tamiltutor

TAMIL TUTOR இணையத்தில் ஒரு
கல்வி பாசறை

நீங்கள் உறங்கும் போது வருவது அல்ல கனவு, உங்களை உறங்க விடாமல் செய்வதே கனவு. -- அப்துல் கலாம்

நெடுநல்வாடை, nedunalvaadai in Tamil part 1

எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு அளித்து வரும், உங்கள் அனைவருக்கும், முதலில் எங்களுடைய மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்!rnஇப்பொழுது, நாம் தமிழ் இலக்கிய வரலாற்றில் இருந்து, பத்துப்பாட்டு பகுதியிலிருந்து, நெடுநல்வாடை தொடர்பான கேள்விகளை அதன் சரியான விடைகள் ஓடு காண இருக்கிறோம். rnகீழே தரப்பட்டுள்ள அனைத்து கேள்விகளையும், தெளிவாக படித்துவிட்டு, பிறகு பயிற்சி செய்து பாருங்கள்.rnஅவ்வப்பொழுது அனைத்து பாடங்களையும், கையோடு படித்துவிடுங்கள். தாமதம் காட்டாதீர்கள். பிறகு மீண்டும் மீண்டும் படித்த பாடங்களையும், நமது தளத்தில் GO TO QUIZ என்ற லிங்கை பிரஸ் செய்து, பயிற்சி செய்து பார்த்துக் கொண்டே இருங்கள். rnஅப்போதுதான் படித்த பாடங்கள் அனைத்தும் மறந்து போகாமல் இருக்கும். படித்தால் மட்டும் போதாது, பயிற்சி இன்றியமையாதது ஆகும். rnஎனவே படிக்கவும், பயிற்சி செய்யவும், நமது தளமானது வசதி செய்து கொடுத்துள்ளது. பயன்படுத்திக் கொள்ளுங்கள்.rnமறவாமல் இந்த பதிவை உங்களுடைய நண்பர்களுக்கும் பகிருங்கள். rnநாமும் படிப்போம், படித்த சமுதாயத்தை உருவாக்குவோம்.rnநெடுநல்வாடை, nedunalvaadai in Tamil for UPSC, TNPSC, TET, TRB, NET

Go to quiz

question 1

நெடுநல்வாடை அடிகளின் எண்ணிக்கை எத்தனை?

  • Option 1: 198 அடிகள்
  • Option 2: 128 அடிகள்
  • Option 3: 168 அடிகள்
  • Option 4: 188 அடிகள்
  • Answer: 188 அடிகள்

answer

1

question 2

நெடுநல்வாடையின் ஆசிரியர் யார்?

  • Option 1: அம்மூவனார்
  • Option 2: நக்கீரர்
  • Option 3: ஓதலாந்தையார்
  • Option 4: ஓரம்போகியார்
  • Answer: நக்கீரர்

answer

question 3

நெடுநல்வாடையை புறநூல் என்று கூறிய உரை ஆசிரியர் யார்?

  • Option 1: மறைமலை அடிகள்
  • Option 2: நச்சினார்க்கினியர்
  • Option 3: மு கதிரேசன் செட்டியார்
  • Option 4: மு.வரதராசனார்
  • Answer: நச்சினார்க்கினியர்

answer

question 4

நெடுநல்வாடையை ஆகநூலாக நிறுவியவர் யார்?

  • Option 1: பண்டிதமணி கதிரேசன் செட்டியார்
  • Option 2: ஒட்டக்கூத்தர்
  • Option 3: மதுரைக்கண்ணங்கூத்தனார்
  • Option 4: கவுந்தியடிகள்
  • Answer: பண்டிதமணி கதிரேசன் செட்டியார்

answer

question 5

‘வேம்பு தலையாத்த நோன்காழ் எஃகமொடு முன்னோன் முறைமுறை காட்ட’ என்ற வரிகள் நெடுநல்வாடையை எந்த நூலாக மாற்றுகிறது?

  • Option 1: அரசியல் நூல்
  • Option 2: புறநூல்
  • Option 3: பக்தி நூல்
  • Option 4: அகநூல்
  • Answer: புறநூல்

answer

question 6

நெடுநல்வாடையில் கூறப்பட்டுள்ள பாசறை எது?

  • Option 1: நிலையாமைப்பாசறை
  • Option 2: நிற்றல்ப்பாசறை
  • Option 3: கூதிர்ப்பாசறை
  • Option 4:
  • Answer: கூதிர்ப்பாசறை

answer

question 7

நெடுநல்வாடையில் பாண்டிமாதேவி எவ்வாறு வர்ணிக்கப்படுகிறார்?

  • Option 1: புனையா ஓவியம்
  • Option 2: கொய்யா மலர்
  • Option 3: மலராத மொட்டு
  • Option 4: அழகிய சிலை
  • Answer: புனையா ஓவியம்

answer

question 8

நெடுநல்வாடையின் பாட்டுடைத் தலைவன் யார்?

  • Option 1: பாண்டியன் நெடுஞ்செழியன்
  • Option 2: நன்னன் சேய் நன்னன்
  • Option 3: ஆரிய அரசன் பிரகதத்தன்
  • Option 4: சோழன் கரிகாலன்
  • Answer: பாண்டியன் நெடுஞ்செழியன்

answer

question 9

“கொற்றவை வழிபாடே பாட்டின் நடுமணியாகப் பதிந்துள்ள வைரம்” எனக் கூறியவர் யார்?

  • Option 1: மறைமலை அடிகள்
  • Option 2: மு.வரதராசனார்
  • Option 3: நச்சினார்க்கினியர்
  • Option 4: மதுரைக்கண்ணங்கூத்தனார்
  • Answer: மு.வரதராசனார்

answer

question 10

நெடுநல்வாடையின் பெயர் காரணம் யாது?

  • Option 1: பகை மேல் சென்ற தலைவனைப் பிரிந்து உள்ள தலைவிக்கு, வாடை காற்றானது தீயது ஆகவும் அதே தலைவனுக்கு நன்மையாக இருப்பதாகவும் விளக்குவதால்.
  • Option 2: நீண்ட நன்மை நிறைந்த வாடை காற்றானது, மக்களுக்கு இன்பத்தையும், செல்வத்தையும், தருவதாகவும் விளக்குவதால்.
  • Option 3: நீண்ட மிக அடர்த்தியான வாடைக் காற்றைக் கொண்ட காலத்தை, இந்தப்பாடல் விளக்குவதால்.
  • Option 4: நெடிய நன்மை நிறைந்த வாடைக்காற்று, தலைவனுக்கும் தலைவிக்கும் இன்பத்தை கொடுப்பதாக விளக்குவதால்.
  • Answer: பகை மேல் சென்ற தலைவனைப் பிரிந்து உள்ள தலைவிக்கு, வாடை காற்றானது தீயது ஆகவும் அதே தலைவனுக்கு நன்மையாக இருப்பதாகவும் விளக்குவதால்.

answer

Delhi sultanate, டெல்லி சுல்தான் அரசர்கள் பாடப் பகுதியிலிருந்து, தேர்வில் கேட்க அதிக வாய்ப்புள்ள முக்கிய கேள்விகள் இங்கு தரப்பட்டுள்ளது. பயிற்சி எடுத்துக் கொள்ளுங்கள். நீங்கள் முழு மதிப்பெண் எடுக்க எங்களுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்!
Next: டெல்லி சுல்தான் அரசர்கள், Delhi sultanate in tamil, part 1
Would you like to read similar lesson? Please go to தமிழ் lessons

Leave a Reply


Please send your report

latest lessons

{{message}}