tamiltutor

TAMIL TUTOR இணையத்தில் ஒரு
கல்வி பாசறை

நீங்கள் உறங்கும் போது வருவது அல்ல கனவு, உங்களை உறங்க விடாமல் செய்வதே கனவு. -- அப்துல் கலாம்

பதினொன்றாம் வகுப்பு பாடம்-7 குப்தர்கள்

பள்ளி பாட புத்தகத்தில் இருந்து இன்றைய வினாக்கள் இதோ. நீங்க படிச்சிட்டும் பயிற்சி செஞ்சுக்கலாம் அல்லது பயிற்சி செய்தபிறகும் படிக்கலாம். இன்னைக்கு நாம பார்க்கப் போற தலைப்பு குப்தர்கள். \r\nகுப்தர்கள் காலம் இந்திய வரலாற்றில் ஒரு பொற்காலமாகக் கருதப்படுகின்றது. இக்காலத்தில் கலை இலக்கியம் வணிகம் ஆகிய அனைத்து துறைகளிலும் பாரத தேசம் சிறந்து விளங்கியுள்ளது. டிஎன்பிஎஸ்சி குரூப் 1 மற்றும் குரூப் 2 முதல்நிலைத் தேர்வுக்கான பாடத் திட்டத்தில் குப்தர்களின் வரலாறு இடம்பெற்றுள்ளது. டிஎன்பிசி மட்டுமல்லாமல் இதர போட்டித்தேர்வுகளிலும் குப்தர்கள் காலத்தில் இருந்து வினாக்கள் கேட்கப்படுவதற்கு அதிக வாய்ப்பு உண்டு. பதினொன்றாம் வகுப்பு பள்ளி பாடப்புத்தகத்தில் ஏழாவது பாடத்திலிருந்து வினாக்களும் அவற்றிற்கான விடைகளும் இங்கு தரப்பட்டுள்ளன. இதைப் படித்து முடித்துவிட்டு தவறாமல் பயிற்சி செய்து பாருங்கள்.

Go to quiz

question 1

குப்தர் காலம் குறித்த கீழ்க்கண்ட சான்றுகளில் எது நம்ப முடியாதது என்று நீங்கள் கருதுகிறீர்கள் ?

 • Option 1: கல்வெட்டு சான்றுகள்
 • Option 2: இலக்கியச் சான்றுகள்
 • Option 3: நாணயச் சான்றுகள்
 • Option 4: கதைகள், புராணங்கள்

answer

கதைகள், புராணங்கள்

question 2

யாருக்குக் கவிராஜா என்ற பட்டம் அளிக்கப்பட்டது?

 • Option 1: ஸ்ரீகுப்தர்
 • Option 2: இரண்டாம் சந்திரகுப்தர்
 • Option 3: முதலாம் சந்திரகுப்தர்
 • Option 4: சமுத்திரகுப்தர்

answer

சமுத்திரகுப்தர்

question 3

எந்த சீனப் பயணி பொ.ஆ. ஐந்தாம் நூற்றாண்டின் இந்திய சமூகத்தைக் குறித்து விரிவாக எழுதியுள்ளார்?

 • Option 1: யுவான் சுவாங்
 • Option 2: பாஹியான்
 • Option 3: இட்சிங்
 • Option 4: வாங்-யுவான்- சீ

answer

பாஹியான்

question 4

கீழ்க்கண்டவற்றில் எது குப்தர் காலத்துக் குடைவரைக் குகைக் கோயில் இல்லை ?

 • Option 1: எலிபண்டா குகை (மகாராஷ்டிரா)
 • Option 2: பாக் (மத்தியப் பிரதேசம்)
 • Option 3: அஜந்தா - எல்லோரா குகை (மகாராஷ்டிரா)
 • Option 4: உதயகிரி குகை (ஒடிசா)

answer

எலிபண்டா குகை (மகாராஷ்டிரா)

question 5

தர்க்கம் குறித்த முதல் முழுமையான பௌத்த நூலை எழுதியவர் யார்?

 • Option 1: திக் நாகர்
 • Option 2: வராகமிகிரர்
 • Option 3: வசுபந்து
 • Option 4: சந்திரகாமியா

answer

வசுபந்து

question 6

எது காளிதாசரின் முக்கியமான கவிதைப் படைப்பாகும்?

 • Option 1: மேகதூதம்
 • Option 2: சாகுந்தலம்
 • Option 3: குமாரசம்பவம்
 • Option 4: ரகுவம்சம்

answer

மேகதூதம்

question 7

யார் வீணை வாசிப்பது போன்று குப்த நாணயங்களில் காணப்படுகிறது?

 • Option 1: சமுத்திரகுப்தர்
 • Option 2: ஹரிசேனர்
 • Option 3: குமார குப்தர்
 • Option 4: முதலாம் சந்திரகுப்தர்

answer

சமுத்திரகுப்தர்

question 8

லிச்சாவி இளவரசியை மணந்தவர்?

 • Option 1: கடோத்கஜர்
 • Option 2: குமார குப்தர்
 • Option 3: முதலாம் சந்திரகுப்தர்
 • Option 4: ஸ்ரீ குப்தர்

answer

முதலாம் சந்திரகுப்தர்

question 9

இவரது ஆட்சிக்காலத்தில் தான் ஃபாகியான் என்ற பௌத்த அறிஞர் இந்தியா வந்தார்?

 • Option 1: குமார குப்தர்
 • Option 2: இரண்டாம் சந்திரகுப்தர்
 • Option 3: சமுத்திரகுப்தர்
 • Option 4: முதலாம் சந்திரகுப்தர்

answer

இரண்டாம் சந்திரகுப்தர்

question 10

கடைசி குப்த அரசர்?

 • Option 1: குமார குப்தர்
 • Option 2: கடோத்கஜர்
 • Option 3: விஷ்ணு குப்தர்
 • Option 4: ஸ்கந்த குப்தர்

answer

விஷ்ணு குப்தர்

11ஆம் வகுப்பு வரலாறு பாடம் 4 அரசு மற்றும் பேரரசு உருவாக்கம்.\r\nஎங்களுக்கு தொடர்ந்து ஆதரவளித்து வரும் ஒவ்வொரு நல் உள்ளத்திற்கும் எங்களின் மனமார்ந்த நன்றிகள். நாம் தினமும் அனுப்பும் பாடங்களை நீங்கள் தவறாமல் படிக்கிறீர்கள் என்று நாங்கள் நம்புகிறோம். தினமும் பத்து கேள்விகள் பள்ளி பாடத்திலிருந்து அனுப்பப்படுகின்றது. அன்றன்றைக்கு இவற்றை படித்து விடுங்கள். தேர்வு அருகில் வந்த பிறகு மொத்தமாக படித்துக் கொள்ளலாம் என்று நினைக்காதீர்கள். நீங்கள் இதை தொடர்ந்து படிக்கும் போதுதான் அதைத் தொடர்ந்து உருவாக்க வேண்டும் என்ற உற்சாகம் எங்களுக்கு கிடைக்கும். நீங்கள் விரைவில் ஒரு அரசு அதிகாரியாக பணியாற்ற வேண்டும் என்பதே எங்களின் விருப்பம் ஆகும். உங்களுக்கு ஏதேனும் கருத்துக்கள் இருந்தால் அதை நீங்கள் தாராளமாக எங்களுக்கு தெரிவிக்கலாம்.
Next: பதினொன்றாம் வகுப்பு வரலாறு பாடம் 4 அரசு மற்றும் பேரரசு உருவாக்கம்
Would you like to read similar lesson? Please go to School books lessons

Leave a Reply


Please send your report

latest lessons

{{message}}