tamiltutor

TAMIL TUTOR இணையத்தில் ஒரு
கல்வி பாசறை

உன் மீது நம்பிக்கை இருந்தால் தோல்வி கூட உன்னைநெருங்க பயப்படும்! -- புருஸ்லீ

பதினெண் கீழ்க்கணக்கு அக நூல்கள் சார்ந்த வினா விடைகள், pathinenkilkanakku aga noolgal part 2

எங்களோடு தொடர்ந்து பயணித்துக் கொண்டு வரும் அனைத்து நல்லுள்ளங்களுக்கும், எங்களுடைய மனமார்ந்த நன்றிகள். நாம் சென்ற பகுதியில் பதினெண்-கீழ்க்கணக்கு -அக நூல்கள் சார்ந்த கேள்விகள் பகுதி ஒன்றை கண்டோம். இப்பொழுது அதன் தொடர்ச்சியாக, பதினெண்கீழ்க்கணக்கு -அக நூல்கள் பகுதி இரண்டை காண உள்ளோம். அனைத்து கேள்விகளையும் படித்துவிட்டு, பயிற்சி எடுத்துக் கொள்ளுங்கள். தவறாமல் இந்த பதிவை உங்களுடைய நண்பர்களுக்கும் பகிருங்கள். நாமும் படிப்போம், படித்த சமுதாயத்தை உருவாக்குவோம்! பதினெண் கீழ்க்கணக்கு அக நூல்கள் சார்ந்த வினா விடைகள், pathinenkilkanakku noolgal aga noolgal part 2, for TNPSC -UNIT 8, UPSC, TRB, TET, NET

Go to quiz

question 1

அகநூல்களில் காலத்தால் பெயர் பெற்ற நூல் எது?

  • Option A: பழமொழி நானூறு
  • Option B: கார்நாற்பது
  • Option C: களவழி நாற்பது
  • Option D: இன்னா நாற்பது

answer

கார்நாற்பது

question 2

கார் நாற்பது ஆசிரியர் யார்?

  • Option A: கண்ணன் சேந்தனார்
  • Option B: புல்லங்காடனார்
  • Option C: முன்றுரை அரையனார்
  • Option D: மதுரை கண்ணங் கூத்தனார்

answer

மதுரை கண்ணங் கூத்தனார்

question 3

ஐந்திணை எழுபதில் 'திருமண காலத்தின் பொழுது தலைவன் கூறிய உறுதி மொழிகளை தலைவி எழுதி பெறுதல்' எதை குறிப்பிடுகிறது?

  • Option A: மக்களின் பழக்க வழக்கம்
  • Option B: சடங்கு
  • Option C: சம்பிரதாயம்
  • Option D: நம்பிக்கை இன்மை

answer

மக்களின் பழக்க வழக்கம்

question 4

திணை மொழி ஐம்பது ஆசிரியர் யார்?

  • Option A: பெருவாயின் முள்ளியார்
  • Option B: கணிமேதாவியார்
  • Option C: கண்ணன் சேந்தனார்
  • Option D: காரியாசான்

answer

கண்ணன் சேந்தனார்

தமிழ்நாட்டின் தலைசிறந்த ஆங்கில ஆசிரியரிடம், கற்றுக் கொள்ள இதோ சிறந்த வாய்ப்பு, பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

இதுவே, உங்களுடைய இறுதியான ஆங்கில பயிற்சி வகுப்பாக இருக்கும்.

ஏனெனில் இதை முடித்தவுடன், நீங்களே கூறுவீர்கள், உங்களால் பிறருக்கு பயிற்சி தர முடியும் என்று.

இந்த வகுப்பை பற்றி மேலும் அறிந்து கொள்ள, கீழே உள்ள தொலைபேசி எண்களுக்கு, தயங்காமல் தொடர்பு கொள்ளுங்கள்.

  • VIGNESH 6383073556 /
  • VENKATESH 9360662257

  • அல்லது இங்கு முன்பதிவு செய்து, டெமோ வகுப்புகளை பாருங்கள்.

    question 5

    திணை மாலை நூற்றைம்பது ஆசிரியர் யார்?

    • Option A: பூதஞ்சேந்தனார்
    • Option B: நல்லாதனார்
    • Option C: கணிமேதையார்
    • Option D: விளம்பி நாகனார்

    answer

    கணிமேதையார்

    question 6

    திணைமாலை நூற்றைம்பதில் திணைக்கு எத்தனை பாடல்கள் வீதம் அமைந்துள்ளது?

    • Option A: 30 பாடல்கள்
    • Option B: 25 பாடல்கள்
    • Option C: 35 பாடல்கள்
    • Option D: 40 பாடல்கள்

    answer

    30 பாடல்கள்

    question 7

    கார்நாற்பது யாருடைய கூற்றுகளாக வருகிறது?

    • Option A: அரசன், அரசி, தோழி, பாகன்
    • Option B: தலைவன், தலைவி, தோழி, பாகன்
    • Option C: தந்தை, தாய், தோழி, பாகன்
    • Option D: தலைவன், தலைவி, தோழி, தோழன்

    answer

    தலைவன், தலைவி, தோழி, பாகன்

    question 8

    திணைமொழி ஐம்பதில் திணைக்கு எத்தனை பாடல்கள் வீதம் அமைந்துள்ளது?

    • Option A: 11 பாடல்கள்
    • Option B: 12 பாடல்கள்
    • Option C: 10 பாடல்கள்
    • Option D: 14 பாடல்கள்

    answer

    10 பாடல்கள்

    question 9

    திணைமாலை நூற்றைம்பது கூறும் செய்திகள் யாவை?

    • Option A: புண்ணுக்கு வெங்காரம் இடுதல், மணலில் கூடல் இழைத்து எதிர்காலத்தை அறிதல்
    • Option B: திருமணத்தின் பொழுது பொருட்கள் வாங்குவது நன்றன்று என்றும், திண்ணிய முயற்சி இருக்குமானால் அதன் பயனை இம்மையிலேயே அடையலாம் என்றும் குறிப்பிடுகிறது
    • Option C: பெண்களுக்கு இடக்கண் துடித்தல், ஆந்தை அலறுதல், தும்மல் வருதல்
    • Option D: வேள்வி செய்தல், கார்த்திகையில் விளக்கு இடுதல்

    answer

    திருமணத்தின் பொழுது பொருட்கள் வாங்குவது நன்றன்று என்றும், திண்ணிய முயற்சி இருக்குமானால் அதன் பயனை இம்மையிலேயே அடையலாம் என்றும் குறிப்பிடுகிறது

    question 10

    கார்நாற்பது கூறும் செய்திகள் யாவை?

    • Option A: வேள்வி செய்தல், கார்த்திகையில் விளக்கு இடுதல்
    • Option B: புண்ணுக்கு வெங்காரம் இடுதல், மணலில் கூடல் இழைத்து எதிர்காலத்தை அறிதல்
    • Option C: பெண்களுக்கு இடக்கண் துடித்தல், ஆந்தை அலறுதல், தும்மல் வருதல்
    • Option D: திருமணத்தின் பொழுது பொருட்கள் வாங்குவது நன்றன்று என்றும், திண்ணிய முயற்சி இருக்குமானால் அதன் பயனை இம்மையிலேயே அடையலாம் என்றும் குறிப்பிடுகிறது

    answer

    வேள்வி செய்தல், கார்த்திகையில் விளக்கு இடுதல்

    You can practice this lesson
    here
    Would you like to read similar lesson? Please go to தமிழ் lessons

    Leave a Reply


    Please send your report

    latest lessons

    {{message}}