tamiltutor

TAMIL TUTOR இணையத்தில் ஒரு
கல்வி பாசறை

தன்னுடைய திறமையை பயன்படுத்துவதில் மகிழ்ச்சி காணாதவன், என்றுமே மகிழ்ச்சி காணமாட்டான்! -- கதே

8th social science பொருளாதாரம், அலகு 2 - பொது மற்றும் தனியார் துறைகள்

எங்களுக்கு தொடர்ந்து ஆதரவளித்து வரும் உங்கள் அனைவருக்கும், முதலில் எங்களுடைய மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம். அறிமுகம்: இந்தியா சுதந்திரம் அடைந்த பொழுது அடிப்படையில் ஒரு வேளாண்மை பொருளாதார நாடாகவும் பலவீனமான தொழில் துறையை கொண்ட நாடாகவும் இருந்தது. நாட்டில் அதிக அளவில் வறுமை, கல்வியறிவின்மை, வேலையின்மை நிலவியது. இந்தியா மிகவும் மோசமான பொருளாதார மற்றும் சமுதாய அடிப்படை பிரச்சனைகளை எதிர்கொண்டு இருந்தது. இதன் காரணமாக நாட்டை முன்னேற்றுவதில் அரசு ஒரு விரிவான பங்கினை வகிக்க வேண்டிய நிலையில் இருந்தது. எனவே இந்திய பொருளாதாரமானது சமதர்ம அடிப்படையைல் இருக்க வேண்டும் என்று இந்தியா கருதியது. தனியார் துறை மற்றும் பொதுத்துறை கைகோர்ப்பதனால் ஒரு நிலையாந அதிகபட்ச பொருளாதார வளர்ச்சி அடையலாம் என்றும் நாடு கருதியது. இந்தியாவில் கலப்புப் பொருளாதார முறையை பின்பற்றி தனியார் மற்றும் பொது நிறுவனங்களால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மறவாமல் இந்த பதிவை உங்களுடைய நண்பர்களுக்கும் பகிர்ந்து உதவுங்கள். நீங்கள் விரைவில் ஒரு அரசு அதிகாரியாக ஆக, எங்களுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்! நாமும் படிப்போம், படித்த சமுதாயத்தை உருவாக்குவோம். 8th social science, பொருளாதாரம் அலகு 2 - பொது மற்றும் தனியார் துறைகள், பகுதி 1, for tnpsc, trb, tet, net, set

Go to quiz

question 1

இந்தியாவில் பொதுத்துறைகளின் தோற்றத்திற்குக் காரணமான இந்திய அரசின் தொழில் கொள்கையின் தீர்மானம்...........ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்டது.

  • Option A: 1957
  • Option B: 1958
  • Option C: 1966
  • Option D: 1956

answer

1956

question 2

கலப்புப் பொருளாதார நன்மைகளின் கலவை என்பது

  • Option A: முதலாளித்துவம்
  • Option B: சமதர்மம்
  • Option C: இரண்டும் சரியானவை
  • Option D: இரண்டும் தவறு

answer

இரண்டும் சரியானவை

Abacus of English banner

ஆங்கிலத்தை சரளமாக பேச வேண்டுமா?

அவ்வாறு என்றால், இன்றே சேருங்கள் "Abacus of English -ள்".

உங்கள் சமூகத்தில், மதிப்பு வாய்ந்தவராக மாறுங்கள்!

இந்த வகுப்பை பற்றி மேலும் அறிந்து கொள்ள, கீழே உள்ள தொலைபேசி எண்களுக்கு, தயங்காமல் தொடர்பு கொள்ளுங்கள்.

  • VIGNESH 6383073556 /
  • VENKATESH 9360662257

  • அல்லது இங்கு முன்பதிவு செய்து, டெமோ வகுப்புகளை பாருங்கள்.

    question 3

    ...................நிறுவனச் சட்டம் மற்றும் அரசாங்கத்தால் கட்டுப்படுத்தப்படும் முதன்மையான முக்கிய பங்குதாரர்.

    • Option A: தனியார் துறை
    • Option B: கூட்டு துறை
    • Option C: பொதுத்துறை
    • Option D: இவற்றில் எதுவுமில்லை

    answer

    கூட்டு துறை

    question 4

    பொதுத்துறை ...................உடையது.

    • Option A: இலாபநோக்கம்
    • Option B: சேவை நோக்கம்
    • Option C: ஊகவணிகநோக்கம்
    • Option D: இவற்றில் எதுவுமில்லை

    answer

    சேவை நோக்கம்

    question 5

    .............மற்றும்..........ஆகியவை சமூகத்தின் அனைத்துப்பிரிவினரின் பொருளாதார நலனை மேம்படுத்துவதில் அந்தந்த பணிகளை மேற் கொள்வதில் அரசால் அனுமதிக்கப்பட்டுள்ளது.

    • Option A: பொதுத்துறை மற்றும் தனியார்துறை
    • Option B: தன்னார்வ சங்கம் மற்றும் தனியார்துறை
    • Option C: பொதுத்துறை மற்றும் தன்னார்வ சங்கம்
    • Option D: இவற்றில் எதுவுமில்லை

    answer

    பொதுத்துறை மற்றும் தனியார்துறை

    question 6

    தனியார் துறை .............நோக்கத்தில் செயல்படுகிறது.

    • Option A: சேவை நோக்கம்
    • Option B: ஊகவணிகநோக்கம்
    • Option C: இலாப நோக்கம் 
    • Option D: இவற்றில் எதுவுமில்லை

    answer

    இலாப நோக்கம் 

    question 7

    .........என்பது ஒரு சமூகத்தின் சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சியின் செயல்முறையாகும் .

    • Option A: சமூக மேம்பாடு
    • Option B: சமூக பொருளாதார மேம்பாடு 
    • Option C: பொருளாதார மேம்பாடு
    • Option D: இவற்றில் எதுவுமில்லை

    answer

    சமூக பொருளாதார மேம்பாடு 

    question 8

    தனியார் துறையின் முக்கிய செயல்பாடுகளை தோற்றுவிப்பது __________ மற்றும் __________ ஆகும்.

    • Option A: புதுமை மற்றும் வெளிநாட்டுமயமாதலை உருவாக்குவது.
    • Option B: புதுமை மற்றும் தேசியமயமாதலை உருவாக்குவது.
    • Option C: தேசியமயமாதல் மற்றும் வெளிநாட்டுமயமாதலை உருவாக்குவது.
    • Option D: புதுமை மற்றும் நவீனமயமாதலை உருவாக்குவது.

    answer

    புதுமை மற்றும் நவீனமயமாதலை உருவாக்குவது.

    question 9

    குடிமக்கள் மத்தியில்...........மற்றும் ஒத்துழைப்பை வலுப்படுத்த அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது .

    • Option A: ஒற்றுமை
    • Option B: படிப்பறிவு
    • Option C: உழைப்பு
    • Option D: புரிதல்

    answer

    புரிதல்

    question 10

    சமூகப் பொருளாதார முன்னேற்றத்தை அளவிட பின்வருவனவற்றில் எந்த குறியீடு பயன்படுத்தப்படுவதில்லை .

    • Option A: கருப்புப் பணம்
    • Option B: ஆயுட்காலம்
    • Option C: மொத்த உள்நாட்டு உற்பத்தி ( GDP )
    • Option D: வேலைவாய்ப்பு

    answer

    கருப்புப் பணம்

    You can practice this lesson
    here
    Would you like to read similar lesson? Please go to School books lessons

    Leave a Reply


    Please send your report

    latest lessons

    {{message}}