tamiltutor

TAMIL TUTOR இணையத்தில் ஒரு
கல்வி பாசறை

நீ வாழ்க்கையில் முன்னேற வேண்டுமானால் உன்னுடைய கால்களால் நடந்து போ. மற்றவர்களின் முதுகின் மேல் ஏறிப் போக விரும்பாதே. -- நியேட்சே

Fundamental rights part 1

இந்திய அரசியல் அமைப்பில் மிகவும் முக்கியமான பாடங்களில் ஒன்று அடிப்படை உரிமைகள். ஒவ்வொரு இந்தியக் குடிமகனுக்கும் கட்டாயமாக வழங்கப்பட்டிருக்க வேண்டிய உரிமைகளை குறித்து இந்தப்பகுதி குறிப்பிடுகின்றது. உச்சநீதிமன்றத்திலும் அரசியல் விவாதங்களிலும் அதிகமாக விவாதிக்கப்படும் பகுதி அடிப்படை உரிமைகள். அனைத்து போட்டித் தேர்வுகளிலும் இந்த பகுதிக்கு அதிக முக்கியத்துவம் உண்டு.  அரசியலமைப்பில் ஆரம்பத்தில் வழங்கப்பட்டிருந்த அடிப்படை உரிமைகள் பல்வேறு காலகட்டங்களில் கொண்டுவரப்பட்ட சட்டத்திருத்தங்களால் சில சில மாறுதல்களை  சந்தித்தது. அடிப்படை உரிமைகள் ஆரம்பத்தில் இருந்தது முதல் செய்யப்பட்ட மாற்றங்கள் வரை அனைத்தையும் நன்கு தெரிந்திருந்தால் தான் போட்டித் தேர்வுகளில் நல்ல மதிப்பெண் பெற முடியும். இந்த பயிற்சியில் கொடுக்கப்பட்டுள்ள வினாக்களுக்கு எந்த அளவிற்கு விடையளிக்க முடிகின்றது என்று சோதித்துப் பார்த்து உங்களின் கற்றலை அதிகரித்துக் கொள்ளுங்கள். உங்களின் கருத்துக்கள் அல்லது பரிந்துரைகளை நீங்கள் எங்களுக்கு தாராளமாக அனுப்பலாம். எங்களுக்கு தொடர்ந்து ஆதரவளித்து வருவதற்கு எங்களின் நெஞ்சார்ந்த நன்றிகள்.  போட்டித் தேர்வுகளில் நீங்கள் வெற்றி பெற்று விரைவில் நீங்கள் ஒரு அரசாங்க அதிகாரியாக எங்களின் வாழ்த்துக்கள்! fundamental rights in Tamil for upsc, tnpsc, rrb, ssc, rrc Go to quiz

Go to quiz

question 1

Magna Carta எப்போது யாரால் வெளியிடப்பட்டது?

  • Option A: ராணி இரண்டாம் எலிசபெத் 1512
  • Option B: அரசர் ஜான் 1215
  • Option C: அரசர் ஜேம்ஸ் 1512
  • Option D: ராணி எலிசபெத் 1215

answer

அரசர் ஜான் 1215

question 2

அடிப்படை உரிமைகள் மீறப்பட்டால் எந்த விதியை பயன்படுத்தி உச்சநீதிமன்றத்தை ஒருவர் நாடலாம்?

  • Option A: விதி 14
  • Option B: விதி 32
  • Option C: விதி 29
  • Option D: விதி 15

answer

விதி 32

question 3

மதம் சார்ந்த அடிப்படை உரிமைகள் எந்த விதிகளில் கொடுக்கப்பட்டுள்ளன?

  • Option A: விதி 22 இலிருந்து விதி 25 வரை
  • Option B: விதி 24 இலிருந்து விதி 28 வரை
  • Option C: விதி 28 இலிருந்து விதி 32 வரை
  • Option D: விதி 25 இலிருந்து விதி 28 வரை

answer

விதி 25 இலிருந்து விதி 28 வரை

question 4

சொத்துரிமை அடிப்படை உரிமையில் இருந்து எந்த சட்ட திருத்தத்தின்படி மற்றும் எந்த ஆண்டு நீக்கப்பட்டது?

  • Option A: 42 ஆவது சட்ட திருத்தம் 1976
  • Option B: 44 ஆவது சட்ட திருத்தம் 1978
  • Option C: 32 ஆவது சட்ட திருத்தம் 1973
  • Option D: 39 ஆவது சட்ட திருத்தம் 1975

answer

44 ஆவது சட்ட திருத்தம் 1978

தமிழ்நாட்டின் தலைசிறந்த ஆங்கில ஆசிரியரிடம், கற்றுக் கொள்ள இதோ சிறந்த வாய்ப்பு, பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

இதுவே, உங்களுடைய இறுதியான ஆங்கில பயிற்சி வகுப்பாக இருக்கும்.

ஏனெனில் இதை முடித்தவுடன், நீங்களே கூறுவீர்கள், உங்களால் பிறருக்கு பயிற்சி தர முடியும் என்று.

இந்த வகுப்பை பற்றி மேலும் அறிந்து கொள்ள, கீழே உள்ள தொலைபேசி எண்களுக்கு, தயங்காமல் தொடர்பு கொள்ளுங்கள்.

  • VIGNESH 6383073556 /
  • VENKATESH 9360662257

  • அல்லது இங்கு முன்பதிவு செய்து, டெமோ வகுப்புகளை பாருங்கள்.

    question 5

    அடிப்படை உரிமைகளுக்கு முரணான சட்டங்கள் இயற்ற முடியாது எனக் கூறும் அரசியலமைப்பு சட்டப்பிரிவு எது?

    • Option A: சட்டப்பிரிவு 13
    • Option B: சட்டப்பிரிவு 14
    • Option C: சட்டப்பிரிவு 11
    • Option D: சட்டப்பிரிவு 12

    answer

    சட்டப்பிரிவு 13

    question 6

    அடிப்படை உரிமைகள் மீதான வழக்குகளை உயர் நீதிமன்றம் எந்த சட்டப் பிரிவின் கீழ் விசாரணை செய்யும்?

    • Option A: சட்டப்பிரிவு 326
    • Option B: சட்டப்பிரிவு 228
    • Option C: சட்டப்பிரிவு 226
    • Option D: சட்டப்பிரிவு 216

    answer

    சட்டப்பிரிவு 226

    question 7

    காவல்துறையினரால் சங்கம் அமைத்துக்கொள்ள முடியுமா? அது குறித்து கூறும் அரசியலமைப்பு சட்டப்பிரிவு எது?

    • Option A: முடியாது இதைப் பற்றிக் கூறும் சட்டப்பிரிவு 19
    • Option B: முடியும் இதைப் பற்றிக் கூறும் சட்டப்பிரிவு 19
    • Option C: முடியும் இதைப் பற்றிக் கூறும் சட்டப்பிரிவு 33
    • Option D: முடியாது இதைப் பற்றிக் கூறும் சட்டப்பிரிவு 33

    answer

    முடியாது இதைப் பற்றிக் கூறும் சட்டப்பிரிவு 33

    question 8

    கொத்தடிமை ஒழிப்பு சட்டம் எந்த அடிப்படை உரிமையின் கீழ் எந்த ஆண்டு கொண்டுவரப்பட்டது?

    • Option A: சுரண்டலுக்கு எதிரான அடிப்படை உரிமையின் கீழ் 1978 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்டது
    • Option B: சுரண்டலுக்கு எதிரான அடிப்படை உரிமையின் கீழ் 1976 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்டது
    • Option C: சுகந்திரதூவ அடிப்படை உரிமையின் கீழ் 1976 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்டது
    • Option D: சமத்துவ அடிப்படை உரிமையின் கீழ் 1978 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்டது

    answer

    சுரண்டலுக்கு எதிரான அடிப்படை உரிமையின் கீழ் 1976 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்டது

    question 9

    கொரோணா பரவலை காரணம்காட்டி போராட்டம் நடத்துவது மற்றும் பொதுக்கூட்டம் போடுவது போன்ற நடைமுறைகளுக்கு அரசாங்கம் தடை விதிப்பது அடிப்படை உரிமைகள் மீறல் என கருதப்படும?

    • Option A: கருதப்படாது ஏனெனில் இது தகுந்த காரணம் உடைய தடை என்பதால்
    • Option B: கருதப்படும் ஏனெனில் தனி மனிதனின் உரிமை பறிக்கப் படுவதால்
    • Option C: சில இடங்களில் மட்டும் கருதப்படும்
    • Option D: நிச்சயமில்லை

    answer

    கருதப்படாது ஏனெனில் இது தகுந்த காரணம் உடைய தடை என்பதால்

    question 10

    தேசிய அவசர நிலையின் பொழுது எந்த இரு பிரிவுகளை தவிர்த்த மற்ற அடிப்படை உரிமைகள் நிறுத்தப்படும்

    • Option A: சட்டப்பிரிவு 21 மற்றும் 22 தவிர்த்து மீதமுள்ள அனைத்து அடிப்படை உரிமைகளும் நிறுத்தப்படும்
    • Option B: சட்டப்பிரிவு 20 மற்றும் 21 தவிர்த்து மீதமுள்ள அனைத்து அடிப்படை உரிமைகளும் நிறுத்தப்படும்
    • Option C: சட்டப்பிரிவு 18 மற்றும் 19 தவிர்த்து மீதமுள்ள அனைத்து அடிப்படை உரிமைகளும் நிறுத்தப்படும்
    • Option D: சட்டப்பிரிவு 19 மற்றும் 20 தவிர்த்து மீதமுள்ள அனைத்து அடிப்படை உரிமைகளும் நிறுத்தப்படும்

    answer

    சட்டப்பிரிவு 20 மற்றும் 21 தவிர்த்து மீதமுள்ள அனைத்து அடிப்படை உரிமைகளும் நிறுத்தப்படும்

    You can practice this lesson
    here
    Would you like to read similar lesson? Please go to polity lessons

    Leave a Reply


    Please send your report

    latest lessons

    {{message}}