tamiltutor

TAMIL TUTOR இணையத்தில் ஒரு
கல்வி பாசறை

நீங்கள் உறங்கும் போது வருவது அல்ல கனவு, உங்களை உறங்க விடாமல் செய்வதே கனவு. -- அப்துல் கலாம்

8 ஆம் வகுப்பு சமூக அறிவியல் குடிமையியல், அலகு 4 - மனித உரிமைகளும் ஐக்கிய நாடுகல் சபையும் பகுதி 2

எங்களுக்கு தொடர்ந்து ஆதரவளித்து வரும் உங்கள் அனைவருக்கும், முதலில் எங்களுடைய மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம். அறிமுகம்: பிறப்பால் அனைவரும் சமம். உலகில் உள்ள ஒவ்வொரு தனிமனிதனுக்கும் தன் விருப்பப்படி வாழ உரிமை உண்டு. மனித உரிமைகளானது தனிநபர்கள் மற்றும் சமூகம் தொடர்பானவை. மனித உரிமைகள் மக்கள் சுதந்திரமாக மற்றும் விருப்பப்படி வாழ்வதை உறுதிசெய்வதுடன் இயல்பாக பெறும் அனைத்து உரிமைகளையும் குறிப்பிடுகிறது. மக்களின் சமஉரிமைகளை ஒவ்வொரு நாடும் உறுதி செய்கிறது. மனித உரிமைகள் என்றால் என்ன? மனித உரிமைகள் என்பது இனம், பாலினம், தேசிய இனம், இனக்குழுக்களின் தன்மை, மொழி மற்றும் சமய வேறுபாடின்றி அனைத்து மனிதர்களுக்குமான இயல்பாந உரிமைகள் ஆகும். மனித உரிமைகளில் அடிமைத்தனம் மற்றும் சித்திரவதைகளிலிருந்து சுதந்திரம், கருத்து மற்றும் கருத்துச் சுதந்திரம் மற்றும் நியாயமான விசாரணை, வாழ்வதற்கான உரிமை. வேலை மற்றும் கல்விபெறும் உரிமை ஆகியவை அடங்கும். மறவாமல் இந்த பதிவை உங்களுடைய நண்பர்களுக்கும் பகிர்ந்து உதவுங்கள். நீங்கள் விரைவில் ஒரு அரசு அதிகாரியாக ஆக, எங்களுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்! நாமும் படிப்போம், படித்த சமுதாயத்தை உருவாக்குவோம். 8th social science, குடிமையியல் அலகு 4 - மனித உரிமைகளும் ஐக்கிய நாடுகல் சபையும், பகுதி 2, for tnpsc, trb, tet, net

Go to quiz

question 1

தவறான கூற்றை கண்டறியவும்

  • Option 1: தேசிய மனித உரிமைகள் ஆணையம் ஒரு சட்டரீதியான அமைப்பாகும் .
  • Option 2: தேசிய மனித உரிமைகள் ஆணையம் அரசியலமைப்பு சார்ந்த அமைப்பாகும்
  • Option 3: தேசிய மனித உரிமைகள் ஆணையம் ஒரு சுதந்திரமான அமைப்பாகும் ,
  • Option 4: தேசிய மனித உரிமைகள் ஆணையம் ஒரு பலதரப்பு நிறுவனங்களைக் கொண்டதாகும் .
  • Answer: தேசிய மனித உரிமைகள் ஆணையம் அரசியலமைப்பு சார்ந்த அமைப்பாகும்

answer

question 2

தேசிய மனித உரிமைகள் ஆணையம் குறித்து பின்வரும் எந்தகூற்று சரியானது அல்ல.

  • Option 1: இது 1993 இல் நிறுவப்பட்டது.
  • Option 2: மனித உரிமைமீறல் வழக்குகளில் குற்றவாளியைத்தண்டிக்க ஆணையத்திற்கு எந்தஉரிமையும் இல்லை.
  • Option 3: இந்தஆணையத்தின் தலைவரும் உறுப்பினர்களும் இந்திய உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்படுகிறார்கள்.
  • Option 4: இந்தஆணையம் தனது ஆண்டு அறிக்கையைமத்திய அரசு மற்றும் மாநில அரசுகளுக்கு அனுப்புகிறது.
  • Answer: இந்தஆணையத்தின் தலைவரும் உறுப்பினர்களும் இந்திய உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்படுகிறார்கள்.

answer

question 3

கூற்று: டிசம்பர் 10ஆம் நாள் மனித உரிமைகள் தினமாக அனுசரிக்கப்படுகிறது. காரணம்: இது எலினார் ரூஸ்வெல்டின் பிறந்த நாளை நினைவு கூர்கிறது.

  • Option 1: கூற்று சரி ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை
  • Option 2: கூற்று சரி காரணம் கூற்றை விளக்குகிறது
  • Option 3: கூற்று காரணம் இரண்டும் சரி
  • Option 4: கூற்று காரணம் இரண்டும் தவறு
  • Answer: கூற்று சரி ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை

answer

question 4

பின்வரும் கூற்றை ஆராய்க 1) மாநில மனித உரிமைகள் ஆணையம் பல உறுப்பினர்களைக் கொண்ட அமைப்பு ஆகும். 2) மாநில மனித உரிமைகள் ஆணையம் ஒரு தலைவர் மற்றும் மூன்று உறுப்பினர்களைக் கொண்டதாகும் மேற்கூறிய கூற்றுகளில் எது / எவைசரியானது / சரியானவை?

  • Option 1: 1 மட்டும்
  • Option 2: 2 மட்டும்
  • Option 3: 1, 2
  • Option 4: எதுவுமில்லை
  • Answer: எதுவுமில்லை

answer

question 5

ஒவ்வொரு தனி மனிதனும் கண்ணியமான வாழ்க்கை வாழ ............ உண்டு.

  • Option 1: உரிமை
  • Option 2: கடமை
  • Option 3: பொறுப்பு
  • Option 4: சலுகை
  • Answer: உரிமை

answer

question 6

மனித உரிமைகள் மற்றும் வாழ்வியல் உரிமைகள் ஒரே மாதிரியானவை .

  • Option 1: சரி
  • Option 2: ___
  • Option 3: தவறு
  • Option 4: ___
  • Answer: தவறு

answer

question 7

மனித மற்றும் குடிமகனின் உரிமைகள் அறிவிப்பு இந்தியாவில் அறிவிக்கப்பட்டது .

  • Option 1: சரி
  • Option 2: ___
  • Option 3: தவறு
  • Option 4: ___
  • Answer: தவறு

answer

question 8

1993 ஆம் ஆண்டு மனித உரிமைச் சட்டம் தேசிய மனித உரிமைகள் ஆணையம் உருவாக வழிவகுத்தது ,

  • Option 1: சரி
  • Option 2: ___
  • Option 3: தவறு
  • Option 4: ___
  • Answer: சரி

answer

question 9

பாதிக்கப்பட்டவர்களுக்குத் தண்டனை வழங்க தேசிய மனித உரிமைகள் ஆணையம் அதிகாரம் பெற்றுள்ளது .

  • Option 1: சரி
  • Option 2: ___
  • Option 3: தவறு
  • Option 4: ___
  • Answer: தவறு

answer

question 10

மனித உரிமைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக தேசிய , மாநில அளவிலான மனித உரிமைகள் ஆணையம் நிறுவப்பட்டுள்ளது .

  • Option 1: சரி
  • Option 2: ___
  • Option 3: தவறு
  • Option 4: ___
  • Answer: சரி

answer

தமிழக பள்ளி பாடப்புத்தகத்தில் இருந்து, தேர்வில் கேட்க அதிக வாய்ப்புள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட தரமான கேள்விகள் இதோ, உங்களுக்காக தரப்பட்டிருக்கிறது. முடிந்தால்? முழு மதிப்பெண் எடுத்துக் காட்டுங்கள். உங்களுக்கு எங்களுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்!
Next: 8 ஆம் வகுப்பு சமூக அறிவியல் குடிமையியல், அலகு 4 - மனித உரிமைகளும் ஐக்கிய நாடுகல் சபையும் பகுதி 3
Would you like to read similar lesson? Please go to School books lessons

Leave a Reply


Please send your report

latest lessons

{{message}}