tamiltutor

TAMIL TUTOR இணையத்தில் ஒரு
கல்வி பாசறை

நீங்கள் உறங்கும் போது வருவது அல்ல கனவு, உங்களை உறங்க விடாமல் செய்வதே கனவு. -- அப்துல் கலாம்

Social Science class 9th அலகு 5 - உயிர்க்கோளம்

From text book: உயிர்க்கோளம் (Biosphere) புவியின் நான்காவது கோளமாகும். புவியின் மேற்பரப்பில் அமைந்துள்ள இக்கோளம் உயிரினங்கள் வாழ்வதற்கு ஏற்றதாகும். இக்கோளம் பாறைக்கோளம், நீர்க்கோளம் மற்றும் வளிக்கோளத்தை உள்ளடக்கியதாகும். இது தாவர இனங்களும் விலங்கினங்களும் வாழ்வதற்கு ஏற்ற சூழலைக் கொண்டுள்ளது. கடல் மட்டத்திலிருந்து வளிமண்டலத்தின் கீழ் அடுக்கு (Troposphere) வரை சுமார் 20 கிமீ. உயரம் வரை உயிர்க்கோளம் பரவியுள்ளது. கடல் மட்டத்திலிருந்து மேலும் கீழுமாக 1 கி.மீ வரையுள்ள ஒரு குறுகிய பகுதியில்தான் பெரும்பாலான தாவரங்களும் விலங்குகளும் வாழ்கின்றன. உயிர்க்கோளம் பல்வேறுபட்ட புவியின் மீது செங்குத்தாக அமைந்த உயிர்கோளம் சூழ்நிலை மண்டலம் (ecosystem) மற்றும் பல்லுயிர்த்தொகுதி அமைப்பாலும் (biomes) உருவாக்கப்பட்டுள்ளது. அனைத்து உயிரினங்களும் அவை சிறியதாக அல்லது பெரியதாக இருந்தாலும் அவைகள் இனக்குழுக்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. விலங்கு, தாவரம் மற்றும் நுண்ணுயிரிகள் எந்த இடத்தில் வாழ்கின்றதோ அவ்விடம், அவற்றின் வாழ்விடம் எனப்படுகிறது. பல்வேறு வகையான தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள் வாழும் ஒரு குறிப்பிட்ட வாழ்விடத்தை உயிரினப்பன்மை (Biodiversity) என்கிறோம்.

Go to quiz

question 1

புவியின் குளிர்ச்சியான பல்லுயிர்த்தொகுதி

  • Option 1: தூந்திரா
  • Option 2: டைகா
  • Option 3: பாலைவனம்
  • Option 4: பெருங்கடல்கள்
  • Answer: தூந்திரா

answer

question 2

உயிர்க் கோளத்தின் மிகச் சிறிய அலகு.

  • Option 1: சூழ்நிலை மண்டலம்
  • Option 2: பல்லுயிர்த் தொகுதி
  • Option 3: சுற்றுச்சூழல்
  • Option 4: இவற்றில் எதுவும் இல்லை
  • Answer: சூழ்நிலை மண்டலம்

answer

question 3

வளிமண்டலத்தில் உள்ள நுண்ணுயிரிகளைக் கொண்டு ஊட்டச்சத்துக்களை மறுசுழற்சி செய்வோர்

  • Option 1: உற்பத்தியாளர்கள்
  • Option 2: சிதைப்போர்கள்
  • Option 3: நுகர்வோர்கள்
  • Option 4: இவர்களில் யாரும் இல்லை
  • Answer: சிதைப்போர்கள்

answer

question 4

பாலைவனத்தாவரங்கள் வளரும் சூழல்

  • Option 1: உவர்ப்பியமுள்ள மணற்பகுதி
  • Option 2: குறைந்த அளவு ஈரப்பசை
  • Option 3: குளிர் வெப்பநிலை
  • Option 4: ஈரப்பதம்
  • Answer: உவர்ப்பியமுள்ள மணற்பகுதி

answer

question 5

மழைக்காடுகள் பல்லுயிர்த் தொகுதி அதிகளவு விவசாயத்திற்குப் பயன்படுத்த இயலாததற்குக் காரணம்

  • Option 1: மிக அதிகப்படியான ஈரப்பதம்
  • Option 2: மிக அதிகமான வெப்பநிலை
  • Option 3: மிக மெல்லிய மண்ணடுக்கு
  • Option 4: வளமற்ற மண்
  • Answer: மிக அதிகப்படியான ஈரப்பதம்

answer

question 6

கூற்று: பிரச்சார்பு ஊட்ட உயிரிகள் தங்கள் உணவை தாங்களே தயாரித்துக் கொள்ளாது காரணம்: ஊட்டச்சத்திற்காக இவை உற்பத்தியாளர்களைச் சார்ந்து இருக்கும்.

  • Option 1: கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி, காரணம் கூற்றை விளக்குகிறது
  • Option 2: கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி, காரணம் கூற்றை விளக்கவில்லை
  • Option 3: கூற்று சரி, காரணம் தவறு
  • Option 4: கூற்றும் மற்றும் காரணம் இரண்டும் தவறு
  • Answer: கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி, காரணம் கூற்றை விளக்குகிறது

answer

question 7

கூற்று: குறிப்பிட்ட பகுதிகளில் மட்டும் காணப்படக்கூடியதும் எளிதில் பாதிக்கப்படும் சூழலில் வாழும் பலவகையான தாவரங்களும் விலங்குகளும் கொண்ட பகுதியே வளமையம் ஆகும். காரணம்: இப்பகுதி சிறப்பான கவனம் கொண்டு பாதுகாக்கப்பட வேண்டும், ஆராய்ச்சியாளர்கள் இதனை அடையாளங் காண்பர்.

  • Option 1: கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி, காரணம் கூற்றை விளக்குகிறது
  • Option 2: கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி, காரணம் கூற்றை விளக்கவில்லை
  • Option 3: கூற்று சரி, காரணம் தவறு
  • Option 4: கூற்றும் மற்றும் காரணம் இரண்டும் தவறு
  • Answer: கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி, காரணம் கூற்றை விளக்குகிறது

answer

question 8

விலங்குகள், தாவரங்கள்மற்றும் நுண்ணுயிரிகள் ஒன்றோடொன்று இடைவினைப் புரிந்து கொண்டு வாழுமிடம் _______ எனப்படும்.

  • Option 1: பல்லுயிர்த் தொகுதி
  • Option 2: சுற்றுச்சூழல்
  • Option 3: சூழ்நிலை மண்டலம்
  • Option 4: பெருங்கடல்கள்
  • Answer: சூழ்நிலை மண்டலம்

answer

question 9

பிறச்சார்பு ஊட்ட உயிர்கள் (Hetrotrophs) என அழைக்கப்படுபவை _______.

  • Option 1: உற்பத்தியாளர்கள்
  • Option 2: சிதைப்போர்கள்
  • Option 3: நுகர்வோர்கள்
  • Option 4: இவர்களில் யாரும் இல்லை
  • Answer: நுகர்வோர்கள்

answer

question 10

ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட சிக்கலான உணவுச் சங்கிலி அமைப்பினை _______.என அழைக்கின்றோம்.

  • Option 1: உணவு வலை
  • Option 2: உணவு தொடர்
  • Option 3: உணவுச் சங்கிலி
  • Option 4: இவற்றில் எதுவும் இல்லை
  • Answer: உணவு வலை

answer

question 11

மிகப்பரந்த புவிச்சூழ்நிலை மண்டலத்தை _______ என்கிறோம்.

  • Option 1: சூழ்நிலை மண்டலம்
  • Option 2: பல்லுயிர்த் தொகுதி
  • Option 3: சுற்றுச்சூழல்
  • Option 4: தூந்திரா
  • Answer: பல்லுயிர்த் தொகுதி

answer

question 12

பாலைவனப் பல்லுயிர்த்தொகுதிகளில் வளரும் தாவரங்கள் _______ எனப்படும்.

  • Option 1: பாலைவனத் தாவரங்கள்
  • Option 2: தூந்திர தாவரங்கள்
  • Option 3: டைக்கா தாவரங்கள்
  • Option 4: கடல் வாழ் தாவரங்கள்
  • Answer: பாலைவனத் தாவரங்கள்

answer

question 13

_______ நீர்வாழ் பல்லுயிர்த்தொகுதி நன்னீர் மற்றும் கடல் நீர் கலக்கும் இடத்தில் காணப்படும்.

  • Option 1: ஆறு
  • Option 2: நன்னீர்
  • Option 3: கடல்
  • Option 4: நில
  • Answer: கடல்

answer

9 ஆம் வகுப்பு புவியியல் 6 ஆம் பாடத்திளிருந்து பயிற்சி வினா விடைகள் இங்கு தரப்பட்டுள்ளன. இந்த வினா விடைகள் உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறோம். உங்களுக்கு வேறு ஏதேனும் கருத்துக்கள் இருந்தால் அதை எங்களுக்கு அனுப்பிவைக்கவும்.
Next: Social Science class 9th அலகு 6 - மனிதனும் சுற்றுச் சூழலும்
Would you like to read similar lesson? Please go to School books lessons

Leave a Reply


Please send your report

latest lessons

{{message}}