tamiltutor

TAMIL TUTOR இணையத்தில் ஒரு
கல்வி பாசறை

நீங்கள் உறங்கும் போது வருவது அல்ல கனவு, உங்களை உறங்க விடாமல் செய்வதே கனவு. -- அப்துல் கலாம்

பதினெண்கீழ்க்கணக்கில் பழமொழி நூல் தொடர்பான வினா விடைகள், pazhamozhi nool in tamil

நமது தளத்திற்கு தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் உங்கள் அனைவருக்கும், முதலில் எங்களுடைய மனமார்ந்த நன்றிகள். நாம் தொடர்ச்சியாக, தமிழ் இலக்கிய வரலாற்று பகுதியிலிருந்து, ஒன்றன்பின் ஒன்றாக அனைத்து பகுதிகளையும் படித்து வருகிறோம். அதன் தொடர்ச்சியாக, இப்பொழுது நீதி நூல்களில் உள்ள, பழமொழி நூல் தொடர்பான வினா விடைகளை, படிக்க உள்ளோம். கீழே தரப்பட்டுள்ள பாடத்தை படித்து விட்டு, மறவாமல் GO TO QUIZ என்ற லிங்கை பிரஸ் செய்து, பயிற்சியும் எடுத்துக் கொள்ளுங்கள். ஏனென்றால் பயிற்சி இல்லாமல், நம்முடைய தேர்ச்சி சாத்தியமில்லை. நீங்கள் விரைவில் ஒரு அரசு அதிகாரியாக மாற, எங்களுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்! மறவாமல் இந்த பதிவை, உங்களுடைய நண்பர்களுக்கும் பகிர்ந்து உதவுங்கள். நாமும் படிப்போம், படித்த சமுதாயத்தை உருவாக்குவோம். பதினெண்கீழ்க்கணக்கில் பழமொழி நூல் தொடர்பான வினா விடைகள், pazhamozhi nool in tamil, FOR UPSC,TNPSC, TRB,TET, NET

Go to quiz

question 1

பழமொழி நூலின் பெயர் காரணம் என்ன?

  • Option A: பழமொழியை பற்றி பாடல்களை கொண்டதால், இந்நூல் இப்பெயர் பெற்றது.
  • Option B: பல மொழிகளில் உள்ள பழமொழிகளை மொழிபெயர்த்து, ஒன்றாகத் தொகுத்து தந்து இருப்பதால், இந்நூல் இப்பெயர் பெற்றது.
  • Option C: ஒவ்வொரு பாடலின் இறுதியிலும் பழமொழி வைத்து பாடுவதால், இந்நூல் இப்பெயர் பெற்றது.
  • Option D: பல பழமொழிகளை ஒன்றாக தொகுத்து தந்திருப்பதால், இந்நூல் இப்பெயர் பெற்றது.

answer

ஒவ்வொரு பாடலின் இறுதியிலும் பழமொழி வைத்து பாடுவதால், இந்நூல் இப்பெயர் பெற்றது.

question 2

பழமொழியை தொல்காப்பியர் எவ்வாறு குறிப்பிடுகிறார்?

  • Option A: முதுமொழி, முதுசொல்
  • Option B: தொன்மையான மொழி, தொன்மையான சொல்
  • Option C: அரிய மொழி, அரிய சொல்
  • Option D: ஆழ்ந்த கருத்து, ஆழ்ந்த சொல்

answer

முதுமொழி, முதுசொல்

question 3

தமிழில் பழமொழியை வைத்து பாடிய நூல்கள் எவை?

  • Option A: முதுமொழிக்காஞ்சி, திணைமொழி ஐம்பது
  • Option B: பழமொழி நானூறு, திணைமொழி ஐம்பது
  • Option C: பழமொழி நானூறு, பழமொழி விளக்கம்
  • Option D: பழமொழி நானூறு, திணைமொழி

answer

பழமொழி நானூறு, பழமொழி விளக்கம்

ஆங்கிலத்தில் புலமை வேண்டுமா?

அவ்வாறென்றால், பழைய கற்றல் முறையை கைவிட்டு, புதுமையான எளிய விதிமுறைகளைக் கொண்ட இந்த, புதிய வகுப்பில் இப்பொழுதே சேருங்கள்.

இந்த வகுப்பை பற்றி மேலும் அறிந்து கொள்ள, கீழே உள்ள தொலைபேசி எண்களுக்கு, தயங்காமல் தொடர்பு கொள்ளுங்கள்.

  • VIGNESH 6383073556 /
  • VENKATESH 9360662257

  • அல்லது இங்கு முன்பதிவு செய்து, டெமோ வகுப்புகளை பாருங்கள்.
    Banner of abacus of English

    question 4

    பழமொழி விளக்கத்தின் வேறு பெயர் என்ன?

    • Option A: தண்டலையார் சதகம்
    • Option B: தர்ம சூத்திரம்
    • Option C: சுவேதாசுவதரம்
    • Option D: சுக்கிர ஸ்மிருதி

    answer

    தண்டலையார் சதகம்

    question 5

    பழமொழி என்ற சொல் முதன் முதலில் எந்த நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது?

    • Option A: நற்றிணை
    • Option B: குறுந்தொகை
    • Option C: ஐங்குறுநூறு
    • Option D: அகநானூறு

    answer

    அகநானூறு

    question 6

    பழமொழி நூலின் ஆசிரியரின் பெயர் என்ன?

    • Option A: நல்லாதனார்
    • Option B: கூடலூர்க்கிழார்
    • Option C: முன்றுரை அரையனார்
    • Option D: பெருவாயின் முள்ளியார்

    answer

    முன்றுரை அரையனார்

    question 7

    பழமொழி நூல் ஆசிரியரின் காலம் என்ன?

    • Option A: கிபி இரண்டாம் நூற்றாண்டை சேர்ந்தவர்
    • Option B: கிபி மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்தவர்
    • Option C: கிபி ஐந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்தவர்
    • Option D: கிபி நான்காம் நூற்றாண்டைச் சேர்ந்தவர்

    answer

    கிபி ஐந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்தவர்

    question 8

    பழமொழி நூல் ஆசிரியரின் சமயம் என்ன?

    • Option A: சமண சமயத்தைச் சேர்ந்தவர்
    • Option B: வைணவ சமயத்தைச் சேர்ந்தவர்
    • Option C: புத்த சமயத்தைச் சேர்ந்தவர்
    • Option D: சைவ சமயத்தைச் சேர்ந்தவர்

    answer

    சமண சமயத்தைச் சேர்ந்தவர்

    question 9

    முதல் முதலில் பழமொழியை பதிப்பித்தவர் யார்?

    • Option A: மலையத்துவன் மகன் ஞானப்பிரகாசம்
    • Option B: செல்வக்கேசவராய முதலியார்
    • Option C: திருமாளிகைச் சௌரிப் பெருமாளரங்கன்
    • Option D: பின்னந்தூர் நாராயணசாமி

    answer

    செல்வக்கேசவராய முதலியார்

    question 10

    பழமொழியில் எத்தனை பாடல்கள் உள்ளன?

    • Option A: 100 பாடல்கள் உள்ளன
    • Option B: 200 பாடல்கள் உள்ளன
    • Option C: 300 பாடல்கள் உள்ளன
    • Option D: 400 பாடல்கள் உள்ளன

    answer

    400 பாடல்கள் உள்ளன

    You can practice this lesson
    here
    Would you like to read similar lesson? Please go to தமிழ் lessons

    Leave a Reply


    Please send your report

    latest lessons

    {{message}}