tamiltutor

TAMIL TUTOR இணையத்தில் ஒரு
கல்வி பாசறை

கண்ணியமான மனிதன் தன்னைத் தானே குறை கூறிக் கொள்வான், சாதாரண மனிதன் பிறரை குறை கூறுவான்! -- கன்பூஷியஸ்

Ancient history part 1

வரலாறு மிகவும் முக்கியம் அமைச்சரே! இதுவரையில் நமது தளத்தில் அரசியல் அறிவியல் தொடர்பான எண்ணற்ற பயிற்சி தேர்வுகள் தரப்பட்டுள்ளன. தொடர்ந்து அவை புதிது புதிதாக வந்து கொண்டே தான் இருக்கும். இப்போது வரலாறு பகுதியில் இருந்து பயிற்சி தேர்வுகளை உங்களுக்காக உருவாக்க தொடங்கியுள்ளோம். இந்த பயிற்சி தேர்வு கற்கால வரலாற்றில் இருந்து தொடங்குகிறது. கற்கால மனிதர்களின் வாழ்க்கை முறை குறித்து நீங்கள் எந்த அளவிற்கு புரிந்து வைத்துள்ளீர்கள் என்பதை பயிற்சி செய்து பாருங்கள். இதுபோன்ற வரலாறு தொடர்பான பயிற்சி தேர்வுகள் உங்களுக்கு பிடித்திருந்தால் தயவுசெய்து கமெண்ட் செய்யவும். வேறு ஏதேனும் கருத்துக்கள் அல்லது பரிந்துரைகள் இருந்தால் அதை நீங்கள் எங்களுக்கு தாராளமாக தெரிவிக்கலாம். உங்களின் தொடர்ச்சியான ஆதரவுதான் எங்களை மேலும் மேலும் ஊக்கப்படுத்தி இதுபோன்ற எண்ணற்ற பயிற்சி தேர்வுகளை உருவாக்க உற்சாகம் அளிக்கும். நமது பதிவுகளை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து தொடர்ந்து உங்களது ஆதரவை தெரிவிப்பீர்கள் என்று நம்புகிறோம். எங்களுக்கு தொடர்ந்து ஆதரவளிக்கும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் எங்களின் மனமார்ந்த நன்றிகள். Ancient history in Tamil practice test, TET, tnpsc, TRB Go to quiz

Go to quiz

ஆங்கிலத்தில் புலமை வேண்டுமா?

அவ்வாறென்றால், பழைய கற்றல் முறையை கைவிட்டு, புதுமையான எளிய விதிமுறைகளைக் கொண்ட இந்த, புதிய வகுப்பில் இப்பொழுதே சேருங்கள்.

இந்த வகுப்பை பற்றி மேலும் அறிந்து கொள்ள, கீழே உள்ள தொலைபேசி எண்களுக்கு, தயங்காமல் தொடர்பு கொள்ளுங்கள்.

  • VIGNESH 6383073556 /
  • VENKATESH 9360662257

  • அல்லது இங்கு முன்பதிவு செய்து, டெமோ வகுப்புகளை பாருங்கள்.
    Banner of abacus of English

    question 1

    எதை அடிப்படையாக கொண்டு வரலாறு மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது?

    • Option A: கல்வெட்டுக்கள்
    • Option B: எழுத்துவடிவ ஆதாரங்கள்
    • Option C: நாகரீகம்
    • Option D: பண்பாடு

    answer

    எழுத்துவடிவ ஆதாரங்கள்

    question 2

    இந்தியாவின் நவீன கால வரலாறு எப்போதில் இருந்து தொடங்குகிறது?

    • Option A: பதினேழாம் நூற்றாண்டு
    • Option B: பதினெட்டாம் நூற்றாண்டு
    • Option C: பத்தொன்பதாம் நூற்றாண்டு
    • Option D: இருபதாம் நூற்றாண்டு

    answer

    பதினேழாம் நூற்றாண்டு

    question 3

    மனிதனால் பயிரிடப்பட்ட முதல் பயிர் எது?

    • Option A: கோதுமை
    • Option B: பார்லி
    • Option C: நெல்
    • Option D: பருத்தி

    answer

    பார்லி

    question 4

    தமிழகத்தை சேர சோழ பாண்டியர்கள் சுமார் எத்தனை ஆண்டுகள் ஆட்சி செய்தனர்?

    • Option A: 1000 ஆண்டுகள்
    • Option B: 1500 ஆண்டுகள்
    • Option C: 2000 ஆண்டுகள்
    • Option D: 2500 ஆண்டுகள்

    answer

    2500 ஆண்டுகள்

    question 5

    epigraphy என்றால் என்ன?

    • Option A: கல்வெட்டுகளைப் பற்றி படிப்பது
    • Option B: நாணயங்களை பற்றி படிப்பது
    • Option C: பண்பாடுகளைப் பற்றி படிப்பது
    • Option D: நாகரீகங்களை பற்றி படிப்பது

    answer

    கல்வெட்டுகளைப் பற்றி படிப்பது

    question 6

    எந்த காலத்தில் மனிதர்கள் நாடோடிகளாக வாழ்ந்தனர்?

    • Option A: பழைய கற்காலம்
    • Option B: இடைக் கற்காலம்
    • Option C: புதிய கற்காலம்
    • Option D: உலோக காலம்

    answer

    பழைய கற்காலம்

    question 7

    இடை கற்காலத்தின் காலம் என்ன?

    • Option A: கி-மு. 11000 முதல் 9000
    • Option B: கி-மு. 10000 முதல் 7000
    • Option C: கி-மு. 7000 முதல் 4000
    • Option D: கி-மு. 4000 முதல் 2000

    answer

    கி-மு. 10000 முதல் 7000

    question 8

    நெருப்பு எப்போது கண்டுபிடிக்கப்பட்டது?

    • Option A: பழைய கற்காலம்
    • Option B: புதிய கற்காலம்
    • Option C: இடைக் கற்காலம்
    • Option D: உலோக காலம்

    answer

    இடைக் கற்காலம்

    question 9

    புதிய கற்கால மனிதர்களின் தொழில் என்ன?

    • Option A: கால்நடைகள் வளர்த்தல்
    • Option B: உணவு பொருட்கள் சேகரித்தல்
    • Option C: வேட்டையாடுதல்
    • Option D: கொடுக்கப்பட்டுள்ள அனைத்தும்

    answer

    கொடுக்கப்பட்டுள்ள அனைத்தும்

    question 10

    மனிதர்கள் முதல் முதலில் பயன்படுத்திய உலோகம் எது?

    • Option A: காப்பர்
    • Option B: வெள்ளி
    • Option C: அலுமினியம்
    • Option D: கொடுக்கப்பட்டுள்ள எதுவும் இல்லை

    answer

    காப்பர்

    You can practice this lesson
    here
    Would you like to read similar lesson? Please go to history lessons

    Leave a Reply


    Please send your report

    latest lessons

    {{message}}