
TAMIL TUTOR இணையத்தில் ஒரு
கல்வி பாசறை
TAMIL TUTOR இணையத்தில் ஒரு
கல்வி பாசறை
உலகின் பெரும்பாலான பகுதிகளில் நடைமுறையில் இருந்து வந்த மன்னராட்சி முறைக்கு மாற்றாக தோன்றியதுதான் மக்களாட்சி முறை. மக்களாட்சி முறையில் வெவ்வேறு வடிவங்கள் உள்ளன. அவற்றுள் மிகவும் பிரபலமான ஒன்றுதான் பாராளுமன்ற அரசாங்க முறை (parlimentary system). இதில் பாராளுமன்றம் அதிக அதிகாரத்தை பெற்றுள்ளது. பிரதமர் மற்றும் அமைச்சர்களால் அரசாங்கம் இயக்கப்படுகின்றது. இவர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் ஆவர். இந்தியா போன்ற பன்முகத்தன்மை கொண்ட தேசத்தில் எண்ணற்ற மாறுதல்களையும் சிறப்புக் கூறுகளையும் பெற்று சிறப்பாக செயல்பட்டு வருகிறது. எனவேதான் போட்டித் தேர்வுகளில் இந்த பாடம் குறித்தான அதிக கேள்விகள் கேட்கப்படுகின்றன. அதிலும் குறிப்பாக மத்திய அரசு தேர்வுகளில் நிச்சயமாக இந்த பாடத்திலிருந்து கேள்விகள் ஒவ்வொரு தேர்விலும் இடம்பெறுகின்றன. கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை கிளிக் செய்து இந்த பாடத்தில் நீங்கள் எந்த அளவிற்கு தயாராக இருக்கின்றீர்கள் என்று பயிற்சி செய்து பாருங்கள். 10 minutes quiz on parliamentary system for UPSC, TNPSC, SSC, RRB, TRB, TET. Go to quiz
மத்திய அரசாங்கம் பாராளுமன்ற முறையில் அமைவதை குறித்து கூறும் அரசியலமைப்பு சட்டப்பிரிவு எது?
�
பாராளுமன்ற முறையில் அமைச்சர்கள் யாருக்கு பொறுப்புடையவர்கள்?
�
ஒரே நேரத்தில் ஒருவர் மக்கள் பிரதி நிதியாகவும் அமைச்சராகவும் செயல்பட வழிவகை செய்யும் அரசாங்கம் எது?
�
எந்த வகையிலான அரசாங்கத்தின் அமைச்சர்கள் நினைத்தால் மக்களவையை கலைக்க முடியாது?
�
எதிர்க்கட்சித் தலைவர் என்பவர் ஒரு மாற்று பிரதமர் என்ற கருத்தை கூறியவர் யார்?
�
எத்தனை ஆண்டுகள் அரசாங்கம் நீடிக்கும் என்று உறுதி அளிக்க முடியாத நிலை என்பது அதிபர் முறை அரசாங்கத்தின் ஒரு குறைபாடாகும். அதிபர் தனக்கு வேண்டிய நபர்களை தனது செயலாளர்களாக நியமித்துக் கொள்ளலாம். கூற்று மற்றும் காரணத்தின் பிழை நீக்குக?
�
எந்த வகையிலான அரசாங்கத்தின் கொள்கைகள் அல்லது திட்டங்கள் தொடர்ச்சியற்று போவதற்கான வாய்ப்புகள் உண்டு
�
இந்திய அரசியலமைப்பை உருவாக்கியவர்கள் அதிபர் முறைக்கு பதிலாக பாராளுமன்ற முறை அரசாங்கத்தை இந்தியாவில் கொண்டுவர விரும்பியதற்கான காரணம் யாது
�
பாராளுமன்ற முறை இந்தியாவிற்கு ஏற்றது தானா என்று ஆய்வு செய்வதற்காக ஏற்படுத்தப்பட்ட குழு எது? அது எப்போது ஏற்படுத்தப்பட்டது?
�
Shadow cabinet என்பது எந்த நாட்டின் ஒரு தனித்துவம் வாய்ந்த அமைப்பாக விளங்குகிறது?
�
நம் இந்திய அரசியல் அமைப்பில் பாராளுமன்ற முறை சம்பந்தமான ஒரு சில முக்கிய கேள்விகள் இங்கு தரப்பட்டுள்ளது. முயற்சி செய்து பாருங்கள் வாழ்த்துக்கள்!
Next: Parliamentary system part 2
Would you like to read similar lesson? Please go to polity lessons