tamiltutor

TAMIL TUTOR இணையத்தில் ஒரு
கல்வி பாசறை

மெதுவாகப் பேசு. அது உன் ரகசியங்களைப் பாதுகாக்கும் நல்ல எண்ணத்தோடு இரு. அது உன் நடத்தையைப் பாதுகாக்கும். -- வள்ளலார்

Inter state relationship part 1

அவ்வப்போது மாநிலங்களுக்கு இடையே ஏற்படும் சிக்கல்களைத் தீர்ப்பதற்காக தேவையான வழிமுறைகள் அரசியலமைப்பில் வழங்கப்பட்டுள்ளன. பெரும்பாலும் இரு மாநிலங்களுக்கு இடையே ஏற்படும் சிக்கல்கள் நீதிமன்றத்தால் அல்லது தீர்ப்பாயங்கள் மூலமாகவோ தீர்த்துவைக்கப்படுகின்றன. நீண்ட நாட்களாக தீர்க்கப்படாத பிரச்சினைகளும் மாநிலங்களுக்கிடையே தொடர்ந்து கொண்டேதான் இருக்கின்றது. இவற்றைப் புரிந்து கொள்ள வேண்டுமென்றால் இரு மாநிலங்களுக்கு இடையிலான சிக்கல்களை தீர்ப்பதற்கு அரசியலமைப்பில் உள்ள வழிவகைகளை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அதன் பின்னர், அரசாங்கத்தால் ஏற்படுத்தப்பட்ட தீர்ப்பாயங்கள் மற்றும் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புகள் ஆகியவற்றை நாம் படிக்க வேண்டும். போட்டித் தேர்வுகளில் நல்ல மதிப்பெண் எடுக்க வேண்டும் என்றால் அனைத்து வகையான வினாக்களுக்கும் நாம் தயாராக இருக்க வேண்டும். இந்த பாடத்தில் நீங்கள் எந்த அளவிற்கு தயாராக இருக்கிறீர்கள் என்று கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை கிளிக் செய்து பயிற்சி செய்து பாருங்கள். ஏதேனும் கருத்துக்கள் அல்லது பரிந்துரைகள் இருந்தால் அதை நீங்கள் தாராளமாக தெரிவிக்கலாம். Inter state relationship in Tamil, Indian polity practice test for tnpsc, upsc, trb, rrb, rrc, trb, tet, ssc Go to quiz

Go to quiz

question 1

சட்டப்பிரிவு 262 எதைப் பற்றி குறிப்பிடுகிறது?

  • Option A: தேசிய சாலைகளை பகிர்ந்துகொள்வதில் எழும் பிரச்சனைகளுக்கான தீர்வுகளைப் பற்றி கூறுகிறது
  • Option B: மாநிலங்களுக்கு இடையே உள்ள வர்த்தகத்தில் ஏற்படும் பிரச்சினைகளுக்கான தீர்வுகளைப் பற்றி கூறுகிறது
  • Option C: நீர் பகிர்தலில் எழும் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பது குறித்து குறிப்பிடுகிறது
  • Option D: அகதிகளை தங்க வைத்துக் கொள்வது குறித்தும் அதில் எழும் பிரச்சினைகளுக்கான தீர்வுகள் குறித்தும் கூறுகிறது

answer

நீர் பகிர்தலில் எழும் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பது குறித்து குறிப்பிடுகிறது

ஆங்கிலத்தில் புலமை வேண்டுமா?

அவ்வாறென்றால், பழைய கற்றல் முறையை கைவிட்டு, புதுமையான எளிய விதிமுறைகளைக் கொண்ட இந்த, புதிய வகுப்பில் இப்பொழுதே சேருங்கள்.

இந்த வகுப்பை பற்றி மேலும் அறிந்து கொள்ள, கீழே உள்ள தொலைபேசி எண்களுக்கு, தயங்காமல் தொடர்பு கொள்ளுங்கள்.

  • VIGNESH 6383073556 /
  • VENKATESH 9360662257

  • அல்லது இங்கு முன்பதிவு செய்து, டெமோ வகுப்புகளை பாருங்கள்.
    Banner of abacus of English

    question 2

    கோதாவரி நீர் தீர்ப்பாயம் எந்த ஆண்டு கொண்டுவரப்பட்டது?

    • Option A: 1971
    • Option B: 1969
    • Option C: 1963
    • Option D: 1967

    answer

    1969

    question 3

    இந்திய மருத்துவ கவுன்சில் எந்த ஆண்டு கொண்டுவரப்பட்டது?

    • Option A: 1953
    • Option B: 1958
    • Option C: 1961
    • Option D: 1956

    answer

    1956

    question 4

    மாநிலங்களுக்கு இடையேயான கவுன்சில் எந்த ஆண்டு மற்றும் யாருடைய ஆட்சி காலத்தில் தொடங்கப்பட்டது?

    • Option A: 2015 நரேந்திர மோடி பாரதிய ஜனதா கட்சி
    • Option B: 2004 மன்மோகன் சிங் காங்கிரஸ் கட்சி
    • Option C: 1990 V.P Singh Janata party
    • Option D: 1984 இந்திரா காந்தி காங்கிரஸ் கட்சி

    answer

    1990 V.P Singh Janata party

    question 5

    மாநிலங்களுக்கிடையேயான கவுன்சிலுக்கு தலைமை தாங்குபவர் யார்?

    • Option A: முதலமைச்சர்
    • Option B: பிரதமர்
    • Option C: குடியரசு தலைவர்
    • Option D: ஆளுநர்

    answer

    பிரதமர்

    question 6

    நாட்டில் ஒரு மூலையில் தரப்படும் குற்றவியல் தீர்ப்பு நாடு முழுவதும் செல்லுபடியாகுமா?

    • Option A: செல்லுபடி ஆகாது
    • Option B: செல்லுபடியாகும்
    • Option C: பக்கத்து மாநிலங்களில் மட்டும் செல்லுபடியாகும்
    • Option D: நிச்சயமில்லை

    answer

    செல்லுபடி ஆகாது

    question 7

    எந்த சட்டப்பிரிவில் வணிகம் மற்றும் வர்த்தகத்தை பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது?

    • Option A: சட்டப்பிரிவு 308 இலிருந்து 315 வரை
    • Option B: சட்டப்பிரிவு 316 இலிருந்து 322 வரை
    • Option C: சட்டப்பிரிவு 323 இலிருந்து 329 வரை
    • Option D: சட்டப்பிரிவு 301 இலிருந்து 307 வரை

    answer

    சட்டப்பிரிவு 301 இலிருந்து 307 வரை

    question 8

    பாராளுமன்றம் ஒரு குறிப்பிட்ட மாநிலத்திற்கு மட்டும் வரி விளக்கோ அல்லது ஏதாவது வசதி வாய்ப்பு செய்து தரலாமா? அவ்வாறு தரலாம் எனில் காரணத்தை விளக்குக?

    • Option A: தர இயலாது ஏனெனில் அனைத்து மாநிலங்களும் சரிசமமாக சட்டத்தின் முன்னால் நடத்தப்படவேண்டும்
    • Option B: தரலாம் அவ்வாறு தர வேண்டுமெனில் அந்த குறிப்பிட்ட மாநிலம் பஞ்சத்தில் வறுமையிலும் இருத்தல் வேண்டும்
    • Option C: தரலாம் அவ்வாறு தர வேண்டும் எனில் அந்தக் குறிப்பிட்ட மாநிலமானது ஒரு மாதத்திற்கு முன்பாகவே மத்திய அரசிடம் விண்ணப்பித்து இருக்கவேண்டும்
    • Option D: தரலாம் அவ்வாறு தர வேண்டும் எனில் அதற்கு அந்த குறிப்பிட்ட மாநிலம் மத்திய அரசுக்கு தவறாமல் வரி செலுத்தி இருக்க வேண்டும்

    answer

    தரலாம் அவ்வாறு தர வேண்டுமெனில் அந்த குறிப்பிட்ட மாநிலம் பஞ்சத்தில் வறுமையிலும் இருத்தல் வேண்டும்

    question 9

    எந்த ஆண்டு வணிகம் மற்றும் வர்த்தகத்தை கண்காணிக்க அதிகாரக் குழு ஒன்று சட்டப்பிரிவு 301 கீழ் உருவாக்கப்பட்டது?

    • Option A: 2001
    • Option B: 2005
    • Option C: இதுவரை எந்த குழுவும் அமைக்கப்படவில்லை
    • Option D: 2012

    answer

    இதுவரை எந்த குழுவும் அமைக்கப்படவில்லை

    question 10

    வடகிழக்கு கவுன்சில் எந்த சட்ட விதியின் படி உருவாக்கப்பட்டது?

    • Option A: வடகிழக்கு கவுன்சில் 1973 சட்டத்தின்படி உருவாக்கப்பட்டது
    • Option B: வடகிழக்கு கவுன்சில் 1977 சட்டத்தின்படி உருவாக்கப்பட்டது
    • Option C: வடகிழக்கு கவுன்சில் 1971 சட்டத்தின்படி உருவாக்கப்பட்டது
    • Option D: வடகிழக்கு கவுன்சில் 1969 சட்டத்தின்படி உருவாக்கப்பட்டது

    answer

    வடகிழக்கு கவுன்சில் 1971 சட்டத்தின்படி உருவாக்கப்பட்டது

    You can practice this lesson
    here
    Would you like to read similar lesson? Please go to polity lessons

    Leave a Reply


    Please send your report

    latest lessons

    {{message}}