tamiltutor

TAMIL TUTOR இணையத்தில் ஒரு
கல்வி பாசறை

கல்வி என்பது தகவல்களைச் சேகரிப்பதல்ல, அது சிந்திப்பதற்காக மூலையை பயிற்றுவிப்பது. -- ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்

பதினெண்கீழ்க்கணக்கில் ஆசாரக்கோவை தொடர்பான வினா விடைகள், asara kovai in Tamil

முதலில் எங்களுக்கு தொடர்ச்சியாக ஆதரவு அளித்து வரும் உங்கள் அனைவருக்கும், முதலில் எங்களுடைய மனமார்ந்த நன்றிகள். நாம் தமிழ் இலக்கிய வரலாற்றில் இருந்து, தொடர்ச்சியாக ஒன்றன் பின் ஒன்றாக, அனைத்து தலைப்புகளையும் வரிசையாக பார்த்து வருகிறோம். இப்பொழுது பதினெண்கீழ்க்கணக்கில் உள்ள, நீதி நூல்களில் இருந்து ஆசாரக்கோவை யை பார்க்க இருக்கிறோம். தேர்வில் கேட்க அதிக வாய்ப்புள்ள முக்கிய வினா விடைகள், கீழே தரப்பட்டுள்ளது. முழுமையாக படித்துவிட்டு, மறவாமல் பயிற்சியும் எடுத்துக் கொள்ளுங்கள். அதற்கான வசதியும், நம்முடைய தளத்தில் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. கீழே உள்ள GO TO QUIZ என்ற லிங்கை பிரஸ் செய்வதன் மூலமாக, இந்த பாடத்தை, பயிற்சியும் எடுத்துக் கொள்ளலாம். நீங்கள் விரைவில் ஒரு அரசு அதிகாரியாக ஆக, எங்களுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்! மறவாமல் இந்த பதிவை, உங்களுடைய நண்பர்களுக்கும் பகிர்ந்து உதவுங்கள். நாமும் படிப்போம், படித்த சமுதாயத்தை உருவாக்குவோம். பதினெண்கீழ்க்கணக்கில் ஆசாரக்கோவை தொடர்பான வினா விடைகள், asara kovai in Tamil, for TNPSC, UPSC, TRB,TET, NET

Go to quiz

question 1

ஆசாரக்கோவையின் பெயர் காரணம் கூறுக?

  • Option A: ஒழுக்கம் தவறியவர்களுக்கு தரவேண்டிய தண்டனைகளின் வரிசை
  • Option B: சிறந்த அரசனாக இருப்பதற்கான விதிகளின் தொகுப்பு
  • Option C: ஒழுக்கங்களின் வரிசை
  • Option D: சிறந்த குடிமக்களாக இருப்பதற்கான விதிகளின் தொகுப்பு

answer

ஒழுக்கங்களின் வரிசை

question 2

ஆசாரக்கோவையின் மூல நூல் யாது?

  • Option A: ஆரிடம் என்ற வடமொழி நூலாகும்
  • Option B: பிரகதாரண்யகம் என்ற வடமொழி நூலாகும்
  • Option C: சாந்தோக்யம் என்ற வடமொழி நூலாகும்
  • Option D: தைத்திரீயம் என்ற வடமொழி நூலாகும்

answer

ஆரிடம் என்ற வடமொழி நூலாகும்

question 3

ஆசாரக்கோவையின் ஆசிரியர் யார்?

  • Option A: புல்லங்காடனார்
  • Option B: கூடலூர்க்கிழார்
  • Option C: காரியாசான்
  • Option D: பெருவாயின் முள்ளியார்

answer

பெருவாயின் முள்ளியார்

question 4

ஆசாரகோவை ஆசிரியரின் காலம் என்ன?

  • Option A: கிபி நான்காம் நூற்றாண்டைச் சேர்ந்தவர்
  • Option B: கிபி ஐந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்தவர்
  • Option C: கிபி இரண்டாம் நூற்றாண்டை சேர்ந்தவர்
  • Option D: கிபி மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்தவர்

answer

கிபி ஐந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்தவர்

question 5

ஆசாரக்கோவை ஆசிரியரின் சமயம் எது?

  • Option A: சைவ சமயத்தைச் சேர்ந்தவர்
  • Option B: புத்த சமயத்தைச் சேர்ந்தவர்
  • Option C: சமண சமயத்தைச் சேர்ந்தவர்
  • Option D: வைணவ சமயத்தைச் சேர்ந்தவர்

answer

சைவ சமயத்தைச் சேர்ந்தவர்

question 6

ஆசாரகோவை நூலில் உள்ள பாடல்கள் எத்தனை?

  • Option A: 104 பாடல்கள்
  • Option B: 103 பாடல்கள்
  • Option C: 99 பாடல்கள்
  • Option D: 100 பாடல்கள்

answer

100 பாடல்கள்

question 7

ஆசாரக்கோவை எவற்றையெல்லாம் பெரியவர்களுக்கு முன் செய்யக் கூடாத செயல்கள் ஆக குறிப்பிடுகிறது?

  • Option A: இரும்புதல், கொட்டாவி விடுதல்
  • Option B: தும்முதல், கொட்டாவி விடுதல்
  • Option C: உட்காருதல், ஏப்பம் விடுதல்
  • Option D: இரும்புதல், ஏப்பம் விடுதல்

answer

தும்முதல், கொட்டாவி விடுதல்

தமிழ்நாட்டின் தலைசிறந்த ஆங்கில ஆசிரியரிடம், கற்றுக் கொள்ள இதோ சிறந்த வாய்ப்பு, பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

இதுவே, உங்களுடைய இறுதியான ஆங்கில பயிற்சி வகுப்பாக இருக்கும்.

ஏனெனில் இதை முடித்தவுடன், நீங்களே கூறுவீர்கள், உங்களால் பிறருக்கு பயிற்சி தர முடியும் என்று.

இந்த வகுப்பை பற்றி மேலும் அறிந்து கொள்ள, கீழே உள்ள தொலைபேசி எண்களுக்கு, தயங்காமல் தொடர்பு கொள்ளுங்கள்.

  • VIGNESH 6383073556 /
  • VENKATESH 9360662257

  • அல்லது இங்கு முன்பதிவு செய்து, டெமோ வகுப்புகளை பாருங்கள்.

    question 8

    ஆசாரக்கோவையில் வராத பால் வகை எது?

    • Option A: பஃறொடை வெண்பா
    • Option B: இன்னிசை வெண்பா
    • Option C: சிந்தியல் வெண்பா
    • Option D: நேரிசை வெண்பா

    answer

    பஃறொடை வெண்பா

    question 9

    ஆசாரக்கோவை எந்த வடமொழி நூலை பின்பற்றி கருத்துக்களை கூறவில்லை?

    • Option A: தர்ம சூத்திரம்
    • Option B: கௌதம சூத்திரம்
    • Option C: சுக்கிர ஸ்மிருதி
    • Option D: சுவேதாசுவதரம்

    answer

    சுவேதாசுவதரம்

    question 10

    இலக்கண விளக்க ஆசிரியர் ஆசாரகோவை யை எவ்வாறு குறிப்பிடுகிறார்?

    • Option A: புற மற்றும் அக தூய்மையை கொண்டுவருவதற்கான அருமருந்து இது என்று குறிப்பிடுகிறார்
    • Option B: இது மொழிபெயர்ப்புக்கு சான்று என்று குறிப்பிடுகிறார்
    • Option C: இந்த நூல் ஒரு ஒழுக்கம் வாய்ந்த வாழ்க்கைக்கான வழிகாட்டி என்று குறிப்பிடுகிறார்
    • Option D: நீதி நூல்களுக்கு எல்லாம் இது ஒரு மகுடம் என்று குறிப்பிடுகிறார்

    answer

    இது மொழிபெயர்ப்புக்கு சான்று என்று குறிப்பிடுகிறார்

    You can practice this lesson
    here
    Would you like to read similar lesson? Please go to தமிழ் lessons

    Leave a Reply


    Please send your report

    latest lessons

    {{message}}