tamiltutor

TAMIL TUTOR இணையத்தில் ஒரு
கல்வி பாசறை

கல்வி என்பது தகவல்களைச் சேகரிப்பதல்ல, அது சிந்திப்பதற்காக மூலையை பயிற்றுவிப்பது. -- ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்

பதினெண்கீழ்க்கணக்கில் ஏலாதி பற்றிய வினா விடைகள், elati in Tamil

எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் உங்கள் அனைவருக்கும், முதலில் எங்களுடைய மனமார்ந்த நன்றிகள். நாம் தொடர்ச்சியாக அனைத்து பகுதிகளில் இருந்தும், தேர்வில் கேட்க அதிக வாய்ப்புள்ள முக்கியமான வினா விடைகளை, பயிற்சி கேள்விகளாக படித்து வருகிறோம். தமிழில் இருந்து தொடர்ச்சியாக, அனைத்து தலைப்புகளையும் ஆரம்பத்திலிருந்து ஒன்றன்பின் ஒன்றாக, பார்த்து வருகிறோம். அதன் தொடர்ச்சியாக இப்பொழுது, ஏலாதி பாடப் பகுதியிலிருந்து தேர்வில் கேட்க அதிக வாய்ப்புள்ள முக்கிய கேள்விகளை, உங்களுக்காக இதோ கொண்டுவந்துள்ளோம். பயிற்சி எடுத்துக் கொள்ளுங்கள். நீங்கள் முழு மதிப்பெண் எடுக்க, எங்களுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்! நீங்கள் விரைவில் ஒரு அரசு அதிகாரியாக மாற, எங்களுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்! மறவாமல் இந்த பதிவை உங்களுடைய நண்பர்களுக்கும் பகிர்ந்து உதவுங்கள். நாமும் படிப்போம், படித்த சமுதாயத்தை உருவாக்குவோம். பதினெண்கீழ்க்கணக்கில் ஏலாதி பற்றிய வினா விடைகள், elati in Tamil, for TNPSC, UPSC, TRB, TET, NET

Go to quiz

question 1

ஏலாதி எத்தனை மருந்துப் பொருள்களின் கூட்டுக் கலவை?

  • Option A: மூன்று மருந்து பொருட்கள்
  • Option B: ஆறு மருந்து பொருட்கள்
  • Option C: நான்கு மருந்து பொருட்கள்
  • Option D: ஐந்து மருந்து பொருட்கள்

answer

ஆறு மருந்து பொருட்கள்

question 2

ஏலாதி எந்த மருந்து பொருட்களின் கூட்டுக் கலவை?

  • Option A: ஏலம், இலவங்கம், சிறுநாவற்பூ, சுக்கு, மிளகு, திப்பிலி
  • Option B: ஏலம், இலவங்கம், ஏலக்காய், சுக்கு, மிளகு, திப்பிலி
  • Option C: ஏலம், இலவங்கம், சிறுநாவற்பூ, கடுகு, ஜீரகம், திப்பிலி
  • Option D: ஏலம், இலவங்கம், சிறுநாவற்பூ, சுக்கு, ஜீரகம், திப்பிலி

answer

ஏலம், இலவங்கம், சிறுநாவற்பூ, சுக்கு, மிளகு, திப்பிலி

question 3

ஏலாதி நூல் பெயர் காரணம் கூறுக?

  • Option A: மூன்று மருந்து பொருட்களால் ஆன கலவை உடல் நோயை போக்குவது போல, இந்நூலில் கூறப்பட்டுள்ள மூன்று கருத்துக்கள் உளநோயை போக்கும்.
  • Option B: நான்கு மருந்து பொருட்களால் ஆன கலவை உடல் நோயை போக்குவது போல, இந்நூலில் கூறப்பட்டுள்ள நான்கு கருத்துக்கள் உளநோயை போக்கும்.
  • Option C: ஆறு மருந்து பொருட்களால் ஆன கலவை உடல் நோயை போக்குவது போல, இந்நூலில் கூறப்பட்டுள்ள ஆறு கருத்துக்கள் உளநோயை போக்கும்.
  • Option D: ஐந்து மருந்து பொருட்களால் ஆன கலவை உடல் நோயை போக்குவது போல, இந்நூலில் கூறப்பட்டுள்ள ஐந்து கருத்துக்கள் உளநோயை போக்கும்.

answer

ஆறு மருந்து பொருட்களால் ஆன கலவை உடல் நோயை போக்குவது போல, இந்நூலில் கூறப்பட்டுள்ள ஆறு கருத்துக்கள் உளநோயை போக்கும்.

question 4

ஏலாதியில் உள்ள பாடல்கள் எத்தனை?

  • Option A: 80 பாடல்கள்
  • Option B: 100 பாடல்கள்
  • Option C: 150 பாடல்கள்
  • Option D: 40 பாடல்கள்

answer

80 பாடல்கள்

question 5

ஏலாதியின் ஆசிரியர் யார்?

  • Option A: நல்லாதனார்
  • Option B: பூதஞ்சேந்தனார்
  • Option C: கணிமேதாவியார்
  • Option D: பெருவாயின் முள்ளியார்

answer

கணிமேதாவியார்

தமிழ்நாட்டின் தலைசிறந்த ஆங்கில ஆசிரியரிடம், கற்றுக் கொள்ள இதோ சிறந்த வாய்ப்பு, பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

இதுவே, உங்களுடைய இறுதியான ஆங்கில பயிற்சி வகுப்பாக இருக்கும்.

ஏனெனில் இதை முடித்தவுடன், நீங்களே கூறுவீர்கள், உங்களால் பிறருக்கு பயிற்சி தர முடியும் என்று.

இந்த வகுப்பை பற்றி மேலும் அறிந்து கொள்ள, கீழே உள்ள தொலைபேசி எண்களுக்கு, தயங்காமல் தொடர்பு கொள்ளுங்கள்.

  • VIGNESH 6383073556 /
  • VENKATESH 9360662257

  • அல்லது இங்கு முன்பதிவு செய்து, டெமோ வகுப்புகளை பாருங்கள்.

    question 6

    ஏலாதி பிள்ளைகளின் வகைகளைப் பற்றி எத்தனை பாடல்களில் குறிப்பிடுகிறது?

    • Option A: ஆறு பாடல்களில்
    • Option B: நான்கு பாடல்களில்
    • Option C: ஒரு பாடலில்
    • Option D: இரண்டு பாடல்களில்

    answer

    இரண்டு பாடல்களில்

    question 7

    மன்னருக்கு உரிய பண்புகள் ஆக ஏலாதி எத்தனை பாடல்களில் குறிப்பிடுகிறது?

    • Option A: 12 பாடல்களில் குறிப்பிடுகிறது
    • Option B: 21 பாடல்களில் குறிப்பிடுகிறது
    • Option C: 42 பாடல்களில் குறிப்பிடுகிறது
    • Option D: 25 பாடல்களில் குறிப்பிடுகிறது

    answer

    21 பாடல்களில் குறிப்பிடுகிறது

    question 8

    வீடுபேறு பற்றி ஏலாதி எத்தனை பாடல்களில் விபரிக்கிறது?

    • Option A: 7 பாடல்களில் விபரிக்கிறது
    • Option B: 14 பாடல்களில் விபரிக்கிறது
    • Option C: 21 பாடல்களில் விபரிக்கிறது
    • Option D: 18 பாடல்களில் விபரிக்கிறது

    answer

    7 பாடல்களில் விபரிக்கிறது

    question 9

    ஏலாதி கூறும் உயர்வான அறம் எது?

    • Option A: பெரியவரை மதித்தல் உயர்வான அறம் என்று குறிப்பிடுகிறது
    • Option B: திருடாமல் இருத்தல் உயர்வான அறம் என்று குறிப்பிடுகிறது
    • Option C: உணவு கொடுப்பது உயர்வான அறம் என்று குறிப்பிடுகிறது
    • Option D: திருடாமல் இருப்பது உயர்வான அறம் என்று குறிப்பிடுகிறது

    answer

    உணவு கொடுப்பது உயர்வான அறம் என்று குறிப்பிடுகிறது

    question 10

    ஏலாதி ஆசிரியரின் சமயம் எது?

    • Option A: புத்த சமயத்தைச் சேர்ந்தவர்
    • Option B: சைவ சமயத்தைச் சேர்ந்தவர்
    • Option C: வைணவ சமயத்தைச் சேர்ந்தவர்
    • Option D: சமண சமயத்தைச் சேர்ந்தவர்

    answer

    சமண சமயத்தைச் சேர்ந்தவர்

    You can practice this lesson
    here
    Would you like to read similar lesson? Please go to தமிழ் lessons

    Leave a Reply


    Please send your report

    latest lessons

    {{message}}