
TAMIL TUTOR இணையத்தில் ஒரு
கல்வி பாசறை
TAMIL TUTOR இணையத்தில் ஒரு
கல்வி பாசறை
எங்களுக்கு தொடர்ந்து ஆதரவளித்து வரும் உங்கள் அனைவருக்கும், முதலில் எங்களுடைய மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம். அறிமுகம்: ஆசிரியர்: காலை வணக்கம் மாணவர்களே. மாணவர்கள்: காலை வணக்கம் ஐயா. ஆசிரியர்: இன்று அனைவரும் பள்ளிக்கு வருகைப் புரிந்துள்ளீர்களா? கிருத்திகா: சுருதி, இன்று பள்ளிக்கு வரவில்லை ஐயா. ஆசிரியர்: அவள் ஏன் இன்று பள்ளிக்கு வரவில்லை? பவித்ரா: ஐயா அவளுக்கு என்ன நேர்ந்தது என உங்களுக்கு தெரியாதா? ஆசிரியர்: தெரியாது, அவளுக்கு என்ன நேர்ந்தது? தேஷ்மிதா: ஐயா நேற்று அவள் வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருக்கையில் கனமழையின் காரணமாக ஒரு பெரிய மரக்கிளை அவள் மேல் விழுந்ததால் காயமடைந்துள்ளாள். ஆசிரியர்: ஐயோ கடவுளே! என்ன பரிதாபம் இது. மாணவர்களே! நீங்கள் அனைவரும் வெளியே செல்லும் போது ஹசார்டு (Hazard) - ஐத் தவிர்க்க மிகவும் கவனமாக இருக்க வேண்டும். கமலேஷ்: ஐயா ஹசார்டு என்றால் என்ன? ஹசார்டு என்றால் பெல்ஜியம் நாட்டு கால்பந்தாட்ட வீரர் Hazard - ஐக் குறிப்பிடுகிறீர்களா? ஆசிரியர்: இல்லை இல்லை. ஹசார்டு என்பது புவியிலுள்ள உயிர் மற்றும் உயிரற்ற பொருட்களைப் பாதிக்கக்கூடிய நிகழ்வை இடர் (Hazard) என்கிறேம். இந்த இடரைப் பற்றி தெரிந்து கொள்வதற்கு இன்று சரியான நாள், இப்பாடத்தைப் பற்றி விளக்கமாக அறிவோம். இடர்கள்: இருபத்தியராம் நூற்றாண்டின் தொடக்கத்தில் புவியானது முன் எப்போதும் இல்லாத அளவிற்கு அதிக எண்ணிக்கையிலான மக்கள் தகை பெருக்கத்திற்கும் மக்கள் நலமாகவும் வளமாகவும் வாழ உறுதுணையாக இருந்தது. அதே சமயம் மக்கள் எதிர்கொள்ளும் ஆபத்துக்கள் குறித்த விழிப்புணர்வு குறைவாக இருந்தது. இவற்றை மனதில் கொண்டு இப்பாடமானது இடர்பாடுகள் குறித்து மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது. ஒரு பொருளோ, நபரோ, நிகழ்வோ அல்லது காரணிய மக்கள் அல்லது கட்டமைப்புகள் மற்றும் பொருளாதார வளங்களுக்கு அச்சுறுத்தலாகவும், இழப்பு ஏற்படுத்தும் வகையிலும் அமைந்தால் அது இடர் (Hazard) எனப்படும். மறவாமல் இந்த பதிவை உங்களுடைய நண்பர்களுக்கும் பகிர்ந்து உதவுங்கள். நீங்கள் விரைவில் ஒரு அரசு அதிகாரியாக ஆக, எங்களுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்! நாமும் படிப்போம், படித்த சமுதாயத்தை உருவாக்குவோம். 8th social science, புவியியல் அலகு 5 - இடர்கள், பகுதி 1, for tnpsc, trb, tet, net, set
காற்றில் உள்ள நைட்ரஜன் சதவீதம்
7
இந்தியப் பெருங்கடலில் சுனாமி ஆம் ஆண்டில் ஏற்பட்டது.