tamiltutor

TAMIL TUTOR இணையத்தில் ஒரு
கல்வி பாசறை

கல்வி என்பது தகவல்களைச் சேகரிப்பதல்ல, அது சிந்திப்பதற்காக மூலையை பயிற்றுவிப்பது. -- ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்

8 ஆம் வகுப்பு சமூக அறிவியல், குடிமையியல் அலகு 2 - குடிமக்களும் குடியுரிமையும் பகுதி 2

எங்களுக்கு தொடர்ந்து ஆதரவளித்து வரும் உங்கள் அனைவருக்கும், முதலில் எங்களுடைய மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம். அறிமுகம்: ஒரு நாட்டின் அரசாங்கத்தைப் பற்றியும், மக்களின் உரிமைகள் மற்றும் கடமைகள் பற்றியும் படிக்கும் இயல் குடிமையியல் ஆகும். குடிமகன் (Citizen) என்ற சொல் ‘சிவிஸ்’ (Civis) என்னும் இலத்தீன் வார்த்தையிலிருந்து பெறப்பட்டது. இதன் பொருள் பண்டைய ரோமாபுரியில் இருந்த நகர நாடுகளில் ‘குடியிருப்பாளர்’ என்பதாகும். நகர நாடுகள் அமைப்புகள் மறைந்த பின்னர் இச்சொல் நாடுகளின் உறுப்பினர்என்ற பொருளில் பயன்படுத்தப்பட்டது. ஒரு நாட்டின் குடிமக்கள் அனைத்து விதமான குடியியல், அரசியல் உரிமைகளை அனுபவிக்க தகுதி உடையவர்கள் ஆவர். குடிமகனும் குடியுரிமையும்: ஒரு அரசால் வழங்கப்பட்ட சட்ட உரிமைகளையும், சலுகைகளையும் அனுபவிப்பவரும், அதே வேளையில் நாட்டின் சட்டங்களை மதித்து நடப்பவரும், அவருக்கான கடமைகளை நிறைவேற்றுபவருமே அந்நாட்டின் குடிமகன் ஆவார். குடியுரிமை என்பது ஒரு குடிமகன் அவர் விரும்பும் காலம் வரையில் அந்நாட்டில் சட்டப்படியாக வசிக்கும் உரிமையை வழங்குதலே ஆகும். மறவாமல் இந்த பதிவை உங்களுடைய நண்பர்களுக்கும் பகிர்ந்து உதவுங்கள். நீங்கள் விரைவில் ஒரு அரசு அதிகாரியாக ஆக, எங்களுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்! நாமும் படிப்போம், படித்த சமுதாயத்தை உருவாக்குவோம். 8th social science, குடிமையியல் அலகு 2 - குடிமக்களும் குடியுரிமையும், பகுதி 2, for tnpsc, trb, tet, net, set

Go to quiz

question 1

ஒரு நாட்டின்.............அந்நாடு வழங்கும் குடியியல் மற்றும் அரசியல் உரிமைகளைப் பெறத்தகுதியுடையவர் ஆவார்.

 • Option A: குடிமக்கள்
 • Option B: தொழிலாளர்
 • Option C: அரசாங்க ஊழியர்
 • Option D: அரசியல்வாதிகள்

answer

குடிமக்கள்

Abacus of English banner

ஆங்கிலத்தை சரளமாக பேச வேண்டுமா?

அவ்வாறு என்றால், இன்றே சேருங்கள் "Abacus of English -ள்".

உங்கள் சமூகத்தில், மதிப்பு வாய்ந்தவராக மாறுங்கள்!

இந்த வகுப்பை பற்றி மேலும் அறிந்து கொள்ள, கீழே உள்ள தொலைபேசி எண்களுக்கு, தயங்காமல் தொடர்பு கொள்ளுங்கள்.

 • VIGNESH 6383073556 /
 • VENKATESH 9360662257

 • அல்லது இங்கு முன்பதிவு செய்து, டெமோ வகுப்புகளை பாருங்கள்.

  question 2

  இந்திய அரசியலமைப்புச் சட்டம்............. குடியுரிமையை மட்டும் வழங்குகிறது.

  • Option A: இரட்டை மற்றும் ஒற்றை
  • Option B: இரட்டை
  • Option C: ஒற்றை
  • Option D: அனைத்து வகையான

  answer

  ஒற்றை

  question 3

  இந்தியக்கடவுச் சீட்டினைப் பெற்று ( Passport ) வெளிநாட்டில் வாழும் இந்தியக் குடிமகன்....................என அழைக்கப்படுகிறார்.

  • Option A: அகதிகள்
  • Option B: வெளிநாடுவாழ் இந்தியர்
  • Option C: குடியேறிகள்
  • Option D: நாடு கடத்தப்பட்டவர்

  answer

  வெளிநாடுவாழ் இந்தியர்

  question 4

  மக்கள் அனைவரும் உரிமைகள் மற்றும்................யும் இயற்கையாக பெற்றிருக்கின்றனர்.

  • Option A: பொறுப்புகள்
  • Option B: கடமைகள்
  • Option C: சுகந்திரம்
  • Option D: சலுகைகளை

  answer

  கடமைகள்

  question 5

  .............என்பது இளைஞர்களை நவீன சமுதாயத்தை வடிவமைப்பதில் பங்கேற்க செய்யும் ஒரு யோசனை ஆகும் .

  • Option A: சுதந்திரமான பேச்சுரிமை
  • Option B: உலகளாவிய குடியுரிமை
  • Option C: தாராளமான பொருளாதார உரிமை
  • Option D: சுதந்திரமான தொழில் உரிமை

  answer

  உலகளாவிய குடியுரிமை

  question 6

  1955 ஆம் ஆண்டு இந்தியக் குடியுரிமைச் சட்டம் குடியுரிமை பெறுவதற்கான ------ வழிமுறைகளை பரிந்துரைக்கிறது.

  • Option A: ஐந்து
  • Option B: நான்கு
  • Option C: மூன்று
  • Option D: இரண்டு

  answer

  ஐந்து

  question 7

  பாண்டிச்சேரி இந்தியாவுடன் இணைந்த பொழுது, இந்திய அரசு அம்மக்களுக்கு ------இல் இந்தியக் குடியுரிமைக்கான ஆணையை வழங்கியது.

  • Option A: 1968
  • Option B: 1956
  • Option C: 1962
  • Option D: 1961

  answer

  1962

  question 8

  இந்திய அரசின் வெளியுறவுத்துறை அமைச்சகத்தால் ----ஆண்டுகளுக்கு ஒருமுறை பிரவாசி பாரதிய தினம் கொண்டாடப்படுகிறது.

  • Option A: நான்கு
  • Option B: ஐந்து
  • Option C: இரண்டு
  • Option D: மூன்று

  answer

  இரண்டு

  question 9

  ஒருங்கிணைந்த இந்தியாவை உருவாக்கும் பொருட்டு, இந்திய மக்களிடையே சகோதரத்துவத்தையும், ---நமது அரசியலமைப்பு ஊக்குவிக்கிறது.

  • Option A: பொறுமையையும்
  • Option B: கருணையையும்
  • Option C: நம்பிக்கையும்
  • Option D: ஒற்றுமையையும்

  answer

  ஒற்றுமையையும்

  question 10

  இந்திய அரசியலமைப்பு ---வது சட்டத்திருத்தத்தின் படி இந்தியக் குடிமக்களுக்கான அடிப்படை கடமைகள் வரையறுக்கப்பட்டுள்ளன.

  • Option A: 56
  • Option B: 42
  • Option C: 44
  • Option D: 38

  answer

  42

  You can practice this lesson
  here
  Would you like to read similar lesson? Please go to School books lessons

  Leave a Reply


  Please send your report

  latest lessons

  {{message}}