tamiltutor

TAMIL TUTOR இணையத்தில் ஒரு
கல்வி பாசறை

கல்வி என்பது தகவல்களைச் சேகரிப்பதல்ல, அது சிந்திப்பதற்காக மூலையை பயிற்றுவிப்பது. -- ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்

பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் முதுமொழிக்காஞ்சி தொடர்பான வினா விடைகள், muthumozhi kanchi in Tamil

எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் உங்கள் அனைவருக்கும், முதலில் எங்களுடைய மனமார்ந்த நன்றிகள். நாம் தொடர்ச்சியாக அனைத்து பகுதிகளில் இருந்தும், தேர்வில் கேட்க அதிக வாய்ப்புள்ள முக்கியமான வினா விடைகளை, பயிற்சி கேள்விகளாக படித்து வருகிறோம். தமிழில் இருந்து தொடர்ச்சியாக, அனைத்து தலைப்புகளையும் ஆரம்பத்திலிருந்து ஒன்றன்பின் ஒன்றாக, பார்த்து வருகிறோம். அதன் தொடர்ச்சியாக இப்பொழுது, முதுமொழிக்காஞ்சி பாடப் பகுதியிலிருந்து தேர்வில் கேட்க அதிக வாய்ப்புள்ள முக்கிய கேள்விகளை, உங்களுக்காக இதோ கொண்டுவந்துள்ளோம். பயிற்சி எடுத்துக் கொள்ளுங்கள். நீங்கள் முழு மதிப்பெண் எடுக்க, எங்களுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்! நீங்கள் விரைவில் ஒரு அரசு அதிகாரியாக மாற, எங்களுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்! மறவாமல் இந்த பதிவை உங்களுடைய நண்பர்களுக்கும் பகிர்ந்து உதவுங்கள். நாமும் படிப்போம், படித்த சமுதாயத்தை உருவாக்குவோம். பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் முதுமொழிக்காஞ்சி தொடர்பான வினா விடைகள், muthumozhi kanchi in Tamil, for TNPSC, UPSC, TRB, TET, NET

Go to quiz

question 1

முதுமொழிக் காஞ்சியின் ஆசிரியர் யார்?

  • Option A: கூடலூர்க்கிழார்
  • Option B: புல்லங்காடனார்
  • Option C: பூதஞ்சேந்தனார்
  • Option D: பொறையனார்

answer

கூடலூர்க்கிழார்

question 2

முதுமொழிக் காஞ்சியில் வரும் காஞ்சியின் பொருள் என்ன?

  • Option A: மன்னர்கள் தங்களது கால்களில் அணியும் அணிகலன்கள்
  • Option B: விவசாயிகள் தங்களது கால்நடைகளுக்கு அணிவிக்கும் அணிகலன்கள்
  • Option C: வீரர்கள் தங்களது கைகளில் அணியும் அணிகலன்கள்
  • Option D: மகளிர் இடையில் அணியும் அணிகலன்கள்

answer

மகளிர் இடையில் அணியும் அணிகலன்கள்

ஆங்கிலத்தில் புலமை வேண்டுமா?

அவ்வாறென்றால், பழைய கற்றல் முறையை கைவிட்டு, புதுமையான எளிய விதிமுறைகளைக் கொண்ட இந்த, புதிய வகுப்பில் இப்பொழுதே சேருங்கள்.

இந்த வகுப்பை பற்றி மேலும் அறிந்து கொள்ள, கீழே உள்ள தொலைபேசி எண்களுக்கு, தயங்காமல் தொடர்பு கொள்ளுங்கள்.

  • VIGNESH 6383073556 /
  • VENKATESH 9360662257

  • அல்லது இங்கு முன்பதிவு செய்து, டெமோ வகுப்புகளை பாருங்கள்.
    Banner of abacus of English

    question 3

    முதுமொழிக் காஞ்சியின் பெயர் காரணம் யாது?

    • Option A: முதுமொழிகளின் கோர்வை
    • Option B: முதுமொழிகளின் பிறப்பிடம்
    • Option C: முதியோர் வாக்கு
    • Option D: பெரியோர் அறிவுரை

    answer

    முதுமொழிகளின் கோர்வை

    question 4

    முதுமொழி ஆசிரியரின் காலம் என்ன?

    • Option A: கிபி மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்தவர்
    • Option B: கிபி நான்காம் நூற்றாண்டைச் சேர்ந்தவர்
    • Option C: கிபி ஐந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்தவர்
    • Option D: கிபி இரண்டாம் நூற்றாண்டை சேர்ந்தவர்

    answer

    கிபி ஐந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்தவர்

    question 5

    முதுமொழிக் காஞ்சியில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை எத்தனை?

    • Option A: அதிகாரத்திற்கு 15 பாடல்கள் வீதம் 150 பாடல்களைக் கொண்டது
    • Option B: அதிகாரத்திற்கு 10 பாடல்கள் வீதம் 100 பாடல்களைக் கொண்டது
    • Option C: அதிகாரத்திற்கு 12 பாடல்கள் வீதம் 60 பாடல்களைக் கொண்டது
    • Option D: அதிகாரத்திற்கு 8 பாடல்கள் வீதம் 80 பாடல்களைக் கொண்டது

    answer

    அதிகாரத்திற்கு 10 பாடல்கள் வீதம் 100 பாடல்களைக் கொண்டது

    question 6

    முதுமொழிக் காஞ்சியில் உள்ள அனைத்து பாடல்களும் எவ்வாறு தொடங்குகின்றன?

    • Option A: ஆர்கலி உலகத்து மக்கட் கெல்லாம்
    • Option B: காதலின் சிறந்தன்று கண்ணஞ்சப் படுதல்
    • Option C: முன்பெருகலின் பின் சிறுகாமை சிறந்தன்று
    • Option D: நலன் உடைமையின் நாணுச் சிறந்தன்று

    answer

    ஆர்கலி உலகத்து மக்கட் கெல்லாம்

    question 7

    முதுமொழிக்காஞ்சி எப்பா வகையால் ஆனது?

    • Option A: சிந்தியல் வெண் செந்துறை
    • Option B: சிந்தியல் தாழிசை
    • Option C: குறள் வெண் செந்துறை
    • Option D: குறள் தாழிசை

    answer

    குறள் வெண் செந்துறை

    question 8

    முதுமொழிக் காஞ்சியின் வேறு பெயர் என்ன?

    • Option A: மூத்தோர் சொல்
    • Option B: முதியோர் வாக்கு
    • Option C: பெரியோர் அறிவுரை
    • Option D: அறிவுரைக் கோவை

    answer

    அறிவுரைக் கோவை

    question 9

    தொல்காப்பியர் காஞ்சி திணைக்கு குறிப்பிடும் இலக்கணம் என்ன?

    • Option A: நகைச்சுவை
    • Option B: நிலையாமை
    • Option C: அறிவுரை
    • Option D: அனைத்தும்

    answer

    நிலையாமை

    question 10

    முதுமொழிக்காஞ்சி கூறும் கருத்துகள் யாவை?

    • Option A: அறம்
    • Option B: பொருள்
    • Option C: இன்பம்
    • Option D: கொடுக்கப்பட்டுள்ள அனைத்தும்

    answer

    கொடுக்கப்பட்டுள்ள அனைத்தும்

    You can practice this lesson
    here
    Would you like to read similar lesson? Please go to தமிழ் lessons

    Leave a Reply


    Please send your report

    latest lessons

    {{message}}