tamiltutor

TAMIL TUTOR இணையத்தில் ஒரு
கல்வி பாசறை

எவன் பிறர் நற்செயல்களைப் பார்த்து மகிழ்ச்சி கொள்ளவில்லையோ,அவனால் நல்ல செயல்கள் எதையும் செய்ய முடியாது. -- ஜேம்ஸ் ஆலன்

பதினெண் கீழ்க்கணக்கு அக நூல்கள் சார்ந்த வினா விடைகள், pathinenkilkanakku noolgal aga noolgal part 1

எங்கள் தளத்திற்கு வருகை புரிந்து தொடர்ந்து ஆதரவளித்துவரும் நல்லுள்ளங்களுக்கு எங்களின் நெஞ்சார்ந்த நன்றிகள். நாம் தமிழில் இருந்து, தொடர்ச்சியாக ஒன்றன்பின் ஒன்றாக, அனைத்து தலைப்புகளையும் பார்த்துக்கொண்டு வருகிறோம். அதன் தொடர்ச்சியாக இப்போது, பதினெண் கீழ்க்கணக்கில் உள்ள அக நூல்கள் சார்ந்த வினா விடைகளை பார்க்க இருக்கிறோம். நீங்கள் ஒரு அரசு அதிகாரியாக மாற எங்களுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்! நாமும் படிப்போம், படித்த சமுதாயத்தை உருவாக்குவோம்.

Go to quiz

question 1

பதினெண் கீழ்க்கணக்கில் அக நூல்கள் எத்தனை?

  • Option A: ஏழு நூல்கள்
  • Option B: ஆறு நூல்கள்
  • Option C: ஒன்பது நூல்கள்
  • Option D: நான்கு நூல்கள்

answer

ஆறு நூல்கள்

question 2

ஐந்திணை ஐம்பது ஆசிரியர் யார்?

  • Option A: கூடலூர்க்கிழார்
  • Option B: காரியாசான்
  • Option C: மாறன் பொறையனார்
  • Option D: புல்லங்காடனார்

answer

மாறன் பொறையனார்

question 3

ஐந்திணை ஐம்பதில் திணைக்கு எத்தனை பாடல்கள் வீதம் அமைந்துள்ளது?

  • Option A: 10 பாடல்கள்
  • Option B: 15 பாடல்கள்
  • Option C: 14 பாடல்கள்
  • Option D: 18 பாடல்கள்

answer

10 பாடல்கள்

question 4

ஐந்திணை ஐம்பது கூறும் கூந்தல் அலங்காரம் எத்தனை?

  • Option A: நான்கு வகைகள்
  • Option B: ஏழு வகைகள்
  • Option C: ஆறு வகைகள்
  • Option D: ஐந்து வகைகள்

answer

ஐந்து வகைகள்

question 5

ஐந்திணை எழுபது ஆசிரியர் யார்?

  • Option A: பொய்கையார்
  • Option B: மூவாதியார்
  • Option C: கண்ணங் கூத்தனார்
  • Option D: புல்லங்காடனார்

answer

மூவாதியார்

question 6

ஐந்திணை எழுபதில் திணைக்கு எத்தனை பாடல்கள் வீதம் அமைந்துள்ளது?

  • Option A: 14 பாடல்கள்
  • Option B: 15 பாடல்கள்
  • Option C: 12 பாடல்கள்
  • Option D: 13 பாடல்கள்

answer

14 பாடல்கள்

question 7

ஐந்திணை எழுபது -ன் ஆசிரியர் எந்த சமயத்தை சார்ந்தவர்?

  • Option A: புத்த சமயத்தைச் சேர்ந்தவர்
  • Option B: சமண சமயத்தைச் சேர்ந்தவர்
  • Option C: வைணவ சமயத்தைச் சேர்ந்தவர்
  • Option D: சைவ சமயத்தைச் சேர்ந்தவர்

answer

சமண சமயத்தைச் சேர்ந்தவர்

தமிழ்நாட்டின் தலைசிறந்த ஆங்கில ஆசிரியரிடம், கற்றுக் கொள்ள இதோ சிறந்த வாய்ப்பு, பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

இதுவே, உங்களுடைய இறுதியான ஆங்கில பயிற்சி வகுப்பாக இருக்கும்.

ஏனெனில் இதை முடித்தவுடன், நீங்களே கூறுவீர்கள், உங்களால் பிறருக்கு பயிற்சி தர முடியும் என்று.

இந்த வகுப்பை பற்றி மேலும் அறிந்து கொள்ள, கீழே உள்ள தொலைபேசி எண்களுக்கு, தயங்காமல் தொடர்பு கொள்ளுங்கள்.

  • VIGNESH 6383073556 /
  • VENKATESH 9360662257

  • அல்லது இங்கு முன்பதிவு செய்து, டெமோ வகுப்புகளை பாருங்கள்.

    question 8

    ஐந்திணை ஐம்பது கூறும் "புண்ணுக்கு வெங்காரம் இடுதல், மணலில் கூடல் இழைத்து எதிர்காலத்தை அறிதல்" முதலியவை எவற்றைக் குறிக்கிறது?

    • Option A: பழக்கவழக்கங்கள்
    • Option B: திருவிழாக்கள்
    • Option C: சிறப்பு நிகழ்ச்சிகள்
    • Option D: சடங்குகள்

    answer

    பழக்கவழக்கங்கள்

    question 9

    ஐந்திணை எழுபது கூறும் "பெண்களுக்கு இடக்கண் துடித்தல், ஆந்தை அலறுதல், தும்மல் வருதல்" முதலியவை எவற்றைக் குறிக்கிறது?

    • Option A: தீய நிமித்தங்கள்
    • Option B: நல்ல நிமித்தங்கள்
    • Option C: தலைவன் வரவை குறிப்பிடும் குறியீடுகள்
    • Option D: அவ்வாறு எதுவும் கூறப்படவில்லை

    answer

    நல்ல நிமித்தங்கள்

    question 10

    இந்நூலை ஓதாதார் செந்தமிழ் சேராதார் என்று ஐந்திணை ஐம்பதை சிறப்பித்துக் கூறும் நூல் எது?

    • Option A: ஐந்திணை ஐம்பது -ன் பாயிரம்
    • Option B: ஐந்திணை எழுபது -ன் பாயிரம்
    • Option C: திணைமாலை நூற்றைம்பது -ன் பாயிரம்
    • Option D: திணைமொழி ஐம்பது -ன் பாயிரம்

    answer

    ஐந்திணை ஐம்பது -ன் பாயிரம்

    You can practice this lesson
    here
    Would you like to read similar lesson? Please go to தமிழ் lessons

    Leave a Reply


    Please send your report

    latest lessons

    {{message}}