tamiltutor

TAMIL TUTOR இணையத்தில் ஒரு
கல்வி பாசறை

ஒவ்வொருவரும் உலகத்தை மாற்ற நினைக்கிறார்களேயொழிய தம்மை மாற்றிக்கொள்ள நினைப்பதில்லை. -- ஆப்ரகாம் லிங்கன்

Fundamental rights part 3

அடிப்படை உரிமைகள் தொடர்பான கேள்விகள் இந்த பயிற்சியில் கொடுக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே இரண்டு பகுதிகள் 20 கேள்விகளோடு கொடுக்கப்பட்டிருக்கின்றன.  நீங்கள் இதுவரையில் அவற்றை பார்க்காவிட்டால், முதல் பகுதிக்கு இங்கே கிளிக் செய்யவும் இரண்டாவது பகுதிக்கு இங்கே கிளிக் செய்யவும். எங்களுக்கு தொடர்ந்து ஆதரவளித்து வரும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் எங்களின் நெஞ்சார்ந்த நன்றிகள். போட்டித் தேர்வுகளில் நீங்கள் வெற்றி பெற்று விரைவில் அரசு அதிகாரியாக பணியாற்ற எங்களின் வாழ்த்துக்கள். அரசியல் அறிவியல் பகுதியில் அடிப்படை உரிமைகள் மிகவும் முக்கியமான பகுதி என்பதால் இதை மீண்டும் மீண்டும் பயிற்சி செய்து உங்களின் திறனை அதிகரித்துக் கொள்ளுங்கள். உங்களுக்கு வேறு ஏதேனும் கருத்துக்கள் அல்லது பரிந்துரைகள் இருந்தாள் நீங்கள் அதை தாராளமாக தெரிவிக்கலாம். அடிப்படை உரிமை 3 fundamental rights in Tamil for upsc, tnpsc, rrb, ssc, trb… Go to quiz

Go to quiz

question 1

தற்போது ஒரு நபர் தமிழ்நாட்டில் இருந்து காஷ்மீருக்கு சென்று குடியேற முடியுமா?

  • Option A: முடியாது
  • Option B: முடியும்
  • Option C: நிச்சயம்இல்லை
  • Option D: சில இடங்களில் மட்டும் குடியேற முடியும்

answer

முடியும்

question 2

வணிக நிறுவனங்கள் விளம்பரங்கள் செய்து கொள்ள அனுமதி அளிக்கும் அரசியலமைப்பு சட்டப்பிரிவு எது?

  • Option A: சட்டப்பிரிவு 19
  • Option B: சட்டப்பிரிவு 17
  • Option C: சட்டப்பிரிவு 39
  • Option D: சட்டப்பிரிவு 43

answer

சட்டப்பிரிவு 19

question 3

கூட்டமைப்புகள் சங்கங்கள் ஆகியவற்றிற்கு அரசின் அங்கீகாரம் பெறுவது ஒரு அடிப்படை உரிமையா?

  • Option A: அமைத்துக்கொள்வது & அங்கீகாரம் பெறுவது இரண்டுமே அடிப்படை உரிமை
  • Option B: அங்கீகாரம் பெறுவது ஒரு அடிப்படை உரிமை ஆனால் அமைத்துக்கொள்வது அடிப்படை உரிமை கிடையாது
  • Option C: அங்கீகாரம் பெறுவது ஒரு அடிப்படை உரிமை கிடையாது ஆனால் அமைத்துக்கொள்வது அடிப்படை உரிமை
  • Option D: அமைத்துக்கொள்வது & அங்கீகாரம் பெறுவது இரண்டுமே அடிப்படை உரிமை கிடையாது 

answer

அங்கீகாரம் பெறுவது ஒரு அடிப்படை உரிமை கிடையாது ஆனால் அமைத்துக்கொள்வது அடிப்படை உரிமை

question 4

ஒரு குற்றத்திற்காக இரண்டு தண்டனைகள் வழங்குவது சட்டப்படி தவறா?

  • Option A: ஆம் சட்டப்பிரிவு 20 படி தவறாகும்
  • Option B: ஆம் சட்டப்பிரிவு 22 படி தவறாகும்
  • Option C: இல்லை சட்டப்பிரிவு 20 படி தவறாகாது
  • Option D: இல்லை சட்டப்பிரிவு 22 படி தவறாகாது

answer

ஆம் சட்டப்பிரிவு 20 படி தவறாகும்

question 5

தனது எந்த உரிமை மீறப்படுவதாக மேனகா காந்தி நீதிமன்றத்தை நாடினார்?

  • Option A: சட்டப் பிரிவு 14 சமத்துவ உரிமை
  • Option B: சட்டப் பிரிவு 21 வாழ்வதற்கான உரிமை
  • Option C: சட்டப் பிரிவு 22 வாழ்வதற்கான உரிமை
  • Option D: சட்டப் பிரிவு 15 சமத்துவ உரிமை

answer

சட்டப் பிரிவு 21 வாழ்வதற்கான உரிமை

question 6

ஒரு நபர் கைது செய்யப்பட்டு 24 மணி நேரத்திற்குள் நீதிபதி முன்பு ஆஜர் படுத்தப் படவேண்டும் என்று கூறும் அரசியலமைப்பு சட்டப்பிரிவு எது?

  • Option A: சட்டப்பிரிவு 21
  • Option B: சட்டப்பிரிவு 19
  • Option C: சட்டப்பிரிவு 17
  • Option D: சட்டப்பிரிவு 22

answer

சட்டப்பிரிவு 22

question 7

நாட்டு பாதுகாப்பு தொடர்பான விவகாரங்களில் தடுப்புக் காவலில் வைக்கப்படுபவர்கள் குறித்து சட்டம் இயற்றும் சிறப்பு அதிகாரம் யாருக்கு உள்ளது

  • Option A: மாநில அரசுக்கு
  • Option B: மத்திய அரசுக்கு
  • Option C: இரண்டு அரசுக்குமே
  • Option D: வெளிநாட்டு தூதரகத்திற்கு

answer

மத்திய அரசுக்கு

ஆங்கிலத்தில் புலமை வேண்டுமா?

அவ்வாறென்றால், பழைய கற்றல் முறையை கைவிட்டு, புதுமையான எளிய விதிமுறைகளைக் கொண்ட இந்த, புதிய வகுப்பில் இப்பொழுதே சேருங்கள்.

இந்த வகுப்பை பற்றி மேலும் அறிந்து கொள்ள, கீழே உள்ள தொலைபேசி எண்களுக்கு, தயங்காமல் தொடர்பு கொள்ளுங்கள்.

  • VIGNESH 6383073556 /
  • VENKATESH 9360662257

  • அல்லது இங்கு முன்பதிவு செய்து, டெமோ வகுப்புகளை பாருங்கள்.
    Banner of abacus of English

    question 8

    MISA என்றால் என்ன?

    • Option A: Modern information safety act 1987 இது ராஜீவ் காந்தி அவர்களின் ஆட்சி காலத்தில் கொண்டுவரப்பட்ட ஒரு சட்டமாகும்
    • Option B: Maintenance of internal safety act 1974 இது இந்திரா காந்தி அவர்களின் ஆட்சி காலத்தில் கொண்டுவரப்பட்ட ஒரு சட்டமாகும்
    • Option C: maintenance of internal security act 1971 இது இந்திரா காந்தி அவர்களின் ஆட்சி காலத்தில் கொண்டுவரப்பட்ட ஒரு சட்டமாகும்
    • Option D: Maintenance of infrastructure act 1989 இது ராஜீவ் காந்தி அவர்களின் ஆட்சி காலத்தில் கொண்டுவரப்பட்ட ஒரு சட்டமாகும்

    answer

    maintenance of internal security act 1971 இது இந்திரா காந்தி அவர்களின் ஆட்சி காலத்தில் கொண்டுவரப்பட்ட ஒரு சட்டமாகும்

    question 9

    தூங்குவது ஒரு அடிப்படை உரிமையா?

    • Option A: இல்லை சட்டப்பிரிவு 19 இன் படி தூங்குவது ஒரு அடிப்படை உரிமை கிடையாது
    • Option B: ஆம் சட்டப்பிரிவு 19 இன் படி தூங்குவது ஒரு அடிப்படை உரிமை
    • Option C: ஆம் சட்டப்பிரிவு 21 இன் படி தூங்குவது ஒரு அடிப்படை உரிமை
    • Option D: இல்லை சட்டப்பிரிவு 21 இன் படி தூங்குவது ஒரு அடிப்படை உரிமை கிடையாது

    answer

    ஆம் சட்டப்பிரிவு 21 இன் படி தூங்குவது ஒரு அடிப்படை உரிமை

    question 10

    POTA சட்டம் என்றால் என்ன? அது எந்த ஆண்டு கொண்டுவரப்பட்டது?

    • Option A: Prevention of trade act 2005
    • Option B: Protection of tourists act 2008
    • Option C: Prevention of temple act 2002
    • Option D: prevention of terrorism act 2002

    answer

    prevention of terrorism act 2002

    You can practice this lesson
    here
    Would you like to read similar lesson? Please go to polity lessons

    Leave a Reply


    Please send your report

    latest lessons

    {{message}}