tamiltutor

TAMIL TUTOR இணையத்தில் ஒரு
கல்வி பாசறை

லட்சியத்தை அடிக்கடி மாற்றிக் கொள்ள கூடாது. அதை அடைவதற்கான வழிமுறைகளை வேண்டுமானால் மாற்றிக் கொள்ளலாம். -- நெப்போலியன்

Fundamental rights part 2

போட்டித் தேர்வுகளில் கேட்கப்பட்ட கடந்தகால தேர்வுத் தாள்களை எடுத்து பார்த்திருக்கின்றீர்களா? அதில் அடிப்படை உரிமைகள் தொடர்பாக ஒரு தேர்வு தாளுக்கு குறைந்தபட்சம் ஒரு கேள்வியாவது இடம் பெற்றிருக்கும். TNPSC I, II தேர்வில் அரசியல் அறிவியல் பகுதியிலிருந்து 15 முதல் 20 கேள்விகள் வரை கேட்கலாம் என்று எதிர்பார்த்தால், அதில் குறைந்தபட்சம் ஒரு கேள்வியாவது அடிப்படை உரிமைகள் பகுதியில் இருந்து வரும் என்று எதிர்பார்க்கலாம்.  எனவேதான், இந்த பாடத்தில் நீங்கள் சற்று கூடுதலாக பயிற்சி செய்து கொள்ள வேண்டும் என்று விரும்புகிறோம். முந்தைய பகுதியில் அடிப்படை உரிமைகள் பாடத்திலிருந்து 10 கேள்விகள் இடம்பெற்றிருந்தன. அதன் தொடர்ச்சியாக இந்தப் பகுதியிலும் பத்து கேள்விகள் தரப்பட்டுள்ளன. உங்களுக்கு தெரிந்த வரை விடையளிக்க முயற்சி செய்யுங்கள். பயிற்சியின் இறுதியில் நீங்கள் அளித்த விடை மற்றும் சரியான விடை ஆகியவை உங்களுக்கு காட்டப்படும். அதற்குப் பிறகு மீண்டும் நீங்கள் அதை பயிற்சி செய்து பார்க்கலாம். ஒவ்வொரு முறை நீங்கள் பயிற்சி செய்யும் போதும் கேள்விகளின் வரிசை மாறிக்கொண்டே இருக்கும் என்பதால், ஒவ்வொரு முறை பயிற்சியை தொடங்கும் பொழுதும் புதிய பயிற்சியை தொடங்கியது போலத்தான் இருக்கும். அடிப்படை உரிமைகள் பயிற்சியின் முந்தைய பகுதிக்கு செல்ல இங்கே கிளிக் செய்யவும். கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை கிளிக் செய்து இந்த பயிற்சியை இப்போதே தொடங்குங்கள். போட்டித் தேர்வுகளில் நீங்கள் வெற்றி பெற்று விரைவில் அரசு அதிகாரியாக மாற எங்களின் வாழ்த்துக்கள்! Indian constitution fundamental rights in Tamil for upsc, tnpsc, rrb, rrc, ssc… Go to quiz

Go to quiz

question 1

சட்டத்தின் ஆட்சி என்பது யாரால் அறியப்பட்ட ஒரு சித்தாந்தம் ஆகும்?

  • Option A: ஆல்பர்ட் வேன் டைசி
  • Option B: லாரன்ஸ்
  • Option C: அலெக்சாண்டர்
  • Option D: ஹெலன் மேயர்

answer

ஆல்பர்ட் வேன் டைசி

question 2

சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பது குடியரசு தலைவர் மற்றும் ஆளுநர் களுக்கு ஒரு சில இடங்களில் பொருந்தாது என்பதை கூறும் சட்டப்பிரிவு எது?

  • Option A: 341
  • Option B: 363
  • Option C: 361
  • Option D: 261

answer

361

question 3

ஒரு சட்டமன்ற உறுப்பினர் சட்டமன்றத்தில் கூறிய ஒரு விஷயத்திற்கு எதிராக ‌ நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க முடியுமா?

  • Option A: உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கலாம்
  • Option B: எங்கேயும் முடியாது
  • Option C: உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கலாம்
  • Option D: இரண்டிலும் முடியாது

answer

எங்கேயும் முடியாது

question 4

அரசியலமைப்பு சட்டப்பிரிவு 31c யின் சாராம்சம் என்ன?

  • Option A: சட்டப்பிரிவு 39a மற்றும் 39b யின் அடிப்படையில் கொண்டுவரப்படும் திருத்தங்கல் சட்டப்பிரிவு 14 இக்கு பொருந்தாது
  • Option B: சட்டப்பிரிவு 39a மற்றும் 39b யின் அடிப்படையில் கொண்டுவரப்படும் திருத்தங்கல் சட்டப்பிரிவு 13 இக்கு பொருந்தாது
  • Option C: சட்டப்பிரிவு 29a மற்றும் 39b யின் அடிப்படையில் கொண்டுவரப்படும் திருத்தங்கல் சட்டப்பிரிவு 14 இக்கு பொருந்தாது
  • Option D: சட்டப்பிரிவு 39b மற்றும் 40 யின் அடிப்படையில் கொண்டுவரப்படும் திருத்தங்கல் சட்டப்பிரிவு 14 இக்கு பொருந்தாது

answer

சட்டப்பிரிவு 39a மற்றும் 39b யின் அடிப்படையில் கொண்டுவரப்படும் திருத்தங்கல் சட்டப்பிரிவு 14 இக்கு பொருந்தாது

question 5

பிற பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் 27% இட ஒதுக்கீடு வழங்கும் சட்டம் எந்த ஆண்டு கொண்டுவரப்பட்டது?

  • Option A: 2001
  • Option B: 2008
  • Option C: 2002
  • Option D: 2006

answer

2006

question 6

அரசு பணிகளில் அனைவருக்கும் சமவாய்ப்பு என்பது ஒரு அடிப்படை உரிமையா? இது குறித்து கூறும் அரசியலமைப்பு சட்டப்பிரிவு எது?

  • Option A: ஆம் சட்டப்பிரிவு 16
  • Option B: ஆம் சட்டப்பிரிவு 18
  • Option C: இல்லை சட்டப்பிரிவு 16
  • Option D: இல்லை சட்டப்பிரிவு 18

answer

ஆம் சட்டப்பிரிவு 16

ஆங்கிலத்தில் புலமை வேண்டுமா?

அவ்வாறென்றால், பழைய கற்றல் முறையை கைவிட்டு, புதுமையான எளிய விதிமுறைகளைக் கொண்ட இந்த, புதிய வகுப்பில் இப்பொழுதே சேருங்கள்.

இந்த வகுப்பை பற்றி மேலும் அறிந்து கொள்ள, கீழே உள்ள தொலைபேசி எண்களுக்கு, தயங்காமல் தொடர்பு கொள்ளுங்கள்.

  • VIGNESH 6383073556 /
  • VENKATESH 9360662257

  • அல்லது இங்கு முன்பதிவு செய்து, டெமோ வகுப்புகளை பாருங்கள்.
    Banner of abacus of English

    question 7

    சமுதாய மற்றும் கல்வி ரீதியாக பின்தங்கிய நிலையில் உள்ளவர்கள் என்று எத்தனை பிரிவினரை மண்டல் ஆணையம் குறிப்பிட்டு இருந்தது?

    • Option A: 3744
    • Option B: 4743
    • Option C: 3743
    • Option D: 3473

    answer

    3743

    question 8

    ராம் நந்தன் கமிட்டி எப்போது எதற்காக அமைக்கப்பட்டது?

    • Option A: 1993இல் பொருளாதாரத்தில் பின்தங்கிய creamy layer and non creamy layer கண்டறிய
    • Option B: 1993இல் சமூக ரீதியாக பின்னடைந்த பிரிவினரை கண்டறிய
    • Option C: 1992இல் அயோதி மசூதி இடிப்பு பிரச்சனையை விசாரிக்க
    • Option D: 1992இல் இந்திய பல்கலைக்கழகங்களை கண்காணிக்க

    answer

    1993இல் பொருளாதாரத்தில் பின்தங்கிய creamy layer and non creamy layer கண்டறிய

    question 9

    தீண்டாமை குறித்து அரசியல் அமைப்பு தரும் விளக்கம் யாது?

    • Option A: தீண்டாமை ஒரு பாவச்செயல்
    • Option B: தீண்டாமை ஒரு பெருங்குற்றம்
    • Option C: தீண்டாமை பற்றிய விளக்கம் அரசியல் அமைப்பில் எங்கும் தரப்படவில்லை
    • Option D: தீண்டாமை ஒரு மனிதத்தன்மையற்ற செயல்

    answer

    தீண்டாமை பற்றிய விளக்கம் அரசியல் அமைப்பில் எங்கும் தரப்படவில்லை

    question 10

    பாரத ரத்னா பத்மஸ்ரீ போன்ற தேசிய விருதுகள் எந்த ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகின்றன?

    • Option A: 1966
    • Option B: 1954
    • Option C: 1964
    • Option D: 1956

    answer

    1954

    You can practice this lesson
    here
    Would you like to read similar lesson? Please go to polity lessons

    Leave a Reply


    Please send your report

    latest lessons

    {{message}}