
TAMIL TUTOR இணையத்தில் ஒரு
கல்வி பாசறை
TAMIL TUTOR இணையத்தில் ஒரு
கல்வி பாசறை
மக்களாட்சி முறையில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளால் ஆட்சி நடத்தப் படுகிறது என்றாலும், ஒவ்வொரு நாட்டிற்கும் இடையே மக்கள் பிரதிநிதிகளை தேர்ந்தெடுத்தல் மற்றும் அதிகார பங்கீடு ஆகியவற்றில் பல வேறுபாடுகள் உள்ளன. அதிகாரத்தை பங்கிடும் முறையைக் கொண்டு இவற்றை ஒற்றையாட்சி மற்றும் கூட்டாட்சி என்று வேறு படுத்துவர். அதேபோல, அரசாங்கம் நடத்தப்படும் முறையை கொண்டு அதிபர் அரசாங்க முறை மற்றும் பிரதமர் அரசாங்க முறை என்று வகைப்படுத்துவர். போட்டித் தேர்வுகளுக்கு தயார் ஆகுபவர்கள் இதுபோன்ற அரசாங்கத்தின் வகைகளை தெளிவாக படித்துக் கொள்ள வேண்டும். ஒருமுறை படித்தபிறகு அதை நீங்கள் எந்த அளவிற்கு புரிந்து கொண்டு இருக்கின்றீர்கள் என்று பயிற்சி செய்து பார்க்க வேண்டும். கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் இந்த பாடத்திலிருந்து பத்து கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன. இதைப் பயன்படுத்தி நீங்கள் படித்ததை பயிற்சி செய்து பாருங்கள். parlimentary system part 2. Practice test for TNPSC, UPSC, SSC, RRB, TRB, TET. Go to quiz
ஜப்பானில் ஒற்றையாட்சி முறை உள்ளதா அல்லது கூட்டாட்சி முறை உள்ளதா?
�
பாராளுமன்றமே அனைத்தையும் விட உயர்வானது என்பது கூட்டாட்சியா அல்லது ஒற்றை ஆட்சியா?
�
கூட்டாட்சி முறையிலான அரசாங்கம் என்ற வார்த்தை அரசியல் அமைப்பில் எந்த பகுதியில் கொடுக்கப்பட்டுள்ளது?
�
இந்திய ஒன்றியத்தில் இருந்து எந்த ஒரு மாநிலமும் பிரிந்து செல்ல முடியாது. ஏன் என்று விளக்குக?
�
மத்திய மாநில அரசுகளுக்கு இடையிலான அதிகார பகிர்வு குறித்து அரசியலமைப்பின் எந்த அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ளது?
�
அமெரிக்காவில் அனைத்து மாகாணங்களுக்கும் சமமான பிரதிநிதித்துவம் தரப்பட்டுள்ளதா?
�
இந்திய மக்களுக்கு ஒற்றை குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது எந்த வகையான ஆட்சியின் ஒரு பண்புக்கூறு?
�
கூட்டாட்சி முறை என்பது அரசியல் அமைப்பின் ஒரு அடிப்படைக் கூறுகளில் ஒன்று என்பதை உச்ச நீதிமன்றம் எந்த வழக்கில் தெரிவித்தது?
�
ஒரு சில மாநிலங்களில் காணப்படும் மாநிலக் கட்சிகளின் வளர்ச்சியை இந்தியக் கூட்டாட்சி முறையின் ஒரு பண்பு கூறாக எடுத்துக்கொள்ள முடியுமா?
�
பொதுப் பட்டியலில் எத்தனை துறைகள் உள்ளன?
5
இந்திய அரசியலமைப்பில் மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் இடையான அதிகார பகிர்தலை பற்றி கூறும் சட்டங்கள் சம்பந்தமான ஒரு சில முக்கிய கேள்விகள் இங்கு தரப்பட்டுள்ளது. முயற்சி செய்து பாருங்கள் வாழ்த்துக்கள்!
Next: Centre state relationship part 1
Would you like to read similar lesson? Please go to polity lessons