tamiltutor

TAMIL TUTOR இணையத்தில் ஒரு
கல்வி பாசறை

அவசரமாகத் தவறு செய்வதை விட தாமதமாகச் சரிவர செய்வது மேல். -- ஜெபர்சன்

Introduction to Indian constitution part 2

உலகத்தின் மிக நீண்ட அரசியல் அமைப்பை உருவாக்குவதற்கு எத்தனையோ சவால்களையும் பல நுணுக்கமான சட்டங்களையும் உணர்ச்சிகரமான பல விவாதங்களையும் இதை உருவாக்கியவர்கள் கடக்க வேண்டியிருந்தது. ஏறத்தாள மூன்று வருடங்கள் நடைபெற்ற அரசியல் அமைப்பின் உருவாக்கம் குறித்து நாம் தெளிவாக படித்திருக்க வேண்டும். நவீன இந்திய வரலாறு நமது அரசியலமைப்பு நடைமுறைக்கு வந்த தினத்திலிருந்து தான் தொடங்குகிறது. இதன் காரணமாகவே TNPSC, TRB, TET, போன்ற போட்டித் தேர்வுகளில் இந்தப் பாடத்தில் இருந்து கேள்விகள் அடிக்கடி இடம்பெறுகின்றன. இவை மட்டுமல்லாது SSC, RRB, UPSC போன்ற தேசிய அளவில் நடத்தப்படும் தேர்வுகளிலும் அரசியலமைப்பு உருவான விதம் குறித்தான கேள்விகள் நிச்சயம் இடம்பெறுகின்றன. எனவே இந்தப் பாடத்தை நீங்கள் எந்த அளவிற்கு படித்து புரிந்து கொண்டிருக்கிறீர்கள் என்று பயிற்சி செய்து பாருங்கள். கீழே உள்ள இணைப்பை கிளிக் செய்து பயிற்சியை தொடங்கவும். Go to quiz

Go to quiz

question 1

வரைவுக் குழுவில் இடம்பெற்றிருந்த முஸ்லீம் தலைவரின் பெயர் என்ன?

 • Option A: நசிருதீன் அகமத்
 • Option B: முகமது அலி ஜின்னா
 • Option C: முகமது சாதுல்லா
 • Option D: பசல் அலி

answer

முகமது சாதுல்லா

question 2

வரைவுக் குழுவின் சட்ட திருத்தங்களில் எத்தனை ஏற்றுக்கொள்ளப்பட்டது?

 • Option A: 2473
 • Option B: 1753
 • Option C: 3567
 • Option D: 879

answer

2473

question 3

S.K. தார் குழு எந்த நோக்கத்திற்காக உருவாக்கப்பட்டது?

 • Option A: மாகாண அரசுகளை ஒன்றிணைக்க
 • Option B: மொழிவாரி மாநிலங்கள் அமைப்பது தொடர்பாக
 • Option C: அகதிகள் மறுவாழ்வு குறித்து ஆய்வு செய்ய
 • Option D: மேற்கண்ட எதுவுமில்லை

answer

மொழிவாரி மாநிலங்கள் அமைப்பது தொடர்பாக

question 4

அரசியலமைப்பில் எத்தனை சட்டவிதிகள் ஆரம்பத்தில் இருந்தன, தற்பொழுது எத்தனை இருக்கின்றன?

 • Option A: 365, 402
 • Option B: 395, 465
 • Option C: 400, 432
 • Option D: 395, 448

answer

395, 448

question 5

வரைவுக்குழு அதிக காலம் எடுத்துக் கொண்டது என்ற விமர்சனத்தை முன் வைத்தவர் யார்?

 • Option A: அல்லாடி கிருஷ்ணசாமி ஐயர்
 • Option B: நசுருதீன் அஹமத்
 • Option C: பிஎம் ராவ்
 • Option D: வின்ஸ்டன் சர்ச்சில்

answer

நசுருதீன் அஹமத்

question 6

அரசியலமைப்பு நிர்ணய சபை இந்துக்களால் ஆதிக்கம் செலுத்தப்பட்டது என்ற விமர்சனத்தை முன் வைத்தவர் யார்?

 • Option A: விஸ்கவுண்ட் சைமன்
 • Option B: பி ஆர் அம்பேத்கர்
 • Option C: பணிக்கர்
 • Option D: கிருஷ்ணமாச்சாரி

answer

விஸ்கவுண்ட் சைமன்

question 7

அரசியலமைப்பு நிர்ணய சபையின் சட்ட ஆலோசகர் யார்?

 • Option A: பி ஆர் அம்பேத்கர்
 • Option B: எம்என் ராய்
 • Option C: பி எம் ராவ்
 • Option D: கேஎம் முன்ஷி

answer

பி எம் ராவ்

question 8

அரசியலமைப்பை ஆங்கிலத்தில் எழுதியவர் யார்?

 • Option A: பிரேம் பெஹாரி நரேன்
 • Option B: நந்தலால் போஸ்
 • Option C: பிரேம்சந்த்
 • Option D: குஷ்வந்த் சிங்

answer

பிரேம் பெஹாரி நரேன்

question 9

அரசியலமைப்பின் ஹிந்தி பதிப்பை அலங்கரித்தவர் யார்?

 • Option A: நந்தலால் போஸ்
 • Option B: ரவீந்திரநாத் தாகூர்
 • Option C: தயத் மேத்தா
 • Option D: அபின் இந்திர நாத் தாகூர்

answer

நந்தலால் போஸ்

தமிழ்நாட்டின் தலைசிறந்த ஆங்கில ஆசிரியரிடம், கற்றுக் கொள்ள இதோ சிறந்த வாய்ப்பு, பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

இதுவே, உங்களுடைய இறுதியான ஆங்கில பயிற்சி வகுப்பாக இருக்கும்.

ஏனெனில் இதை முடித்தவுடன், நீங்களே கூறுவீர்கள், உங்களால் பிறருக்கு பயிற்சி தர முடியும் என்று.

இந்த வகுப்பை பற்றி மேலும் அறிந்து கொள்ள, கீழே உள்ள தொலைபேசி எண்களுக்கு, தயங்காமல் தொடர்பு கொள்ளுங்கள்.

 • VIGNESH 6383073556 /
 • VENKATESH 9360662257

 • அல்லது இங்கு முன்பதிவு செய்து, டெமோ வகுப்புகளை பாருங்கள்.

  question 10

  அரசியலமைப்பு நிர்ணய சபையால் இந்திய அரசியலமைப்பு என்று ஏற்றுக் கொள்ளப்பட்டது?

  • Option A: ஜனவரி 26 1949
  • Option B: ஜனவரி 26 1950
  • Option C: நவம்பர் 26 1949
  • Option D: ஆகஸ்ட் 15 1947

  answer

  நவம்பர் 26 1949

  You can practice this lesson
  here
  Would you like to read similar lesson? Please go to polity lessons

  Leave a Reply


  Please send your report

  latest lessons

  {{message}}