tamiltutor

TAMIL TUTOR இணையத்தில் ஒரு
கல்வி பாசறை

ஒவ்வொருவரும் உலகத்தை மாற்ற நினைக்கிறார்களேயொழிய தம்மை மாற்றிக்கொள்ள நினைப்பதில்லை. -- ஆப்ரகாம் லிங்கன்

டெல்லி சுல்தான் அரசர்கள், Delhi sultanate in tamil, part 1

எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு அளித்து, பயன் பெற்று வரும் உங்கள் அனைவருக்கும், எங்களுடைய மனமார்ந்த நன்றிகளை முதலில் தெரிவித்துக் கொள்கிறோம்! தொடர்ச்சியாக, நாம் போட்டித் தேர்வுகளில் கேட்க அதிக வாய்ப்பு உள்ள முக்கிய கேள்விகளை, படித்துக் கொண்டு வருகிறோம். அதன் தொடர்ச்சியாக, இன்று டெல்லி சுல்தான் அரசர்கள் என்ற பகுதியிலிருந்து, முக்கிய கேள்விகளை கொண்டு வந்துள்ளோம். இன்று ஒரு புது முயற்சியாக, மதன் அவர்கள் எழுதிய வந்தார்கள் வென்றார்கள் என்ற புத்தகத்தில் உள்ள, சுஜாதா எழுத்தாளர் அவர்கள் தந்துள்ள அணிந்துரையில் இருந்து, ஒரு சில பகுதிகளை தரலாம் என்று இருக்கிறோம். "மொகலாய மன்னர்களை, படையெடுத்து வந்து நம் நாட்டைச் சூறையாடி நல்லதும் கெட்டதும் கலந்து ஆண்ட அந்த மன்னர்களை, நிஜரூபத்தில் நகமும் சதையும் பாசமும் கோபமும் கிறுக்குத்தனமும் சூழ்ச்சியும் பேதமையும்... சுருக்கமாக, அத்தனை சரித்திரர்களையும் மூச்சுவிட்டு முதுகு சொறிந்துகொண்டு வாழ்ந்த-வீழ்ந்த மனிதர்களாகக் காட்டியிருக்கிறார். நமக்குச் சம்பிரதாயமாகச் சொல்லிக் கொடுக்கப்பட்ட சரித்திரத்தில் அக்பர், ஔரங்கசீப், துக்ளக், சிவாஜி போன்றவர்களின் சில குணங்கள்தான் வெளிச்சமிடப்பட்டன. துக்ளக் தலைநகரை மாற்றியதும் அக்பர் ராஜபுதன மங்கையை மணந்து இந்து-முஸ்லிம் ஒற்றுமைக்கு முயன்றதும் ஔரங்கசீப் சங்கீதத்தை வெறுத்ததும் சிவாஜி அஃப்ஸல்கான் மீது சீறிப்பாய்ந்ததும் இப்படி ஒவ்வொரு மன்னருக்கும் ஒரே ஒரு குணாதிசயம்தான் சரித்திரப் பாடங்களினால் நம் மனதில் பதிக்கப்பட்டு மிச்சமிருக்கிறது. மதன் அந்த மன்னர்களின் பின்னணி, வளர்ந்தவிதம் இவற்றுடன் அவர்களின் நிஜரூபத்தையும் முழுப்பரிமாணத்தையும் காட்ட முயன்றிருக்கிறார்.“மென்மை, கொடூரம், இரக்கம், நிதானமின்மை, நீதியுணர்வு, குழந்தைத்தனம், கலையுணர்ச்சி, கொலைவெறி இவற்றின் களேபரமான கலவைதான் ஜஹாங்கீர் பாதுஷா!” இத்தனை விஸ்தாரமாக ஒவ்வொரு மன்னரின் பின்னணியையும் மதன் ஆராயும்போது நமக்குப் பல புதிய செய்திகளும் ஆச்சரியங்களும் கிடைக்கின்றன.சரித்திரம் என்பதே நடந்துபோனதை மற்றொரு காலகட்டத்தில் கிடைக்கும் குறைபட்ட சாட்சியங்களை வைத்துக்கொண்டு கோடிட்ட இடங்களை நிரப்புவதுதான். சூழ்நிலை சாட்சியங்களை வைத்துக் கொண்டுதான் நாம் நமது சோழர்களையும் மொகலாயர்களையும் மறுபடி உருவாக்குகிறோம். அப்படி உருவாக்குகையில் ஒரு கோடியில் இருப்பது மிகையான சம்பவங்களைக் கொண்ட சரித்திர நவீனங்களின் தீப்பந்தங்களும் உறையூர் ஒற்றர்களும் யவன மங்கைகளும்...இவர்கள் எல்லாம் இல்லை என்று மதன் சொல்லவில்லை. இந்தப் புத்தகத்தில் இவையெல்லாமே உண்டு. ஆனால், தேதிகளும் படைவீரர்களின் எண்ணிக்கைகளும் நகைகளின் விவரங்களும் சரித்திர ஆதாரத்தின் அடிப்படிப்படையில் கொடுத்திருப்பதால், மிகை தவிர்க்கப்பட்ட சரித்திரம் இது. " "எழுத்தாளர்: மதன்." "நூல்: வந்தார்கள் வென்றார்கள்." "எழுத்தாளர் சுஜாதாவின் வந்தார்கள் வென்றார்கள் என்ற நூலுக்கான அணிந்துரை" தவறாமல் இந்த பதிவை உங்களுடைய நண்பர்களுக்கும் பகிருங்கள். நாமும் படிப்போம், படித்த சமுதாயத்தை உருவாக்குவோம்.

Go to quiz

question 1

மாம்லுக் மரபு என்ற மரபை தோற்றுவித்தவர் யார்?

 • Option A: பால்பன்
 • Option B: இல்டுட்மிஷ்
 • Option C: முகமது கோரி
 • Option D: குத்புதீன் ஐபக்

answer

குத்புதீன் ஐபக்

ஆங்கிலத்தில் புலமை வேண்டுமா?

அவ்வாறென்றால், பழைய கற்றல் முறையை கைவிட்டு, புதுமையான எளிய விதிமுறைகளைக் கொண்ட இந்த, புதிய வகுப்பில் இப்பொழுதே சேருங்கள்.

இந்த வகுப்பை பற்றி மேலும் அறிந்து கொள்ள, கீழே உள்ள தொலைபேசி எண்களுக்கு, தயங்காமல் தொடர்பு கொள்ளுங்கள்.

 • VIGNESH 6383073556 /
 • VENKATESH 9360662257

 • அல்லது இங்கு முன்பதிவு செய்து, டெமோ வகுப்புகளை பாருங்கள்.
  Banner of abacus of English

  question 2

  சுல்தானா ரஸியா கொள்ளையர்களால் கொலையுண்ட இடம் எது?

  • Option A: கைதான்
  • Option B: முல்தான்
  • Option C: பனாரஸ்
  • Option D: காபூல்

  answer

  கைதான்

  question 3

  தெய்வீக உரிமை கோட்பாட்டை ஒத்த புதிய அரச உரிமை கோட்பாட்டை உருவாக்கியவர் யார்?

  • Option A: ஜலாலுதீன்
  • Option B: பால்பன்
  • Option C: முபாரக் ஷா
  • Option D: ஆதிஷா

  answer

  பால்பன்

  question 4

  தேவகிரி படையெடுப்பின்போது அலாவுதீன் கில்ஜி எந்தப் பகுதியின் ஆளுநராக இருந்தார்?

  • Option A: பதான்
  • Option B: கரா
  • Option C: மீரட்
  • Option D: டெல்லி

  answer

  கரா

  question 5

  குதிரைகளுக்கு சூடு போடும் முறையை அறிமுகப்படுத்தியவர் யார்?

  • Option A: பெரோஷ் துக்ளக்
  • Option B: முகமது பின் துக்ளக்
  • Option C: ஜலாலுதீன் கில்ஜி
  • Option D: அலாவுதீன் கில்ஜி

  answer

  அலாவுதீன் கில்ஜி

  question 6

  ஜூனா கான் என்பது யாருடைய இயற்பெயர்?

  • Option A: முகமது பின் துக்ளக்
  • Option B: கியாசுதீன் துக்ளக்
  • Option C: பெரோஷ் துக்ளக்
  • Option D: மாலிக் கபூர்

  answer

  முகமது பின் துக்ளக்

  question 7

  சையதுகள் மரபின் கடைசி அரசர் யார்?

  • Option A: அலாவுதீன்
  • Option B: ஜலாலுதீன்
  • Option C: கைக்கோ பாத்
  • Option D: புக்ராக் ஆன்

  answer

  அலாவுதீன்

  question 8

  முபாரக் ஷா என்பவர் எந்த மரபைச் சார்ந்தவர்?

  • Option A: சையது மரபு
  • Option B: லோடி மரபு
  • Option C: ஆப்கானிய மரபு
  • Option D: கோரி மரபு

  answer

  சையது மரபு

  question 9

  சுல்தான்கள் காலத்தில் படை பொறுப்பின் அமைச்சர் யார்?

  • Option A: திவானி விசாரத்
  • Option B: திவானி அரிஸ்
  • Option C: திவானி அதாலத்
  • Option D: நிசாம் அதாலத்

  answer

  திவானி அரிஸ்

  question 10

  சுல்தான்கள் காலத்தில் வரி திரட்டுவதற்காக நியமிக்கப்பட்ட அதிகாரியின் பெயர் என்ன?

  • Option A: சாயத் இ திவான்
  • Option B: நவாப் இ திவான்
  • Option C: திவானி அரிஸ்
  • Option D: திவானி இன்ஷா

  answer

  சாயத் இ திவான்

  You can practice this lesson
  here
  Would you like to read similar lesson? Please go to history lessons

  Leave a Reply


  Please send your report

  latest lessons

  {{message}}