tamiltutor

TAMIL TUTOR இணையத்தில் ஒரு
கல்வி பாசறை

அழும்போது தனியாக இருந்து அழ வேண்டும். சிரிக்கும் போது நண்பர்களோடு இருந்து சிரிக்க வேண்டும். -- கண்ண தாசன்

Centre state relationship part 1

கூட்டாட்சியை பின்பற்றும் நாடுகளில் அதிகாரப் பகிர்வு தெளிவாக செய்யப்பட்டிருக்கும். அதே நேரத்தில், ஒற்றையாட்சியை பின்பற்றும் நாடுகளில் மைய அரசாங்கத்திடம் அதிகாரம் குவிந்திருக்கும். இந்திய தேசம் ஆனது முழுவதும் கூட்டாட்சி ஆக இல்லாமலும் ஒற்றையாட்சி முறையாக இல்லாமலும் இரண்டும் கலந்த கலவையாக இருப்பதால், மத்திய மாநில அரசுகளுக்கிடையே சட்டம் இயற்றுவதில் சிக்கல்கள் ஏற்படுகின்றன. பெரும்பாலான நேரங்களில் உச்ச நீதிமன்றத்தின் மூலமாக இவை தீர்த்துவைக்கப்படுகின்றன. இந்த சட்டங்கள் தொடர்பான கேள்விகள் அடிக்கடி பல்வேறு போட்டித் தேர்வுகளில் கேட்கப்படுகின்றன. இந்த பயிற்சியில் மத்திய மாநில உறவுகள் தொடர்பான பத்து கேள்விகள் இடம்பெற்றுள்ளன. நீங்கள் படித்ததை கொண்டு இதற்கு பதிலளிக்க முயற்சி செய்யுங்கள். பயிற்சியின் இறுதியில் சரியான விடைகள் உங்களுக்கு காட்டப்படும். நீங்கள் முழு மதிப்பெண் எடுக்கும் வரை திரும்பத் திரும்ப பயிற்சி செய்து இந்த பாடத்தில் உங்களது திறனை அதிகரித்துக் கொள்ளுங்கள். Practice quiz on centre state relationship in Tamil. Increase your knowledge by practicing again and again. This practice test can help you prepare for upcoming exams like TNPSC, TRB, TET, SSC, UPSC, RRB. Go to quiz

Go to quiz

question 1

மத்திய மாநில அரசுகளுக்கிடையே சட்டம் இயற்றுவது தொடர்பான உறவுகள் அரசியலமைப்பின் எந்தப் பகுதியில் விளக்கப்பட்டுள்ளன?

  • Option A: பகுதி-12
  • Option B: பகுதி-11
  • Option C: பகுதி-13
  • Option D: பகுதி-9

answer

பகுதி-11

question 2

இந்திய அரசாங்கம் கொண்டுவரும் ஒரு சட்டம் பழங்குடியினர் வாழும் ஒரு குறிப்பிட்ட பகுதிக்கு செல்லாது என கூற அல்லது அதில் மாற்றம் செய்து அறிவிக்கும் உரிமை ஒரு மாநில ஆளுநருக்கு உண்டா?

  • Option A: உண்டு
  • Option B: இல்லை
  • Option C: செல்லாது என்று கூற உரிமை உள்ளது ஆனால் மாற்றி அமைக்க உரிமை இல்லை
  • Option D: செல்லாது என்று கூற உரிமை இல்லை ஆனால் மாற்றி அமைக்க உரிமை உள்ளது

answer

உண்டு

question 3

7 ஆவது அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள மூன்று பட்டியல்களில் இடம் பெறாத எஞ்சியுள்ள அதிகாரங்கள் இந்தியாவில் எந்த அரசாங்கத்திற்கு வழங்கப்பட்டுள்ளது? அமெரிக்காவில் எந்த அரசாங்கத்திற்கு வழங்கப்பட்டுள்ளது?

  • Option A: இந்தியாவில் மாநில அரசுக்கும் அமெரிக்காவில் மத்திய மற்றும் மாநில அரசாங்கங்களுக்கு இடையே அதிகாரங்களை சமமாக பகிர்ந்தும் தரப்பட்டுள்ளது
  • Option B: இந்தியாவில் மத்திய மற்றும் மாநில அரசாங்கங்களுக்கு இடையே அதிகாரங்களை சமமாக பகிர்ந்தும்அமெரிக்காவில் மத்திய அரசுக்கும் தரப்பட்டுள்ளது
  • Option C: இந்தியாவில் மாநில அரசுக்கும் அமெரிக்காவில் மத்திய அரசுக்கும் தரப்பட்டுள்ளது
  • Option D: இந்தியாவில் மத்திய அரசுக்கும் அமெரிக்காவில் மாநில அரசுக்கும் தரப்பட்டுள்ளது

answer

இந்தியாவில் மத்திய அரசுக்கும் அமெரிக்காவில் மாநில அரசுக்கும் தரப்பட்டுள்ளது

question 4

பொதுப் பட்டியலில் உள்ள சட்டங்களில் மத்திய அரசு மற்றும் மாநில அரசு ஆகியவர்களுக்கு இடையே சிக்கல் ஏற்பட்டால் யாருடைய அதிகாரம் மேலோங்கி இருக்கும்?

  • Option A: மத்திய அரசின் அதிகாரமே மேலோங்கி இருக்கும்
  • Option B: மாநில அரசின் அதிகாரமே மேலோங்கி இருக்கும்
  • Option C: இருவரின் அதிகாரமும் மேலோங்கி இருக்கும்
  • Option D: இருவரின் அதிகாரமும் மேலோங்கி இருக்காது

answer

மத்திய அரசின் அதிகாரமே மேலோங்கி இருக்கும்

question 5

சர்க்காரியா ஆணையம் எந்த ஆண்டுகளில் அமைக்கப்பட்டது?

  • Option A: 1981 முதல் 1984 வரை
  • Option B: 1982 முதல் 1985 வரை
  • Option C: 1983 முதல் 1987 வரை
  • Option D: 1973 முதல் 1977 வரை

answer

1983 முதல் 1987 வரை

question 6

மத்திய மாநில அரசுகளுக்கிடையே சட்டம் இயற்றுவது தொடர்பான சட்டப் பிரிவுகள் யாவை?

  • Option A: சட்டப்பிரிவு 260 முதல் 275 வரை
  • Option B: சட்டப்பிரிவு 245 முதல் 255 வரை
  • Option C: சட்டப்பிரிவு 250 முதல் 255 வரை
  • Option D: சட்டப்பிரிவு 256 முதல் 263 வரை

answer

சட்டப்பிரிவு 245 முதல் 255 வரை

question 7

எது 42 ஆவது சட்டத் திருத்தத்தின்படி மாநிலப் பட்டியலிலிருந்து பொதுப் பட்டியலுக்கு மாற்றப்பட்ட துறை கிடையாது?

  • Option A: கல்வி
  • Option B: காவல் நிலையம்
  • Option C: காடுகள்
  • Option D: வனவிலங்கு மற்றும் பறவைகள் பாதுகாப்பு

answer

காவல் நிலையம்

question 8

மாநிலங்களவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் மாநிலப் பட்டியலில் உள்ள ஒரு துறை மீதான சட்டத்தை மத்திய அரசால் நிறைவேற்ற முடியுமா?

  • Option A: முடியும்
  • Option B: முடியாது
  • Option C: சில மாநிலங்களில் மட்டும் முடியும்
  • Option D: அவசர காலங்களில் நடைமுறையில் இருக்கும் பொழுது மட்டும் முடியும்

answer

முடியும்

Abacus of English banner

ஆங்கிலத்தை சரளமாக பேச வேண்டுமா?

அவ்வாறு என்றால், இன்றே சேருங்கள் "Abacus of English -ள்".

உங்கள் சமூகத்தில், மதிப்பு வாய்ந்தவராக மாறுங்கள்!

இந்த வகுப்பை பற்றி மேலும் அறிந்து கொள்ள, கீழே உள்ள தொலைபேசி எண்களுக்கு, தயங்காமல் தொடர்பு கொள்ளுங்கள்.

  • VIGNESH 6383073556 /
  • VENKATESH 9360662257

  • அல்லது இங்கு முன்பதிவு செய்து, டெமோ வகுப்புகளை பாருங்கள்.

    question 9

    மாநிலங்கள் இயற்றும் ஒரு சட்டத்தை குடியரசுத் தலைவரின் மறு ஆய்விற்காக ஆளுநர் அனுப்ப முடியுமா?

    • Option A: முடியும்
    • Option B: முடியாது 
    • Option C: முடியும் ஆனால் அதற்கு முதலமைச்சரின் ஒப்புதல் வேண்டும்
    • Option D: முடியும் ஆனால் அதற்கு அமைச்சர்களின் ஒப்புதல் வேண்டும்

    answer

    முடியும்

    question 10

    அரசியலமைப்பு சட்டப்பிரிவு 253 மத்திய அரசிற்கு வழங்கும் அதிகாரம் பற்றி கூறுக?

    • Option A: பன்னாட்டு ஒப்பந்த தருணத்தின் பொழுது மாநிலப் பட்டியலில் உள்ள சட்டங்களை மத்திய அரசு ஏற்றவோ அல்லது திருத்தம் செய்யலாம்
    • Option B: அந்நிய நாட்டோடு வர்த்தக தொடர்பு வைத்துக் கொள்ளும் பொழுது மத்திய அரசுக்கு உள்ள உரிமையை பற்றி கூறுகிறது
    • Option C: மாநில அரசுகளுக்கு இடையேயான ஒப்பந்தங்களை பற்றி கூறுகிறது
    • Option D: மாநில அரசுகளுக்கு மேல் மத்திய அரசுக்கு உள்ள உரிமையை பற்றி கூறுகிறது

    answer

    பன்னாட்டு ஒப்பந்த தருணத்தின் பொழுது மாநிலப் பட்டியலில் உள்ள சட்டங்களை மத்திய அரசு ஏற்றவோ அல்லது திருத்தம் செய்யலாம்

    You can practice this lesson
    here
    Would you like to read similar lesson? Please go to polity lessons

    Leave a Reply


    Please send your report

    latest lessons

    {{message}}