tamiltutor

TAMIL TUTOR இணையத்தில் ஒரு
கல்வி பாசறை

நீங்கள் உறங்கும் போது வருவது அல்ல கனவு, உங்களை உறங்க விடாமல் செய்வதே கனவு. -- அப்துல் கலாம்

பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் முதுமொழிக்காஞ்சி தொடர்பான வினா விடைகள், muthumozhi kanchi in Tamil

எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் உங்கள் அனைவருக்கும், முதலில் எங்களுடைய மனமார்ந்த நன்றிகள். நாம் தொடர்ச்சியாக அனைத்து பகுதிகளில் இருந்தும், தேர்வில் கேட்க அதிக வாய்ப்புள்ள முக்கியமான வினா விடைகளை, பயிற்சி கேள்விகளாக படித்து வருகிறோம். தமிழில் இருந்து தொடர்ச்சியாக, அனைத்து தலைப்புகளையும் ஆரம்பத்திலிருந்து ஒன்றன்பின் ஒன்றாக, பார்த்து வருகிறோம். அதன் தொடர்ச்சியாக இப்பொழுது, முதுமொழிக்காஞ்சி பாடப் பகுதியிலிருந்து தேர்வில் கேட்க அதிக வாய்ப்புள்ள முக்கிய கேள்விகளை, உங்களுக்காக இதோ கொண்டுவந்துள்ளோம். பயிற்சி எடுத்துக் கொள்ளுங்கள். நீங்கள் முழு மதிப்பெண் எடுக்க, எங்களுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்! நீங்கள் விரைவில் ஒரு அரசு அதிகாரியாக மாற, எங்களுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்! மறவாமல் இந்த பதிவை உங்களுடைய நண்பர்களுக்கும் பகிர்ந்து உதவுங்கள். நாமும் படிப்போம், படித்த சமுதாயத்தை உருவாக்குவோம். பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் முதுமொழிக்காஞ்சி தொடர்பான வினா விடைகள், muthumozhi kanchi in Tamil, for TNPSC, UPSC, TRB, TET, NET

Go to quiz

question 1

முதுமொழிக் காஞ்சியின் ஆசிரியர் யார்?

  • Option 1: கூடலூர்க்கிழார்
  • Option 2: புல்லங்காடனார்
  • Option 3: பூதஞ்சேந்தனார்
  • Option 4: பொறையனார்
  • Answer: கூடலூர்க்கிழார்

answer

question 2

முதுமொழிக் காஞ்சியில் வரும் காஞ்சியின் பொருள் என்ன?

  • Option 1: மன்னர்கள் தங்களது கால்களில் அணியும் அணிகலன்கள்
  • Option 2: விவசாயிகள் தங்களது கால்நடைகளுக்கு அணிவிக்கும் அணிகலன்கள்
  • Option 3: வீரர்கள் தங்களது கைகளில் அணியும் அணிகலன்கள்
  • Option 4: மகளிர் இடையில் அணியும் அணிகலன்கள்
  • Answer: மகளிர் இடையில் அணியும் அணிகலன்கள்

answer

question 3

முதுமொழிக் காஞ்சியின் பெயர் காரணம் யாது?

  • Option 1: முதுமொழிகளின் கோர்வை
  • Option 2: முதுமொழிகளின் பிறப்பிடம்
  • Option 3: முதியோர் வாக்கு
  • Option 4: பெரியோர் அறிவுரை
  • Answer: முதுமொழிகளின் கோர்வை

answer

question 4

முதுமொழி ஆசிரியரின் காலம் என்ன?

  • Option 1: கிபி மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்தவர்
  • Option 2: கிபி நான்காம் நூற்றாண்டைச் சேர்ந்தவர்
  • Option 3: கிபி ஐந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்தவர்
  • Option 4: கிபி இரண்டாம் நூற்றாண்டை சேர்ந்தவர்
  • Answer: கிபி ஐந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்தவர்

answer

question 5

முதுமொழிக் காஞ்சியில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை எத்தனை?

  • Option 1: அதிகாரத்திற்கு 15 பாடல்கள் வீதம் 150 பாடல்களைக் கொண்டது
  • Option 2: அதிகாரத்திற்கு 10 பாடல்கள் வீதம் 100 பாடல்களைக் கொண்டது
  • Option 3: அதிகாரத்திற்கு 12 பாடல்கள் வீதம் 60 பாடல்களைக் கொண்டது
  • Option 4: அதிகாரத்திற்கு 8 பாடல்கள் வீதம் 80 பாடல்களைக் கொண்டது
  • Answer: அதிகாரத்திற்கு 10 பாடல்கள் வீதம் 100 பாடல்களைக் கொண்டது

answer

question 6

முதுமொழிக் காஞ்சியில் உள்ள அனைத்து பாடல்களும் எவ்வாறு தொடங்குகின்றன?

  • Option 1: ஆர்கலி உலகத்து மக்கட் கெல்லாம்
  • Option 2: காதலின் சிறந்தன்று கண்ணஞ்சப் படுதல்
  • Option 3: முன்பெருகலின் பின் சிறுகாமை சிறந்தன்று
  • Option 4: நலன் உடைமையின் நாணுச் சிறந்தன்று
  • Answer: ஆர்கலி உலகத்து மக்கட் கெல்லாம்

answer

question 7

முதுமொழிக்காஞ்சி எப்பா வகையால் ஆனது?

  • Option 1: சிந்தியல் வெண் செந்துறை
  • Option 2: சிந்தியல் தாழிசை
  • Option 3: குறள் வெண் செந்துறை
  • Option 4: குறள் தாழிசை
  • Answer: குறள் வெண் செந்துறை

answer

question 8

முதுமொழிக் காஞ்சியின் வேறு பெயர் என்ன?

  • Option 1: மூத்தோர் சொல்
  • Option 2: முதியோர் வாக்கு
  • Option 3: பெரியோர் அறிவுரை
  • Option 4: அறிவுரைக் கோவை
  • Answer: அறிவுரைக் கோவை

answer

question 9

தொல்காப்பியர் காஞ்சி திணைக்கு குறிப்பிடும் இலக்கணம் என்ன?

  • Option 1: நகைச்சுவை
  • Option 2: நிலையாமை
  • Option 3: அறிவுரை
  • Option 4: அனைத்தும்
  • Answer: நிலையாமை

answer

question 10

முதுமொழிக்காஞ்சி கூறும் கருத்துகள் யாவை?

  • Option 1: அறம்
  • Option 2: பொருள்
  • Option 3: இன்பம்
  • Option 4: கொடுக்கப்பட்டுள்ள அனைத்தும்
  • Answer: கொடுக்கப்பட்டுள்ள அனைத்தும்

answer

பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் உள்ள நீதி நூல்களில் ஒன்றான ஏலாதியில் இருந்து, முக்கியமான பயிற்சி கேள்விகளை கொண்டு வந்துள்ளோம். முயன்று பாருங்கள், நீங்கள் முழு மதிப்பெண் எடுக்க, எங்களுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்!
Next: பதினெண்கீழ்க்கணக்கில் ஏலாதி பற்றிய வினா விடைகள், elati in Tamil
Would you like to read similar lesson? Please go to தமிழ் lessons

Leave a Reply


Please send your report

latest lessons

{{message}}