tamiltutor

TAMIL TUTOR இணையத்தில் ஒரு
கல்வி பாசறை

கல்வி என்பது தகவல்களைச் சேகரிப்பதல்ல, அது சிந்திப்பதற்காக மூலையை பயிற்றுவிப்பது. -- ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்

பத்தாம் வகுப்பு அறிவியல், பாடம் 2 ஒளியியல், 10th standard lesson 2 in Tamil

‘ஒளி’ என்பது ஒரு வகை ஆற்றல். இது அலைவடிவில் பரவுகிறது. ஒளி செல்லும் பாதை, 'ஒளிக்கதிர்' என்றும் ஒளிக்கதிர்களின் தொகுப்பு 'ஒளிக்கற்றை' என்றும் அழைக்கப்படுகிறது. ஒளியை வெளிவிடும் பொருள்கள் 'ஒளிமூலங்கள்' எனப்படுகின்றன. சில ஒளிமூலங்கள் தங்களுடைய சுய ஒளியை வெளியிடுகின்றன. இவை 'ஒளிரும் பொருள்கள்' (luminous objects) என்று அழைக்கப்படுகின்றன. சூரியன் உள்ளிட்ட அனைத்து விண்மீன்களும் ஒளிரும் பொருள்களுக்கு எடுத்துக்காட்டுகள் ஆகும். கண்களின் உதவியால் தான் நம்மால் பொருள்களைக் காண முடிகிறது என்பதை அறிந்திருப்பீர்கள். ஆனால் ஓர் இருள் நிறைந்த அறையில் உள்ள பொருள்களைக் கண்களால் காண முடிவதில்லை. ஏன் என்று விளக்க முடியுமா? ஆம் பொருள்களைக் காண நமக்கு ஒளி தேவை. ஒரு விளக்கில் இருந்து வரும் ஒளிக் கதிர்களை நேரடியாக நம் கண்களின் மீது விழச் செய்தால் பொருள்களைக் காண முடியுமா? நிச்சயமாக முடியாது. ஒளிக்கதிர்கள் பொருள்களின் மீது பட்டு அவற்றிலிருந்து எதிரொளிக்கப்பட்ட கதிர்கள் நம் கண்களை அடைந்தால்தான் பொருள்களைக் காண இயலும். ஒளி எதிரொளித்தல் மற்றும் ஒளி விலகல் குறித்து முந்தைய வகுப்புகளில் கற்றிருப்பீர்கள். இப்பாடத்தில் ஒளிச்சிதறல், குவி லென்சு மற்றும் குழி லென்சு உருவாக்கும் பிம்பங்கள், மனிதக் கண், நுண்ணோக்கிகள் மற்றும் தொலைநோக்கிகள் போன்ற ஒளியியல் கருவிகள் குறித்து கற்க உள்ளோம். எங்களுக்கு தொடர்ந்து ஆதரவளித்து வரும், உங்கள் அனைவருக்கும், எங்களுடைய நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம். மறவாமல் இந்த பதிவை உங்களுடைய நண்பர்களுக்கும் பகிருங்கள். நீங்கள் விரைவில் ஒரு அரசு அதிகாரியாக ஆக எங்களுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்! நாமும் படிப்போம், படித்த சமுதாயத்தை உருவாக்குவோம். பத்தாம் வகுப்பு அறிவியல், பாடம் -2 ஒளியியல், 10th standard lesson 2 in Tamil, for unit 8 TNPSC, UPSC, ssC, RRB, TRB, TET

Go to quiz

question 1

A,B,C,D என்ற நான்கு பொருள்களின் ஒளி விலகல் எண்கள் முறையே 1.31, 1.43, 1.33,2.4 எனில், இவற்றில் ஒளியின் திசைவேகம் பெருமமாக உள்ள பொருள் எது?

  • Option A: A
  • Option B: B
  • Option C: C
  • Option D: D

answer

A

question 2

பொருளின் அளவிற்கு சமமான, தலைகீழான மெய்ப்பிம்பம் கிடைக்க பொருள் வைக்கப்பட வேண்டிய தொலைவு?

  • Option A: f
  • Option B: ஈறிலாத் தொலைவு
  • Option C: 2f
  • Option D: f க்கும் 2f க்கும் இடையில்

answer

2f

question 3

மின் விளக்கு ஒன்று குவிலென்சு ஒன்றின் முதன்மைக் குவியத்தில் வைக்கப்பட்டுள்ளது. மின் விளக்கு ஒளியூட்டப்படும் போது, குவி லென்சானது

  • Option A: விரிக்கும் கற்றைகளை உருவாக்கும்
  • Option B: குவிக்கும் கற்றைகளை உருவாக்கும்
  • Option C: இணைக் கற்றைகளை உருவாக்கும்
  • Option D: நிறக் கற்றைகளை உருவாக்கும்

answer

இணைக் கற்றைகளை உருவாக்கும்

question 4

குவி லென்சின் உருப்பெருக்கமானது எப்போதும்----------மதிப்புடையது.

  • Option A: நேர்க்குறி
  • Option B: எதிர்க்குறி
  • Option C: சுழி
  • Option D: நேர்க்குறி (அ) எதிர்க்குறி

answer

நேர்க்குறி (அ) எதிர்க்குறி

question 5

ஒரு குவி லென்சானது, மிகச்சிறிய மெய்பிம்பத்தை முதன்மைக் குவியத்தில் உருவாக்கினால், பொருள் வைக்கப்படும் இடம்?

  • Option A: முதன்மைக் குவியம்
  • Option B: ஈறிலாத் தொலைவு
  • Option C: 2f
  • Option D: f க்கும் 2f க்கும் இடையில்

answer

ஈறிலாத் தொலைவு

Abacus of English banner

ஆங்கிலத்தை சரளமாக பேச வேண்டுமா?

அவ்வாறு என்றால், இன்றே சேருங்கள் "Abacus of English -ள்".

உங்கள் சமூகத்தில், மதிப்பு வாய்ந்தவராக மாறுங்கள்!

இந்த வகுப்பை பற்றி மேலும் அறிந்து கொள்ள, கீழே உள்ள தொலைபேசி எண்களுக்கு, தயங்காமல் தொடர்பு கொள்ளுங்கள்.

  • VIGNESH 6383073556 /
  • VENKATESH 9360662257

  • அல்லது இங்கு முன்பதிவு செய்து, டெமோ வகுப்புகளை பாருங்கள்.

    question 6

    ஒரு லென்சின் திறன் 4D எனில் அதன் குவியத் தொலைவு?

    • Option A: -0.25மீ
    • Option B: 4மீ
    • Option C: -40மீ
    • Option D: -25மீ

    answer

    -0.25மீ

    question 7

    7. கிட்டப்பார்வை குறைபாடு உடைய கண்ணில், பொருளின் பிம்பமானது எங்கு  தோற்றுவிக்கப்படுகிறது.

    • Option A: விழித் திரைக்குப் பின்புறம்
    • Option B: விழித்திரையின் மீது
    • Option C: விழித் திரைக்கு முன்பாக
    • Option D: குருட்டுத் தானத்தில்

    answer

    விழித் திரைக்கு முன்பாக

    question 8

    விழி ஏற்பமைவுத் திறன் குறைபாட்டைச் சரி செய்ய உதவுவது?

    • Option A: குவி லென்சு
    • Option B: குழி லென்சு
    • Option C: குவி ஆடி
    • Option D: இரு குவிய லென்சு

    answer

    இரு குவிய லென்சு

    question 9

    சொல் அகராதியில் உள்ள சிறிய எழுத்துகளைப் படிப்பதற்கு உகந்த லென்சு எது?

    • Option A: 5 செமீ குவிய தூரம் கொண்ட குவிலென்சு
    • Option B: 5 செமீ குவிய தூரம் கொண்ட குழி லென்சு
    • Option C: 10 செ.மீ குவிய தூரம் கொண்ட குவி லென்சு
    • Option D: 10 செ.மீ குவிய தூரம் கொண்ட குழி லென்சு

    answer

    5 செமீ குவிய தூரம் கொண்ட குவிலென்சு

    question 10

    ஒரு முப்பட்டகத்தின் வழியே செல்லும், நீலம், பச்சை மற்றும் சிவப்பு நிறங்களின் அலை நீளங்கள் V B V G VR எனில் பின்வருவனவற்றுள் எச்சமன்பாடு சரியானது?

    • Option A: VB = VG = VR
    • Option B: VB > VG > VR
    • Option C: VB < VG < VR
    • Option D: VB < VG > VR

    answer

    VB < VG > VR

    You can practice this lesson
    here
    Would you like to read similar lesson? Please go to School books lessons

    Leave a Reply


    Please send your report

    latest lessons

    {{message}}