
TAMIL TUTOR இணையத்தில் ஒரு
கல்வி பாசறை
TAMIL TUTOR இணையத்தில் ஒரு
கல்வி பாசறை
எங்களுக்கு தொடர்ந்து ஆதரவளித்து வரும் உங்கள் அனைவருக்கும், முதலில் எங்களுடைய மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம். அறிமுகம்: ஒரு நாட்டின் அரசாங்கத்தைப் பற்றியும், மக்களின் உரிமைகள் மற்றும் கடமைகள் பற்றியும் படிக்கும் இயல் குடிமையியல் ஆகும். குடிமகன் (Citizen) என்ற சொல் ‘சிவிஸ்’ (Civis) என்னும் இலத்தீன் வார்த்தையிலிருந்து பெறப்பட்டது. இதன் பொருள் பண்டைய ரோமாபுரியில் இருந்த நகர நாடுகளில் ‘குடியிருப்பாளர்’ என்பதாகும். நகர நாடுகள் அமைப்புகள் மறைந்த பின்னர் இச்சொல் நாடுகளின் உறுப்பினர்என்ற பொருளில் பயன்படுத்தப்பட்டது. ஒரு நாட்டின் குடிமக்கள் அனைத்து விதமான குடியியல், அரசியல் உரிமைகளை அனுபவிக்க தகுதி உடையவர்கள் ஆவர். குடிமகனும் குடியுரிமையும்: ஒரு அரசால் வழங்கப்பட்ட சட்ட உரிமைகளையும், சலுகைகளையும் அனுபவிப்பவரும், அதே வேளையில் நாட்டின் சட்டங்களை மதித்து நடப்பவரும், அவருக்கான கடமைகளை நிறைவேற்றுபவருமே அந்நாட்டின் குடிமகன் ஆவார். குடியுரிமை என்பது ஒரு குடிமகன் அவர் விரும்பும் காலம் வரையில் அந்நாட்டில் சட்டப்படியாக வசிக்கும் உரிமையை வழங்குதலே ஆகும். மறவாமல் இந்த பதிவை உங்களுடைய நண்பர்களுக்கும் பகிர்ந்து உதவுங்கள். நீங்கள் விரைவில் ஒரு அரசு அதிகாரியாக ஆக, எங்களுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்! நாமும் படிப்போம், படித்த சமுதாயத்தை உருவாக்குவோம். 8th social science, குடிமையியல் அலகு 2 - குடிமக்களும் குடியுரிமையும், பகுதி 2, for tnpsc, trb, tet, net, set
ஒரு நாட்டின்.............அந்நாடு வழங்கும் குடியியல் மற்றும் அரசியல் உரிமைகளைப் பெறத்தகுதியுடையவர் ஆவார்.
�
இந்திய அரசியலமைப்புச் சட்டம்............. குடியுரிமையை மட்டும் வழங்குகிறது.