. காரணம் (R): மூன்றாம் நிலைத்தொழிலில் ஈடுபடும் மக்கள் முழுமையாக சுற்றுச் சூழலுக்குச் சாதகமாகச் செயல்படுகிறார்கள்.
9 ஆம் வகுப்பு புவியியல் 7 ஆம் பாடத்திளிருந்து பயிற்சி வினா விடைகள் இங்கு தரப்பட்டுள்ளன. இந்த வினா விடைகள் உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறோம். உங்களுக்கு வேறு ஏதேனும் கருத்துக்கள் இருந்தால் அதை எங்களுக்கு அனுப்பிவைக்கவும்.
Next: Social Science class 9th அலகு 7 - நிலவரைபடத் திறன்கள்
Would you like to read similar lesson? Please go to School books lessons