
TAMIL TUTOR இணையத்தில் ஒரு
கல்வி பாசறை
TAMIL TUTOR இணையத்தில் ஒரு
கல்வி பாசறை
எங்களுக்கு தொடர்ந்து ஆதரவளித்து வரும் உங்கள் அனைவருக்கும், முதலில் எங்களுடைய மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம். அறிமுகம்: நீர் புவியில் காணப்படும் முக்கிய கூறுகளில் ஒன்றாகும். எல்லா தாவரங்களும் விலங்குகளும் உயிர் வாழ்வதற்கு நீர் அத்தியாவசியமானதாகும். நீரானது குடிநீராக மட்டுமின்றி வீட்டு தேவைகளுக்கும், வேளாண்மைக்கும், தொழிற்சாலைப் பயன்பாட்டிற்கும் மற்றும் பிற தேவைகளுக்கும் இன்றியமையாததாகும். அனைத்து வகை பொருளாதார செயல்பாடுகளுக்கு நீர் மிகவும் அத்தியாவசியமாகிறது. ஆதலால் நீர் புவியின் தவிர்க்க முடியாத கூறாக அமைகிறது. புவியில் நீரின்றி எவ்வுயிரும் நிலைப்பதற்கு வாய்ப்பே இல்லை. புவியில் நீரின் பங்குஏறத்தாழ 71 சதவீதம் புவியின் மேற்பரப்பு நீரால் சூழப்பட்டுளது. புவியில் உள்ள நீரின் அளவு 326 மில்லியன் கன மைல்கள இவ்வளவு பெரிய கன அளவு நீரை கண்ணால் காண்பது என்பது மிகவும் கடினம். புவியில் உள்ள பெரும்பகுதியிலான நீர் உவர்ப்பு நீர். இது கடலிலும் பேராழகளிலும் காணப்படுகிறது. புவியில் உள்ள மொத்த நீரில் 97.2% உவர்ப்பு நீராகவும் மற்றும் 2.8 சதவீதம் நன்னீராகவும் உள்ளது. இந்நன்னீரில் 2.2 சதவீதம் புவியின் மேற்பரப்பிலும், மீதுமள்ள 0.6 சதவீதம் நிலத்தடி நீராகவும் கிடைக்கப் பெறுகிறது. புவியின் மேற்பரப்பில் காணப்படும் 2.2 சதவீதம் நன்னீரில் 2.15 சதவிதம் பனியாறுகளாகவும் மற்றும் பனிமலைகளாகவும் 0.01சதவீதம் ஏரிகளாகவும், ஆறுகளாகவும் மீதமுள்ள 0.04 சதவீதம் மற்ற நீர் வடிவங்களாகவும் காணப்படுகிறது. மொத்த நிலத்தடி நீரில் இப்பொழுது 0.6 சதவீதம் பொருளாதார ரீதியில் நவீன தொழில் நுட்பத்தின்மூலம் துளையிட்டு எடுக்கப்படுகிறது. மறவாமல் இந்த பதிவை உங்களுடைய நண்பர்களுக்கும் பகிர்ந்து உதவுங்கள். நீங்கள் விரைவில் ஒரு அரசு அதிகாரியாக ஆக, எங்களுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்! நாமும் படிப்போம், படித்த சமுதாயத்தை உருவாக்குவோம். 8th social science, புவியியல் அலகு 3 - நீரியல் சுழற்சி, பகுதி 2, for tnpsc, trb, tet, net
மூடுபனி..............ஐ விட அதிக அடர்த்தி கொண்டது.
�
212 வெப்பநிலை நீர் கொதிக்கிறது. ஆனால் 32 வெப்பநிலை ஆவியாக ஆரம்பிக்கிறது.