tamiltutor

TAMIL TUTOR இணையத்தில் ஒரு
கல்வி பாசறை

நீங்கள் உறங்கும் போது வருவது அல்ல கனவு, உங்களை உறங்க விடாமல் செய்வதே கனவு. -- அப்துல் கலாம்

புவியியல் அலகு 4 - இடம் பெயர்தல் மற்றும் நகரமயமாதல், 8 ஆம் வகுப்பு சமூக அறிவியல் பகுதி 2

எங்களுக்கு தொடர்ந்து ஆதரவளித்து வரும் உங்கள் அனைவருக்கும், முதலில் எங்களுடைய மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம். அறிமுகம்: இராஜேஷ் மற்றும் சுரேஷ் ஆகியோர் பள்ளியில் புதிதாக சேர்ந்த மாணவர்கள். அவர்களுக்கு எட்டாம் வகுப்பு அ பிரிவு ஒதுக்கப்பட்டது. வகுப்பாசிரியர் மற்றும் மற்ற மாணவர்கள் அவர்களை வகுப்பறைக்குள் வரவேற்றனர். இன்று இரண்டு புதிய நண்பர்களைப் பெறப்போகிறீர்கள் என ஆசிரியர் மற்ற மாணவர்களிடம் கூறினார். அடுத்து நீங்கள் அனைவரும் உங்கள் பெயர், ஊர், எங்கிருந்து வருகிறீர்கள் எனக் கூறி உங்களை அறிமுகப்படுத்திக் கொள்ளுங்கள் என்று கூறினார். அவர்கள் முதல் வரிசை இருக்கையிலிருந்து அறிமுகம் செய்துகொள்ள ஆரம்பித்தனர். இராஜேஷ் மற்றும் சுரேஷ் இருவரும் இராண்டாவது வரிசை இருக்கையில் அமர்ந்திருந்தனர். இராஜேஷின் முறை வந்த பொழுது. என் பெயர் இராஜேஷ், என்னுடைய அம்மா இப்பள்ளிக்கு ஆசிரியராக மாறுதலாகியுள்ளதால் நாங்கள் சென்னையிலிருந்து கிருஷ்ணகிரிக்கு இடம் பெயர்ந்துளோம் எனக் கூறினான். அடுத்ததாக சுரேஷ் தன் அறிமுகத்தின் பொழுது என் பெயர் சுரேஷ் புதுப்பட்டி கிராமத்தில் இருந்து வருகிறேன். இவ்வூர் இப்பள்ளியில் இருந்து சுமார் ஐந்து கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. மேலும் ஆசிரியரை நோக்கி அம்மா இராஜேஷ் கூறிய இடம் பெயர்தல் என்ற வார்த்தைக்கு பொருள் என்னவென்று கூறுங்கள் எனக் கேட்டான். ஆசிரியர் நன்று இப்பாடத்தில் இடம் பெயர்தல் பற்றி விரிவாக விளக்குகிறேன் என கூறினார். இடம் பெயர்தல்: இடம் பெயர்தல் பற்றி பல வல்லுநர்கள் பல்வேறு முறைகளில் வரையறுத்துள்ளனர். ஒரு நபரோ அல்லது ஒரு குழுவோ நிரந்தரமாகவோ, தற்காலிகமாகவோ தம் இருப்பிடத்தை விட்டு குறிப்பிடத்தக்க தொலைவிற்கு வசிக்கும் இடத்தை மாற்றுவதே இடம் பெயர்தல் எனப்படும். எனவே இடம் பெயர்தல் என்பது மக்கள் ஓர் இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு நகர்வதைக் குறிக்கிறது. மறவாமல் இந்த பதிவை உங்களுடைய நண்பர்களுக்கும் பகிர்ந்து உதவுங்கள். நீங்கள் விரைவில் ஒரு அரசு அதிகாரியாக ஆக, எங்களுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்! நாமும் படிப்போம், படித்த சமுதாயத்தை உருவாக்குவோம். 8th social science, புவியியல் அலகு 4 - இடம் பெயர்தல் மற்றும் நகரமயமாதல், பகுதி 2, for tnpsc, trb, tet, net, set

Go to quiz

question 1

குடிசைப்பகுதிகள் பொதுவாக பெருநகரங்களில் காணப்படுகிறது.

  • Option 1: சரி
  • Option 2: ___
  • Option 3: தவறு
  • Option 4: ___

answer

சரி

question 2

நவீன காலத்தில், ஒரேசமயத்தில் அதிக மக்களின் இடம்பெயர்வு நடைபெறுவதில்லை.

  • Option 1: சரி
  • Option 2: ___
  • Option 3: தவறு
  • Option 4: ___

answer

சரி

question 3

நகரமயமாக்கம் குறுகியக் கால வரலாறுடையது.

  • Option 1: சரி
  • Option 2: ___
  • Option 3: தவறு
  • Option 4: ___

answer

தவறு

question 4

பெருநகரங்கள் மற்றும் நகரங்கள் சுற்றுச்சூழல் சீர்கேட்டிற்கு அதிக அளவு காரணமாக உள்ளன.

  • Option 1: சரி
  • Option 2: ___
  • Option 3: தவறு
  • Option 4: ___

answer

சரி

question 5

மேய்ச்சலுக்காக கால்நடைகளை இடமாற்றம் செய்வது, பருவகால இடம் பெயர்வு எனவும் அழைக்கப்படுகிறது

  • Option 1: சரி
  • Option 2: ___
  • Option 3: தவறு
  • Option 4: ___

answer

சரி

question 6

கூற்று: நகரமயமாதல் முக்கியமாக கிராமப்புறமக்கள் நகர்புறத்திற்கு இடம் பெயர்வதால் ஏற்படுவதாகும். காரணம்: கிராமத்தில் இருந்து நகரத்திற்கு இடம் பெயர்தல் முதன்மையான ஒன்றல்ல

  • Option 1: கூற்று சரி ஆனால் காரணம் தவறு
  • Option 2: கூற்று மற்றும் காரணம் இரண்டும் தவறு
  • Option 3: கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி
  • Option 4: கூற்று தவறு மற்றும் காரணம் சரி

answer

கூற்று சரி ஆனால் காரணம் தவறு

question 7

சரியாக பொருந்தாதவற்றை கண்டறிக?

  • Option 1: குடி பெயர்தல் - வெளியேறுதல்
  • Option 2: இழு காரணி - வறுமை
  • Option 3: உந்து காரணி - வேலைவாய்ப்பின்மை
  • Option 4: குடியேற்றம் - குடி புகுபவர்

answer

இழு காரணி - வறுமை

question 8

இடம்பெயர்தலுக்கான அரசியல் காரணங்கள்?

  • Option 1: காலனி ஆதிக்கம்
  • Option 2: போர்கள்
  • Option 3: அரசாங்க கொள்கைகள்
  • Option 4: அனைத்தும்

answer

அனைத்தும்

question 9

உள்நாட்டு இடம்பெயர்வு ----வகைகளாக பிரிக்கப்படுகிறது?

  • Option 1: மூன்று
  • Option 2: நான்கு
  • Option 3: இரண்டு
  • Option 4: ஐந்து

answer

நான்கு

question 10

ஒரு நாட்டின் எல்லைகளை கடந்து நடைபெறும் இடப்பெயர்வு -----என்று அழைக்கப்படுகிறது.

  • Option 1: அகதி
  • Option 2: வெளியே நடக்கும் இடம் பெயர்வு
  • Option 3: தேச இடப்பெயர்வு
  • Option 4: சர்வதேச இடம்பெயர்வு

answer

சர்வதேச இடம்பெயர்வு

தமிழக பள்ளி பாடப்புத்தகத்தில் இருந்து, தேர்வில் கேட்க அதிக வாய்ப்புள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட தரமான கேள்விகள் இதோ, உங்களுக்காக தரப்பட்டிருக்கிறது. முடிந்தால்? முழு மதிப்பெண் எடுத்துக் காட்டுங்கள். உங்களுக்கு எங்களுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்!
Next: புவியியல் அலகு 5 - இடர்கள், 8 ஆம் வகுப்பு சமூக அறிவியல் பகுதி 1
Would you like to read similar lesson? Please go to School books lessons

Leave a Reply


Please send your report

latest lessons

{{message}}