tamiltutor

TAMIL TUTOR இணையத்தில் ஒரு
கல்வி பாசறை

நீங்கள் உறங்கும் போது வருவது அல்ல கனவு, உங்களை உறங்க விடாமல் செய்வதே கனவு. -- அப்துல் கலாம்

பதினெண்கீழ்க்கணக்கில் பழமொழி மற்றும் சிறுபஞ்சமூலம், pazhamozhi and sirupanchamoolam in tamil

எங்களுக்கு தொடர்ந்து ஆதரவளித்து வரும் உங்கள் அனைவருக்கும், எங்களுடைய மனமார்ந்த நன்றிகள். நாம் தொடர்ச்சியாக தமிழ் இலக்கிய வரலாற்றில் இருந்து ஒன்றன்பின் ஒன்றாக, அனைத்து பகுதிகளையும் படித்து வருகிறோம். அதன் வரிசையில் இப்பொழுது, பதினெண் கீழ்க்கணக்கில் உள்ள நீதி நூல்கள் ஆன பழமொழி மற்றும் சிறுபஞ்சமூலம் நூல்களை பார்க்க இருக்கிறோம். கீழே தரப்பட்டுள்ள கேள்விகளே முழுமையாக படித்துவிட்டு, பயிற்சியும் எடுத்துக் கொள்ளுங்கள். போட்டித் தேர்வுகளுக்கு படித்தால் மட்டும் போதாது, பயிற்சி இன்றியமையாததாகும். எனவேதான் உங்களுக்காக இத்தகைய பயிற்சி கேள்விகளைக் கொண்டு வருகிறோம். தவறாமல் பயிற்சி எடுத்துக்கொள்ளுங்கள். அதற்கான வசதியும் நம்முடைய தளத்தில் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. கீழே உள்ள GO TO QUIZ என்ற சுட்டியை சொடுக்கி, இப்பொழுதே பயிற்சி எடுத்துக்கொள்ளுங்கள். நீங்கள் விரைவில் ஒரு அரசு அதிகாரியாக ஆக tamiltutor.in மனமார்ந்த வாழ்த்துக்கள்! மறவாமல் இந்த பதிவை, உங்களுடைய நண்பர்களுக்கும் பகிர்ந்து உதவுங்கள். நாமும் படிப்போம், படித்த சமுதாயத்தை உருவாக்குவோம்! பதினெண்கீழ்க்கணக்கில் பழமொழி மற்றும் சிறுபஞ்சமூலம், pazhamozhi and sirupanchamoolam in Tamil, FOR UPSC, TNPSC, TRB, TET, NET

Go to quiz

question 1

பழமொழி எத்தனை பகுதிகளைக் கொண்டது?

  • Option A: 100 பகுதிகள்
  • Option B: 80 பகுதிகள்
  • Option C: 40 பகுதிகள்
  • Option D: 34 பகுதிகள்

answer

34 பகுதிகள்

question 2

பழமொழி குறிப்பிடாத மன்னன் யார்?

  • Option A: பல்யானைச் செல்கெழு குட்டுவன்
  • Option B: நரை முடிச் முறை செய்த கரிகால் பெருவளத்தான்
  • Option C: செல்வக் கடுங்கோ வாழியாதன்
  • Option D: தூங்கெயில் எறிந்த தொடிதோட் செம்பியன்

answer

செல்வக் கடுங்கோ வாழியாதன்

question 3

பழமொழி குறிப்பிடும் வள்ளல்கள் யாவர்?

  • Option A: முதல் ஏழு வள்ளல்கள்
  • Option B: கடை ஏழு வள்ளல்கள்
  • Option C: கடை யேழு வள்ளல்கள் மற்றும் இடை ஏழு வள்ளல்கள்
  • Option D: இடை யேழு வள்ளல்கள்

answer

கடை ஏழு வள்ளல்கள்

question 4

சிறுபஞ்சமூலம் பெயர் காரணம் யாது?

  • Option A: ஐந்து பூக்களால் ஆன மருந்து உடல் நோயை போக்குவது போல, இந்தப் பாடலில் உள்ள ஐந்து கருத்துக்கள் உளநோயை போக்கும்.
  • Option B: ஐந்து மூலிகைகளால் ஆன மருந்து உடல் நோயை போக்குவது போல, இந்தப் பாடலில் உள்ள ஐந்து கருத்துக்கள் உளநோயை போக்கும்.
  • Option C: ஐந்து இலைகளால் ஆன மருந்து உடல் நோயை போக்குவது போல, இந்தப் பாடலில் உள்ள ஐந்து கருத்துக்கள் உளநோயை போக்கும்.
  • Option D: ஐந்து வேர்களால் ஆன மருந்து உடல் நோயை போக்குவது போல, இந்தப் பாடலில் உள்ள ஐந்து கருத்துக்கள் உளநோயை போக்கும்.

answer

ஐந்து வேர்களால் ஆன மருந்து உடல் நோயை போக்குவது போல, இந்தப் பாடலில் உள்ள ஐந்து கருத்துக்கள் உளநோயை போக்கும்.

question 5

சிறுபஞ்சமூலத்தின் ஆசிரியர் யார்?

  • Option A: பெருவாயின் முள்ளியார்
  • Option B: காரியாசான்
  • Option C: மூவாதியார்
  • Option D: பொறையனார்

answer

காரியாசான்

question 6

சிறுபஞ்சமூலத்தின் ஆசிரியரின் சமயம் என்ன?

  • Option A: புத்த சமயத்தைச் சேர்ந்தவர்
  • Option B: சைவ சமயத்தைச் சேர்ந்தவர்
  • Option C: சமண சமயத்தைச் சேர்ந்தவர்
  • Option D: வைணவ சமயத்தைச் சேர்ந்தவர்

answer

சமண சமயத்தைச் சேர்ந்தவர்

ஆங்கிலத்தில் புலமை வேண்டுமா?

அவ்வாறென்றால், பழைய கற்றல் முறையை கைவிட்டு, புதுமையான எளிய விதிமுறைகளைக் கொண்ட இந்த, புதிய வகுப்பில் இப்பொழுதே சேருங்கள்.

இந்த வகுப்பை பற்றி மேலும் அறிந்து கொள்ள, கீழே உள்ள தொலைபேசி எண்களுக்கு, தயங்காமல் தொடர்பு கொள்ளுங்கள்.

  • VIGNESH 6383073556 /
  • VENKATESH 9360662257

  • அல்லது இங்கு முன்பதிவு செய்து, டெமோ வகுப்புகளை பாருங்கள்.
    Banner of abacus of English

    question 7

    சிறுபஞ்சமூலத்தின் ஆசிரியரின் காலம் என்ன?

    • Option A: கிபி ஐந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்தவர்
    • Option B: கிபி இரண்டாம் நூற்றாண்டை சேர்ந்தவர்
    • Option C: கிபி மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்தவர்
    • Option D: கிபி நான்காம் நூற்றாண்டைச் சேர்ந்தவர்

    answer

    கிபி ஐந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்தவர்

    question 8

    சிறுபஞ்சமூலம் பாடல்கள் எத்தனை?

    • Option A: கடவுள் வாழ்த்து மற்றும் சிறப்புப் பாயிரம் நீங்கலாக, 100 பாடல்களைக் கொண்டவை.
    • Option B: கடவுள் வாழ்த்து மற்றும் சிறப்புப் பாயிரம் நீங்கலாக, 102 பாடல்களைக் கொண்டவை.
    • Option C: கடவுள் வாழ்த்து மற்றும் சிறப்புப் பாயிரம் நீங்கலாக, 103 பாடல்களைக் கொண்டவை.
    • Option D: கடவுள் வாழ்த்து மற்றும் சிறப்புப் பாயிரம் நீங்கலாக, 104 பாடல்களைக் கொண்டவை.

    answer

    கடவுள் வாழ்த்து மற்றும் சிறப்புப் பாயிரம் நீங்கலாக, 102 பாடல்களைக் கொண்டவை.

    question 9

    பெரும் பஞ்சமூலம் என்பவை எவை?

    • Option A: பெருமல்லி, சிறுவழுதுணை, தழுதாழை, பாதிரி, வாகை
    • Option B: வில்வம், பெருங் குமிழ், பாதிரி, நெருஞ்சி, பெருமல்லி
    • Option C: வில்வம், பெருங் குமிழ், தழுதாழை, பாதிரி, வாகை
    • Option D: வில்வம், பெருங் குமிழ், தழுதாழை, நெருஞ்சி, பெருமல்லி

    answer

    வில்வம், பெருங் குமிழ், தழுதாழை, பாதிரி, வாகை

    question 10

    சிறுபஞ்சமூலம் குறிப்பிடும் வேர்கள் எவை?

    • Option A: கண்டங்கத்திரி வேர், சிறுவழுதுணை வேர், சிறுமல்லி வேர், நெருஞ்சி வேர், பெருமல்லி வேர்
    • Option B: பாதிரி வேர், சிறுவழுதுணை வேர், சிறுமல்லி வேர், தழுதாழை வேர், பெருமல்லி வேர்
    • Option C: கண்டங்கத்திரி வேர், சிறுவழுதுணை வேர், சிறுமல்லி வேர், தழுதாழை வேர், வில்வம் வேர்
    • Option D: கண்டங்கத்திரி வேர், தழுதாழை வேர், வில்வம் வேர், நெருஞ்சி வேர், பெருமல்லி வேர்

    answer

    கண்டங்கத்திரி வேர், சிறுவழுதுணை வேர், சிறுமல்லி வேர், நெருஞ்சி வேர், பெருமல்லி வேர்

    You can practice this lesson
    here
    Would you like to read similar lesson? Please go to தமிழ் lessons

    Leave a Reply


    Please send your report

    latest lessons

    {{message}}