
TAMIL TUTOR இணையத்தில் ஒரு
கல்வி பாசறை
TAMIL TUTOR இணையத்தில் ஒரு
கல்வி பாசறை
எங்களுக்கு தொடர்ந்து ஆதரவளித்து வரும் உங்கள் அனைவருக்கும், முதலில் எங்களுடைய மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம். அறிமுகம்: இராஜேஷ் மற்றும் சுரேஷ் ஆகியோர் பள்ளியில் புதிதாக சேர்ந்த மாணவர்கள். அவர்களுக்கு எட்டாம் வகுப்பு அ பிரிவு ஒதுக்கப்பட்டது. வகுப்பாசிரியர் மற்றும் மற்ற மாணவர்கள் அவர்களை வகுப்பறைக்குள் வரவேற்றனர். இன்று இரண்டு புதிய நண்பர்களைப் பெறப்போகிறீர்கள் என ஆசிரியர் மற்ற மாணவர்களிடம் கூறினார். அடுத்து நீங்கள் அனைவரும் உங்கள் பெயர், ஊர், எங்கிருந்து வருகிறீர்கள் எனக் கூறி உங்களை அறிமுகப்படுத்திக் கொள்ளுங்கள் என்று கூறினார். அவர்கள் முதல் வரிசை இருக்கையிலிருந்து அறிமுகம் செய்துகொள்ள ஆரம்பித்தனர். இராஜேஷ் மற்றும் சுரேஷ் இருவரும் இராண்டாவது வரிசை இருக்கையில் அமர்ந்திருந்தனர். இராஜேஷின் முறை வந்த பொழுது. என் பெயர் இராஜேஷ், என்னுடைய அம்மா இப்பள்ளிக்கு ஆசிரியராக மாறுதலாகியுள்ளதால் நாங்கள் சென்னையிலிருந்து கிருஷ்ணகிரிக்கு இடம் பெயர்ந்துளோம் எனக் கூறினான். அடுத்ததாக சுரேஷ் தன் அறிமுகத்தின் பொழுது என் பெயர் சுரேஷ் புதுப்பட்டி கிராமத்தில் இருந்து வருகிறேன். இவ்வூர் இப்பள்ளியில் இருந்து சுமார் ஐந்து கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. மேலும் ஆசிரியரை நோக்கி அம்மா இராஜேஷ் கூறிய இடம் பெயர்தல் என்ற வார்த்தைக்கு பொருள் என்னவென்று கூறுங்கள் எனக் கேட்டான். ஆசிரியர் நன்று இப்பாடத்தில் இடம் பெயர்தல் பற்றி விரிவாக விளக்குகிறேன் என கூறினார். இடம் பெயர்தல்: இடம் பெயர்தல் பற்றி பல வல்லுநர்கள் பல்வேறு முறைகளில் வரையறுத்துள்ளனர். ஒரு நபரோ அல்லது ஒரு குழுவோ நிரந்தரமாகவோ, தற்காலிகமாகவோ தம் இருப்பிடத்தை விட்டு குறிப்பிடத்தக்க தொலைவிற்கு வசிக்கும் இடத்தை மாற்றுவதே இடம் பெயர்தல் எனப்படும். எனவே இடம் பெயர்தல் என்பது மக்கள் ஓர் இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு நகர்வதைக் குறிக்கிறது. மறவாமல் இந்த பதிவை உங்களுடைய நண்பர்களுக்கும் பகிர்ந்து உதவுங்கள். நீங்கள் விரைவில் ஒரு அரசு அதிகாரியாக ஆக, எங்களுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்! நாமும் படிப்போம், படித்த சமுதாயத்தை உருவாக்குவோம். 8th social science, புவியியல் அலகு 4 - இடம் பெயர்தல் மற்றும் நகரமயமாதல், பகுதி 2, for tnpsc, trb, tet, net, set
குடிசைப்பகுதிகள் பொதுவாக பெருநகரங்களில் காணப்படுகிறது.
�
நவீன காலத்தில், ஒரேசமயத்தில் அதிக மக்களின் இடம்பெயர்வு நடைபெறுவதில்லை.