tamiltutor

TAMIL TUTOR இணையத்தில் ஒரு
கல்வி பாசறை

நீங்கள் உறங்கும் போது வருவது அல்ல கனவு, உங்களை உறங்க விடாமல் செய்வதே கனவு. -- அப்துல் கலாம்

புவியியல் அலகு 4 - இடம் பெயர்தல் மற்றும் நகரமயமாதல், 8 ஆம் வகுப்பு சமூக அறிவியல் பகுதி 1

எங்களுக்கு தொடர்ந்து ஆதரவளித்து வரும் உங்கள் அனைவருக்கும், முதலில் எங்களுடைய மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம். அறிமுகம்: இராஜேஷ் மற்றும் சுரேஷ் ஆகியோர் பள்ளியில் புதிதாக சேர்ந்த மாணவர்கள். அவர்களுக்கு எட்டாம் வகுப்பு அ பிரிவு ஒதுக்கப்பட்டது. வகுப்பாசிரியர் மற்றும் மற்ற மாணவர்கள் அவர்களை வகுப்பறைக்குள் வரவேற்றனர். இன்று இரண்டு புதிய நண்பர்களைப் பெறப்போகிறீர்கள் என ஆசிரியர் மற்ற மாணவர்களிடம் கூறினார். அடுத்து நீங்கள் அனைவரும் உங்கள் பெயர், ஊர், எங்கிருந்து வருகிறீர்கள் எனக் கூறி உங்களை அறிமுகப்படுத்திக் கொள்ளுங்கள் என்று கூறினார். அவர்கள் முதல் வரிசை இருக்கையிலிருந்து அறிமுகம் செய்துகொள்ள ஆரம்பித்தனர். இராஜேஷ் மற்றும் சுரேஷ் இருவரும் இராண்டாவது வரிசை இருக்கையில் அமர்ந்திருந்தனர். இராஜேஷின் முறை வந்த பொழுது. என் பெயர் இராஜேஷ், என்னுடைய அம்மா இப்பள்ளிக்கு ஆசிரியராக மாறுதலாகியுள்ளதால் நாங்கள் சென்னையிலிருந்து கிருஷ்ணகிரிக்கு இடம் பெயர்ந்துளோம் எனக் கூறினான். அடுத்ததாக சுரேஷ் தன் அறிமுகத்தின் பொழுது என் பெயர் சுரேஷ் புதுப்பட்டி கிராமத்தில் இருந்து வருகிறேன். இவ்வூர் இப்பள்ளியில் இருந்து சுமார் ஐந்து கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. மேலும் ஆசிரியரை நோக்கி அம்மா இராஜேஷ் கூறிய இடம் பெயர்தல் என்ற வார்த்தைக்கு பொருள் என்னவென்று கூறுங்கள் எனக் கேட்டான். ஆசிரியர் நன்று இப்பாடத்தில் இடம் பெயர்தல் பற்றி விரிவாக விளக்குகிறேன் என கூறினார். இடம் பெயர்தல்: இடம் பெயர்தல் பற்றி பல வல்லுநர்கள் பல்வேறு முறைகளில் வரையறுத்துள்ளனர். ஒரு நபரோ அல்லது ஒரு குழுவோ நிரந்தரமாகவோ, தற்காலிகமாகவோ தம் இருப்பிடத்தை விட்டு குறிப்பிடத்தக்க தொலைவிற்கு வசிக்கும் இடத்தை மாற்றுவதே இடம் பெயர்தல் எனப்படும். எனவே இடம் பெயர்தல் என்பது மக்கள் ஓர் இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு நகர்வதைக் குறிக்கிறது. மறவாமல் இந்த பதிவை உங்களுடைய நண்பர்களுக்கும் பகிர்ந்து உதவுங்கள். நீங்கள் விரைவில் ஒரு அரசு அதிகாரியாக ஆக, எங்களுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்! நாமும் படிப்போம், படித்த சமுதாயத்தை உருவாக்குவோம். 8th social science, புவியியல் அலகு 4 - இடம் பெயர்தல் மற்றும் நகரமயமாதல், பகுதி 1, for tnpsc, trb, tet, net, set

Go to quiz

question 1

மக்கள் ...........லிருந்துக்கு நல்ல வேலை வாய்ப்பினைத் தேடி குடிபெயர்கின்றனர்.

  • Option 1: கிராமப்புறத்திலிருந்து நகர்புறத்திற்கு
  • Option 2: நகர் புறத்திலிருந்து கிராமப்புறத்திற்கு
  • Option 3: மலையிலிருந்து சமவெளிக்கு
  • Option 4: சமவெளியிலிருந்து மலைப்பகுதிக்கு

answer

கிராமப்புறத்திலிருந்து நகர்புறத்திற்கு

question 2

ஒரு நபர் சொந்தநாட்டில் இருந்து மற்றொரு நாட்டிற்கு இடம் பெயர்தல் எனப்படுகிறது.

  • Option 1: குடிபுகுபவர்
  • Option 2: அகதி
  • Option 3: குடியேறுபவர்
  • Option 4: புகலிடம் தேடுபவர்

answer

குடியேறுபவர்

question 3

வளம் மிகுந்த வேளாண்மை நிலம் தேடி இடம் பெயர்தல் நடைபெறுவது

  • Option 1: கிராமத்தில் இருந்து கிராமத்திற்கு
  • Option 2: கிராமத்தில் இருந்து நகரத்திற்கு
  • Option 3: நகரத்தில் இருந்து கிராமத்திற்கு
  • Option 4: நகரத்தில் இருந்து நகரத்திற்கு

answer

கிராமத்தில் இருந்து கிராமத்திற்கு

question 4

போரின் காரணமாக நடைபெறும் குடிபெயர்வு .............ஐ சார்ந்தது.

  • Option 1: மக்களியல்
  • Option 2: சமூக மற்றும் கலாச்சாரம்
  • Option 3: அரசியல்
  • Option 4: பொருளாதாரம்

answer

அரசியல்

question 5

வரலாற்றுக்கு முந்தையகாலத்தில் நகரமயமாக்கலுக்கு முக்கிய காரணம்

  • Option 1: மிகையான உணவு தானிய உற்பத்தி
  • Option 2: கால்நடைவளர்ப்பு
  • Option 3: மீன் பிடித்தல்
  • Option 4: வேட்டையாடுதல்

answer

மிகையான உணவு தானிய உற்பத்தி

question 6

நகரமயமாதல் ..............எண்ணிக்கையிலான காரணிகளால் தீர்மானிக்கப்படுகின்றன.

  • Option 1: மூன்று
  • Option 2: ஐந்து
  • Option 3: நான்கு
  • Option 4: இரண்டு

answer

மூன்று

question 7

..........என்பது கிராமப்புற பகுதிகளில் செயல்படும் முக்கிய உந்துக் காரணியாகும்.

  • Option 1: வறுமை
  • Option 2: உணவு பற்றாக்குறை
  • Option 3: வேலையின்மை
  • Option 4: அனைத்தும்

answer

அனைத்தும்

question 8

இந்தியாவின்..........மாநகரம் உலகிலேயே இரண்டாவது அதிக நகர மக்கள் தொகையைக் கொண்டது.

  • Option 1: புதுடெல்லி
  • Option 2: ஹைதராபாத்
  • Option 3: பெங்களூரு
  • Option 4: சென்னை

answer

புதுடெல்லி

question 9

ஒரு நபர் தன்னார்வத்துடனும் விருப்பத்துடனும் நல்லவசிப்பிடம் தேடி இடம் பெயர்தல் .............இடம்பெயர்வு எனப்படும்.

  • Option 1: சூழ்நிலை இடம்பெயர்வு
  • Option 2: திட்டமிடப்பட்ட இடம்பெயர்வு
  • Option 3: தன்னார்வு இடம்பெயர்வு
  • Option 4: கட்டாய இடம்பெயர்வு

answer

தன்னார்வு இடம்பெயர்வு

question 10

நவீன காலத்தில் நகர்ப்புற வளர்ச்சி .................வளர்ச்சியால் அதிகரிக்கிறது.

  • Option 1: தொழில் துறை
  • Option 2: போக்குவரத்து
  • Option 3: தொலைத்தொடர்பு
  • Option 4: அனைத்தும்

answer

அனைத்தும்

தமிழக பள்ளி பாடப்புத்தகத்தில் இருந்து, தேர்வில் கேட்க அதிக வாய்ப்புள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட தரமான கேள்விகள் இதோ, உங்களுக்காக தரப்பட்டிருக்கிறது. முடிந்தால்? முழு மதிப்பெண் எடுத்துக் காட்டுங்கள். உங்களுக்கு எங்களுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்!
Next: புவியியல் அலகு 4 - இடம் பெயர்தல் மற்றும் நகரமயமாதல், 8 ஆம் வகுப்பு சமூக அறிவியல் பகுதி 2
Would you like to read similar lesson? Please go to School books lessons

Leave a Reply


Please send your report

latest lessons

{{message}}