
TAMIL TUTOR இணையத்தில் ஒரு
கல்வி பாசறை
TAMIL TUTOR இணையத்தில் ஒரு
கல்வி பாசறை
From text book: நகர சமுதாயங்கள் மேம்பட்ட வாழ்வியல் முறைகளை பின்பற்றி பண்டைய வேட்டையாடுதல் - உணவு சேகரித்தல் குழுக்கள் மற்றும் புதிய கற்கால வேளாண்மைச் சமுதாயங்களை விட ஒழுங்கமைவு கொண்டதாக அமைந்திருந்தன. நகரச் சமூகங்கள் சமூக அடுக்குகளையும், நன்கு திட்டமிடப்பட்ட நகரங்களையும் கொண்டிருந்தன. அவை கைவினைத் தொழில்களையும், வணிகம் மற்றும் பண்டமாற்று முறைகளையும், அறிவியல் தொழில் நுட்பத் தகவமைவையும், மற்றும் அமைப்பு ரீதியான அரசியல் அமைப்பையும் (தொடக்கநிலை அரசு) கொண்டிருந்தன. இதனால், பண்டைய சமூக அமைப்புகளில் இருந்து இவர்களைப் பிரித்துக்காட்ட நாகரிகம் என்ற சொல்லாடல் பயன்படுத்தப்படுகிறது. இதனால், இவர்கள் இதற்கு முந்தைய காலச் சமூகங்களை விட உயர்வானவர்கள் என்று கருதி விடக்கூடாது. ஏனெனில் ஒவ்வொரு பண்பாடும் நாகரிகமும் தனக்கான தனித்த வாழ்வியல் கூறுகளைக் கொண்டுள்ளன.
சொற்களைப் படங்கள் மூலம் உணர்த்தும் குறியீட்டு முறையை _______ என்கிறோம்.
எகிப்தியர்கள் இறந்த உடல்களைப் பதப்படுத்தி பாதுகாத்த முறை _______
சுமேரியரின் எழுத்துமுறை _______ ஆகும்.
வாரப்பா மக்கள் _______ பற்றி அறிந்திருக்கவில்லை.
சிந்துவெளி மக்கள் ' இழந்த மெழுகு செயல்முறை ' முறையை அறிந்திருந்தார்கள் என்பதைத் தெரிவிக்கும் வெண்கலச்சிலை _______ ஆகும்.
1. மெசபடோமியாவின் மிகப் பழமையான நாகரிகம் அக்காடியர்களுடைய நாகரிகம் ஆகும். 2. சீனர்கள் ஹைரோகிளிபிக் முறையை வளர்த்தெடுத்தார்கள். 3. யூப்ரடிஸ், டைகிரிஸ் ஆகிய ஆறுகள் மன்னார் வளைகுடாவில் கலக்கின்றன. 4. பாபிலோனிய அரசரான ஹமுராபி பெரும் சட்ட வல்லுனர் ஆவார்.
1. யாங்ட்சி ஆறு சீனாவின் துயரம் என்று அழைக்கப்படுகிறது. 2. வு - டி சீனப்பெருஞ்சுவரைக் கட்டினார். 3. சீனர்கள் வெடிமருந்தைக் கண்டுபிடித்தனர். 4. தாவோயிசத்தை நிறுவியவர் மென்சியஸ் என்று சீன மரபு கூறுகிறது.
பின்வருவனவற்றுள் மெசபடோமியாவைச் சேர்ந்த நான்கு நாகரிகங்களின் சரியான காலவரிசை எது?
கூற்று: மெசபடோமிய நாகரிகத்தின் அஸிரியர்கள் சிந்துவெளி நாகரிகத்தின் சமகாலத்தவர் ஆவர். காரணம்: அஸிரிய ஆட்சியாளரின் ஆவணம் ஒன்று மெலுஹாவிலிருந்து வந்த கப்பல்கள் பற்றி கூறுகின்றது.
_______என்பது மனிதத் தலையும் சிங்க உடலும் கொண்ட, கல்லால் ஆன மிகப் பெரிய உருவம் ஆகும்.
�
எகிப்தியர்கள் தொடக்க காலத்தில் பயன்படுத்திய உருவ எழுத்துகள் சார்ந்த முறை _______ ஆகும்.
_______ என்பது பல்வேறு குற்றங்களுக்கான சட்டங்களை விளக்கிக்கூறும் பண்டைய பாபிலோனியாவின் ஒரு முக்கியமான ஆவணம் ஆகும்.
�
சௌ அரசின் தலைமை ஆவணக்காப்பாளர் _______ ஆவார்.
�
ஹரப்பா நாகரிகம் நிலவிய இடங்களில் கண்டெடுக்கப்பட்ட பானைகளின் மீதுள்ள _______ உருவங்களும் ஓவியங்களும் அவர்களின் கலைத்திறனை உணர்த்துகின்றன.
�
சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்
சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்
ஒன்பதாம் வகுப்பு வரலாறு மூன்றாம் பாடத்தில் உள்ள கேள்விகள் இங்கு தரப்பட்டுள்ளன. இந்தக் கேள்விகளுக்கு சரியான விடையை கண்டறிய முயற்சி செய்யவும். உங்களுக்கு வேறு ஏதேனும் கருத்துக்கள் அல்லது பரிந்துரைகள் இருந்தால் அதை எங்களுக்கு அனுப்பி வைக்கவும்.
Next: Social Science class 9th வரலாறு அலகு 3 - தொடக்ககாலத் தமிழ்ச் சமூகமும் பண்பாடும்
Would you like to read similar lesson? Please go to School books lessons