tamiltutor

TAMIL TUTOR இணையத்தில் ஒரு
கல்வி பாசறை

எவன் பிறர் நற்செயல்களைப் பார்த்து மகிழ்ச்சி கொள்ளவில்லையோ,அவனால் நல்ல செயல்கள் எதையும் செய்ய முடியாது. -- ஜேம்ஸ் ஆலன்

8 ஆம் வகுப்பு சமூக அறிவியல், குடிமையியல் அலகு 3 - சமயச்சார்பின்மையைப் புரிந்து கொள்ளுதல் பகுதி 1

எங்களுக்கு தொடர்ந்து ஆதரவளித்து வரும் உங்கள் அனைவருக்கும், முதலில் எங்களுடைய மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம். அறிமுகம்: இந்திய பல சமய மற்றும் கலாச்சார, பண்பாட்டு நம்பிக்கைள் கொண்ட நாடாகும். இது இந்து, சமணம், புத்தம் மற்றும் சீக்கியம் ஆகிய நான்கு பெரும் சமயங்களின் பிறப்பிடமாகும். நமது நாட்டில் பல்வேறு சமயங்கள் மற்றும் நம்பிக்கைகள் கொண்ட சமயங்கள் நீண்டகாலமாக அமைதியுடன் வாழ்கின்றனர். நவீன தேசிய நாடுகள் அனைத்தும் பல சமயங்களைக் கொண்டிருப்பதால் அனைத்து சமயங்களையும் சகித்துக்கொள்ளும் தன்மை அவசியமானதாகும். சமயச்சார்பின்மையின் நோக்கமானது சமய நம்பிக்கை கொண்டவர்களும் மற்றும் எந்த சமயத்தையும் சாராதவர்களும் அமைதியுடன் இணக்கமாக வாழ்வதற்க சமூகத்தை உருவாக்குவது என்பதாகும். இராஜாராம் மோகன்ராய், சர் சையது அகமதுகான், இரவீந்திரநாத் தாகூர், மகாத்மா காந்தி மற்றும் B.R. அம்பேத்கர் போன்ற குறிப்பிடத்தக்க பெரும் மரியாதைக்குரியதனிநபர்கள் இந்தியச் சமூகத்தின்பல்வேறு நிலைகளில் சமயச்சார்பின்மையை நிலைநாட்ட பங்களித்துள்ளனர். இந்தியா போன்ற பல்வேறு சமய பன்முகத் தன்மை கொண்ட சமூகத்திற்குச் சமயச்சார்பின்மை என்பது மதிப்புமிக்க ஒன்றாகும். சமயச்சார்பின்மை என்ற சொல் லத்தீன் வார்த்தையான செகுலம் (saeculum) என்பதிலிருந்து பெறப்பட்டது. இதன் பொருள் காலம் (an age) அல்லது உள்ளுணர்வு காலம் (the spirit of an age) ஆகும். ஆங்கிலேய பத்திரிக்கை எழுத்தாளரான ஜார்ஜ் ஜேக்கப் ஹோல்யோக் என்பவர் secularism என்ற பதத்தை உருவாக்கினார். மறவாமல் இந்த பதிவை உங்களுடைய நண்பர்களுக்கும் பகிர்ந்து உதவுங்கள். நீங்கள் விரைவில் ஒரு அரசு அதிகாரியாக ஆக, எங்களுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்! நாமும் படிப்போம், படித்த சமுதாயத்தை உருவாக்குவோம். 8th social science, குடிமையியல் அலகு 3 - சமயச்சார்பின்மையைப் புரிந்து கொள்ளுதல், பகுதி 1, for tnpsc, trb, tet, net, set

Go to quiz

question 1

சமயச்சார்பின்மை என்பது

  • Option A: அரசு அனைத்து சமயத்திற்கும் எதிரானது
  • Option B: அரசு ஒரே ஒரு சமயத்தை மட்டும் ஏற்றுக் கொள்கிறது.
  • Option C: எந்த சமயத்தைச்சார்ந்த குடிமகனும் சகிப்புத்தன்மையுடன் அமைதியாக இணக்கமாகவாழ்தல்
  • Option D: இவற்றுள் ஏதுவுமில்லை

answer

எந்த சமயத்தைச்சார்ந்த குடிமகனும் சகிப்புத்தன்மையுடன் அமைதியாக இணக்கமாகவாழ்தல்

question 2

இந்தியா ஒரு ...............கொண்ட நாடாகும்

  • Option A: பல்வேறு சமயநம்பிக்கை
  • Option B: பல்வேறு பண்பாட்டு நம்பிக்கை
  • Option C: இரண்டும்
  • Option D: இவற்றுள் எதுவமில்லை

answer

இரண்டும்

question 3

இந்திய அரசியலமைப்பின் முகவுரை திருத்தப்பட்ட ஆண்டு

  • Option A: 1951
  • Option B: 1976
  • Option C: 1974
  • Option D: 1967

answer

1976

question 4

பின்வருவனவற்றுள் எது இந்தியாவை சமயச்சார்பற்ற நாடாக விவரிக்கிறது

  • Option A: அடிப்படை உரிமைகள்
  • Option B: அடிப்படை கடமைகள்
  • Option C: அரசுநெறிமுறையுறுத்தும் கொள்கைகள்
  • Option D: அரசியலமைப்பின் முகவுரை

answer

அரசியலமைப்பின் முகவுரை

தமிழ்நாட்டின் தலைசிறந்த ஆங்கில ஆசிரியரிடம், கற்றுக் கொள்ள இதோ சிறந்த வாய்ப்பு, பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

இதுவே, உங்களுடைய இறுதியான ஆங்கில பயிற்சி வகுப்பாக இருக்கும்.

ஏனெனில் இதை முடித்தவுடன், நீங்களே கூறுவீர்கள், உங்களால் பிறருக்கு பயிற்சி தர முடியும் என்று.

இந்த வகுப்பை பற்றி மேலும் அறிந்து கொள்ள, கீழே உள்ள தொலைபேசி எண்களுக்கு, தயங்காமல் தொடர்பு கொள்ளுங்கள்.

  • VIGNESH 6383073556 /
  • VENKATESH 9360662257

  • அல்லது இங்கு முன்பதிவு செய்து, டெமோ வகுப்புகளை பாருங்கள்.

    question 5

    சமயச் சுதந்திர உரிமை எதனுடன் தொடர்புடையது

    • Option A: நீதித்துறை
    • Option B: பாராளுமன்றம்
    • Option C: அரசு நெறிமுறையுறுத்தும் கொள்கை
    • Option D: அடிப்படை உரிமைகள்

    answer

    அடிப்படை உரிமைகள்

    question 6

    அரசியலமைப்பின் பிரிவு 28 எந்த வகையான கல்வியை அரசு உதவிபெறும் கல்வி நிறுவனங்களில் தடைசெய்துள்ளது ?

    • Option A: சமய போதனைகள்
    • Option B: நீதி நெறிக்கல்வி
    • Option C: உடற்கல்வி
    • Option D: இவற்றுள் எதுவுமில்லை

    answer

    சமய போதனைகள்

    question 7

    ஒரு நாடு சமயச்சார்பற்ற நாடாக எப்போது கருதப்படும் எனில் அது

    • Option A: ஒரு குறிப்பிட்ட சமயத்திற்கு முக்கியத்துவம் அளித்தால்
    • Option B: அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்களில் சமய போதனைகளைத் தடைசெய்தால்
    • Option C: ஒரு குறிப்பிட்ட சமயத்திற்கு முக்கியத்துவம் அளிக்காமல் இருந்தால்
    • Option D: எந்தசமய நம்பிக்கைகளையும் பரப்ப தடைவிதித்தால்

    answer

    ஒரு குறிப்பிட்ட சமயத்திற்கு முக்கியத்துவம் அளிக்காமல் இருந்தால்

    question 8

    சமயம் நமக்கு ......................போதிக்கவில்லை.

    • Option A: நற்பண்பை
    • Option B: அன்பை
    • Option C: இன்மையை
    • Option D: பகைமையை

    answer

    பகைமையை

    question 9

    சமயச்சார்பின்மை ஜனநாயகத்தின் ஒரு பகுதி அது ............அளிக்கிறது.

    • Option A: ஒற்றுமையை
    • Option B: பொறுப்புகள்
    • Option C: கடமைகள்
    • Option D: சலுகைகளை

    answer

    ஒற்றுமையை

    question 10

    ..................என்பது கடவுள் மற்றும் கடவுள்கள் மீது நம்பிக்கையற்றிருப்பதாகும்.

    • Option A: ஆத்திகம்
    • Option B: கடவுள் மறுத்தல்
    • Option C: கடவுள் நம்பிக்கை அற்று இருத்தல்
    • Option D: நாத்திகம்

    answer

    நாத்திகம்

    You can practice this lesson
    here
    Would you like to read similar lesson? Please go to School books lessons

    Leave a Reply


    Please send your report

    latest lessons

    {{message}}