tamiltutor

TAMIL TUTOR இணையத்தில் ஒரு
கல்வி பாசறை

நீங்கள் உறங்கும் போது வருவது அல்ல கனவு, உங்களை உறங்க விடாமல் செய்வதே கனவு. -- அப்துல் கலாம்

மக்களின் புரட்சி, 8 ஆம் வகுப்பு சமூக அறிவியல் - அலகு 4 பகுதி 2

எங்களுக்கு தொடர்ந்து ஆதரவளித்து வரும் உங்கள் அனைவருக்கும், முதலில் எங்களுடைய மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம். அறிமுகம்: 1857ஆம் ஆண்டு பிளாசிப் போருக்குப் பின் நாட்டின் அரசியல் சமூக. பொருளாதார நிலையைப் பாதிக்கும் வகையில் ஆங்கிலேயரால் நாட்டின் பல பகுதிகளில் அரசியல் மற்றும் பொரளாதார ஆதிக்கம் ஏற்படுத்தப்பட்டது. இது பல திறன்மிக்க நிலக்கிழார்கள் மற்றும் தலைவர்களிடையே அதிகார வேறுபாட்டிற்கு வழிகோலியது. இயற்கையாகவே அவர்களுள் பலர் ஆங்கிலேயர்களுக்கு எதிராக புரட்சியில் ஈடுபட்டனர். ஆங்கிலேயர்கள் பாளையக்காரர்களிடமிருந்து வருடாந்திர கப்பம் வசூலிக்கும் உரிமை பெற்றிருந்ததாகக் கருதப்படுகிறது. ஆங்கிலேயர்களுக்கு முதல் எதிர்ப்பு பூலித்தேவரால் ஏற்பட்டது. அவருக்குப்பின் மற்ற பாளையக்காரர்களான வீரபாண்டிய கட்டபொம்மன், ஊமைத்துரை, மருது சகோதரர்கள் மற்றும் தீரன் சின்னமலை ஆகியோரும் ஆங்கிலேயருக்கெதிரான எதிர்ப்பினைத் தெரிவித்தனர். மறவாமல் இந்த பதிவை உங்களுடைய நண்பர்களுக்கும் பகிர்ந்து உதவுங்கள். நீங்கள் விரைவில் ஒரு அரசு அதிகாரியாக ஆக, எங்களுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்! நாமும் படிப்போம், படித்த சமுதாயத்தை உருவாக்குவோம். 8th social science, அலகு 4 - மக்களின் புரட்சி பகுதி 2, for tnpsc, trb, tet, net

Go to quiz

question 1

கட்டபொம்மனின் முன்னோர்கள் ..........................பகுதியைச் சார்ந்தவர்கள்.

 • Option 1: தமிழகம்
 • Option 2: ஆந்திரா
 • Option 3: கர்நாடகா
 • Option 4: தெலுங்கானா
 • Answer: ஆந்திரா

answer

question 2

..............................தமிழர்களால் வீர மங்கை எனவும் தென்னிந்தியாவின் ஜான்சி ராணி எனவும் அறியப்பட்டார்.

 • Option 1: தில்லையாடி வள்ளியம்மை
 • Option 2: மூவலூர் ராமாமிர்தம் அம்மையார்
 • Option 3: கமலாபாய் அம்மையார்
 • Option 4: வேலு நாச்சியார் அம்மையார்
 • Answer: வேலு நாச்சியார் அம்மையார்

answer

question 3

....................சிவகங்கையின் சிங்கம் என அழைக்கப்படுகிறார்.

 • Option 1: ஊமத்துரை
 • Option 2: சின்ன மருது
 • Option 3: தீரன் சின்னமலை
 • Option 4: பூலிதேவன்
 • Answer: சின்ன மருது

answer

question 4

1857 ஆம் ஆண்டு புரட்சியை ................. என்பவர் முதல் இந்திய சுதந்திரப் போர் என விவரிக்கிறார்.

 • Option 1: வி.டி.சவார்க்கர்
 • Option 2: R S ஷர்மா
 • Option 3: மோதிலால் பனர்சிதாஸ்
 • Option 4: ஆர்.கே.முகர்ஜி
 • Answer: வி.டி.சவார்க்கர்

answer

question 5

விஜய நகர ஆட்சியாளர்கள் தங்கள் மாகாணங்களில் நாயக்கர்களை நியமித்தனர்.

 • Option 1: சரி
 • Option 2: ___
 • Option 3: தவறு
 • Option 4: ___
 • Answer: சரி

answer

question 6

சிவசுப்பிரமணியம் என்பவர் மருது பாண்டியர்களின் அமைச்சர் ஆவர்

 • Option 1: சரி
 • Option 2: ___
 • Option 3: தவறு
 • Option 4: ___
 • Answer: தவறு

answer

question 7

1799 அ’டோபர் 17ஆம் நாள் கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்டார்.

 • Option 1: சரி
 • Option 2: ___
 • Option 3: தவறு
 • Option 4: ___
 • Answer: சரி

answer

question 8

திப்பு சுல்தானின் மூத்த மகன் பதே ஹைதர் ஆவார்.

 • Option 1: சரி
 • Option 2: ___
 • Option 3: தவறு
 • Option 4: ___
 • Answer: சரி

answer

question 9

பின்வரும் கூற்றை ஆராய்ந்து சரியான விடையைக் குறிப்பிடவும்? 1. வேலூர் புரட்சி 1801ஆம் ஆண்டு ஏற்பட்டது. 2. நான்காம் மைசூர் போருக்குப்பின் திப்புவின் குடும்பத்தினர் வேலூர் கோட்டையில் சிறைவைக்கப்பட்டனர். 3. வேலூர் புரட்சியின் போது வில்லியம் பெண்டிங் சென்ன்னயின் ஆளுநராக இருந்தார். 4. ஆங்கிலேயரு’கு எதிரான வேலூர் கலகத்தின் வெற்றி இந்திய வரலாற்றில் ஒரு முக்கியமான நிகழ்வு ஆகும்.

 • Option 1: 3 மற்றும் 4 சரி
 • Option 2: 2 மற்றும் நான்கு சரி
 • Option 3: 1 மற்றும் நான்கு சரி
 • Option 4: 2 மற்றும் 3 சரி
 • Answer: 2 மற்றும் 3 சரி

answer

2

question 10

தவறான இணையைக்கண்டுபிடிக்கவும்

 • Option 1: மருது பாண்டியர் - எட்டயபுரம்
 • Option 2: கோபால நாயக்கர் - திண்டுக்கல்
 • Option 3: கேரளவர்மன் - மலபார்
 • Option 4: துண்டாஜி - மைசூர்
 • Answer: மருது பாண்டியர் - எட்டயபுரம்

answer

question 11

மாறுபட்ட ஒன்றைக்கண்டுபிடி

 • Option 1: கட்டபொம்மன்
 • Option 2: ஊமைத்துரை
 • Option 3: செவத்தையா
 • Option 4: திப்பு சுல்தான்
 • Answer:

answer

தமிழக பள்ளி பாடப்புத்தகத்தில் இருந்து, தேர்வில் கேட்க அதிக வாய்ப்புள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட தரமான கேள்விகள் இதோ, உங்களுக்காக தரப்பட்டிருக்கிறது. முடிந்தால்? முழு மதிப்பெண் எடுத்துக் காட்டுங்கள். உங்களுக்கு எங்களுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்!
Next: இந்தியாவில் கல்வி வளர்ச்சி அலகு 5 8 ஆம் வகுப்பு சமூக அறிவியல் பகுதி 1
Would you like to read similar lesson? Please go to School books lessons

Leave a Reply


Please send your report

latest lessons

{{message}}