tamiltutor

TAMIL TUTOR இணையத்தில் ஒரு
கல்வி பாசறை

நீங்கள் உறங்கும் போது வருவது அல்ல கனவு, உங்களை உறங்க விடாமல் செய்வதே கனவு. -- அப்துல் கலாம்

தமிழ்நாட்டில் சமூக மாற்றங்கள், Social Transformation in Tamilnadu in Tamil part 3

முதலில், எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் உங்கள் அனைவருக்கும், எங்களுடைய மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம். நீங்கள் தொடர்ச்சியாக படித்து வந்தால் மட்டுமே, வருகின்ற தேர்வுகளில் தேர்ச்சி பெற முடியும். எனவே தவறாமல், தினந்தோறும் படித்துவிட்டு, நமது தளத்தில் பயிற்சி எடுத்துக்கொள்ளுங்கள். நாம் தற்பொழுது UNIT -8 -ல் உள்ள தலைப்புகளை, ஒன்றன்பின் ஒன்றாக பார்த்து வருகிறோம். அதன் தொடர்ச்சியாக, இப்போது தமிழ்நாட்டில் சமூக மாற்றங்கள் "Social Transformation in Tamilnadu part 3" என்ற பகுதியிலிருந்து, தேர்வில் கேட்க அதிக வாய்ப்புள்ள முக்கியமான கேள்விகளை பதில்கள் -ஓடு இங்கு தந்துள்ளோம். படித்துவிட்டு, பயிற்சியும் எடுத்துக் கொள்ளுங்கள். நீங்கள் விரைவில் ஒரு அரசு அதிகாரியாக மாற, எங்களுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்! மறவாமல் இந்தப் பதிவை, உங்களுடைய நண்பர்களுக்கும் பகிருங்கள். நாமும் படிப்போம், படித்த சமுதாயத்தை உருவாக்குவோம். தமிழ்நாட்டில் சமூக மாற்றங்கள், Social Transformation in Tamilnadu in Tamil part 3, FOR TNPSC GROUP1, GROUP 2, UNIT-8

Go to quiz

question 1

தாசிகளின் மோசவலை என்ற புத்தகத்தின் ஆசிரியர்?

  • Option 1: டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி
  • Option 2: பத்மாஸ்ரீ அம்மையார்
  • Option 3: கமலாபாய் அம்மையார்
  • Option 4: மூவலூர் ராமாமிர்தம் அம்மையார்
  • Answer: மூவலூர் ராமாமிர்தம் அம்மையார்

answer

question 2

காந்தி தனது சகோதரியின் மரணத்தை விட வருத்தத்தை அளித்ததாக யாருடைய மரணத்தை குறிப்பிடுகிறார்?

  • Option 1: தாயார் அம்மையார்
  • Option 2: தில்லையாடி வள்ளியம்மை
  • Option 3: K.p. சுந்தராம்பாள் அம்மையார்
  • Option 4: அம்புஜத்தம்மாள்
  • Answer: தில்லையாடி வள்ளியம்மை

answer

question 3

சகோதரிகள் சங்கத்தை தோற்றுவித்தவர்கள்?

  • Option 1: கமலாபாய் அம்மையார் மற்றும் அம்புஜத்தம்மாள் அம்மையார்
  • Option 2: தாயார் அம்மையார் மற்றும் சுந்தராம்பாள் அம்மையார்
  • Option 3: கமலாபாய் அம்மையார் மற்றும் சுந்தராம்பாள் அம்மையார்
  • Option 4: பத்மாஸ்ரீ அம்மையார் மற்றும் தாயார் அம்மையார்
  • Answer: பத்மாஸ்ரீ அம்மையார் மற்றும் தாயார் அம்மையார்

answer

question 4

கடலூர் அஞ்சலை அம்மாள் எவ்வாறு பாராட்டப் பெற்றார்?

  • Option 1: தென்னாட்டு ஜான்சிராணி
  • Option 2: வெற்றி வீராங்கனை
  • Option 3: ராணி மங்கம்மா
  • Option 4: சுகந்திர செல்வி
  • Answer: தென்னாட்டு ஜான்சிராணி

answer

question 5

சீனிவாச காந்தி நிலையம் தொடங்கியவர் யார்?

  • Option 1: கமலாபாய் அம்மையார்
  • Option 2: தில்லையாடி வள்ளியம்மை
  • Option 3: அம்புஜத்தம்மாள்
  • Option 4: மூவலூர் ராமாமிர்தம் அம்மையார்
  • Answer: அம்புஜத்தம்மாள்

answer

question 6

அம்புஜம் அம்மாள் எழுதிய நூல் எது?

  • Option 1: நமது பாரதம்
  • Option 2: நான் கண்ட பாரதம்
  • Option 3: நாளைய சுதந்திரம்
  • Option 4: பெற்றுவிட்டோம் விடுதலை
  • Answer: நான் கண்ட பாரதம்

answer

question 7

தண்டி யாத்திரையின் போது காந்தி கைது செய்யப்பட்டதை கண்டித்து, தனது கௌரவ நீதிபதி பதவியை துறந்தவர் யார்?

  • Option 1: மூவலூர் ராமாமிர்தம் அம்மையார்
  • Option 2: கமலாபாய் அம்மையார்
  • Option 3: K.p. சுந்தராம்பாள் அம்மையார்
  • Option 4: ருக்மணி லட்சுமிபதி
  • Answer: கமலாபாய் அம்மையார்

answer

question 8

சட்டமறுப்பு இயக்கத்தில் ஈடுபட்டு அபராதம் கட்டிய முதல் பெண்மணியின் பெயர்?

  • Option 1: மூவலூர் ராமாமிர்தம் அம்மையார்
  • Option 2: K.p. சுந்தராம்பாள் அம்மையார்
  • Option 3: பத்மாஸ்ரீ அம்மையார்
  • Option 4: ருக்மணி லட்சுமிபதி
  • Answer: ருக்மணி லட்சுமிபதி

answer

question 9

காந்தியோ பரம ஏழை சந்நியாசி என்ற பாடலை பாடியவர் யார்?

  • Option 1: அம்புஜத்தம்மாள்
  • Option 2: K.p. சுந்தராம்பாள் அம்மையார்
  • Option 3: பத்மாஸ்ரீ அம்மையார்
  • Option 4: தாயார் அம்மையார்
  • Answer: K.p. சுந்தராம்பாள் அம்மையார்

answer

K

question 10

சென்னை மாகாணத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் சட்டமன்ற பெண் உறுப்பினர் யார்?

  • Option 1: பத்மாஸ்ரீ அம்மையார்
  • Option 2: மூவலூர் ராமாமிர்தம் அம்மையார்
  • Option 3: K.p. சுந்தராம்பாள் அம்மையார்
  • Option 4: ருக்மணி லட்சுமிபதி
  • Answer: ருக்மணி லட்சுமிபதி

answer

பதினெண் கீழ்க்கணக்கில் உள்ள நீதி நூல்களில் ஒன்றான, நான்மணிக் கடிகையில் இருந்து, தேர்வுக்கு அதிகம் கேட்க வாய்ப்பு உள்ள முக்கிய கேள்விகள் தரப்பட்டுள்ளது. முயற்சி செய்து பாருங்கள். உங்களுக்கு எங்களுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்!
Next: பதினெண்கீழ்க்கணக்கில் நான்மணிக்கடிகை, nanmanikadigai in Tamil
Would you like to read similar lesson? Please go to unit 8 lessons

Leave a Reply


Please send your report

latest lessons

{{message}}