tamiltutor

TAMIL TUTOR இணையத்தில் ஒரு
கல்வி பாசறை

மனிதனை மனிதனாக்குபவை உதவிகளும் வசதிகளுமல்ல. இடையூறுகளும் துன்பங்களுமே. -- மாத்யூஸ்

சுதந்திரப் போராட்டத்தில் தமிழகத்தின் பங்களிப்பு, role of Tamil Nadu in freedom struggle part 3

எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் உங்கள் அனைவருக்கும், முதலில் எங்களுடைய மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம். நமது தளத்தில், தமிழில் போட்டித் தேர்வுகளுக்கு தயார் செய்து கொண்டிருப்பவர்களுக்ககவே, கேள்வி பதில்களை பிரத்யேகமாக தந்து வருகிறோம். இப்பொழுது TNPSC GROUP -1, GROUP -2 தேர்வுகளில் வரும் UNIT -8 உள்ள பாடங்களை ஒன்றன்பின் ஒன்றாக தந்து வருகிறோம். இந்த பதிவில், சுதந்திர போராட்டத்தில் தமிழகத்தின் பங்களிப்பு பகுதி-3 பார்க்க உள்ளோம். படித்துவிட்டு மறவாமல் பயிற்சியும் எடுத்துக் கொள்ளுங்கள். அதற்கான வசதியும், நமது தளத்தில் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. அதாவது கீழே உள்ள GO TO QUIZ என்ற லிங்கை பிரஸ் செய்வதன் மூலமாக, இதே பாடத்தை, நீங்கள் பயிற்சி செய்துக்கொள்ளலாம். மறவாமல் இந்த பதிவை, உங்களுடைய நண்பர்களுக்கும் பகிர்ந்து உதவுங்கள். நீங்கள் விரைவில் ஒரு அரசு அதிகாரியாக மாற, எங்களுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்! நாமும் படிப்போம், படித்த சமுதாயத்தை உருவாக்குவோம். சுதந்திரப் போராட்டத்தில் தமிழகத்தின் பங்களிப்பு, role of Tamil Nadu in freedom struggle part 3, FOR TNPSC UNIT -8

Go to quiz

ஆங்கிலத்தில் புலமை வேண்டுமா?

அவ்வாறென்றால், பழைய கற்றல் முறையை கைவிட்டு, புதுமையான எளிய விதிமுறைகளைக் கொண்ட இந்த, புதிய வகுப்பில் இப்பொழுதே சேருங்கள்.

இந்த வகுப்பை பற்றி மேலும் அறிந்து கொள்ள, கீழே உள்ள தொலைபேசி எண்களுக்கு, தயங்காமல் தொடர்பு கொள்ளுங்கள்.

 • VIGNESH 6383073556 /
 • VENKATESH 9360662257

 • அல்லது இங்கு முன்பதிவு செய்து, டெமோ வகுப்புகளை பாருங்கள்.
  Banner of abacus of English

  question 1

  1857 முதல் இந்திய விடுதலைப் போர் என்ற வீர சாவர்க்கரின் நூலை தமிழில் மொழி பெயர்த்தவர் யார்?

  • Option A: பாரதியார்
  • Option B: சுப்பிரமணிய சிவா
  • Option C: ராஜகோபாலாச்சாரி
  • Option D: வா வே சு ஐயர்

  answer

  வா வே சு ஐயர்

  question 2

  வா வே சு ஐயர் எந்த நாட்டிற்கு சென்று வெடிகுண்டு தயாரிக்கும் முறையை கற்றுக் கொண்டார்?

  • Option A: ரஷ்யா
  • Option B: பிரான்ஸ்
  • Option C: ஜப்பான்
  • Option D: ஜெர்மனி

  answer

  ரஷ்யா

  question 3

  புரட்சிகர விடுதலை போராட்டத்திற்கு இளைஞர்களை பயிற்றுவிப்பதற்காக பாண்டிச்சேரியில் வா வே சு ஐயர் ஏற்படுத்திய அமைப்பு எது?

  • Option A: ஜெயபாரதம்
  • Option B: சிவசக்தி
  • Option C: தர்மாலயம்
  • Option D: பாரதமாதா

  answer

  தர்மாலயம்

  question 4

  ஆஷ் கொலை வழக்கில் வா வே சு ஐயரின் பங்கு என்ன?

  • Option A: ஏற்கனவே கொலை முயற்சி செய்து தோற்று இருந்தார்
  • Option B: வாஞ்சிநாதனுக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி அளித்தார்
  • Option C: ஆஷ் துரையை ஏமாற்றி ரயில் நிலையத்திற்கு வரச் செய்தார்
  • Option D: பாண்டிச்சேரியிலிருந்து இளைஞர்களை கொலை செய்வதற்காக அனுப்பி வைத்தார்

  answer

  வாஞ்சிநாதனுக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி அளித்தார்

  question 5

  வா வே சு ஐயரின் பரத்வாஜ ஆசிரமம் எங்கு அமைந்திருந்தது?

  • Option A: பாண்டிச்சேரி
  • Option B: மணியாச்சி
  • Option C: சேரன்மாதேவி
  • Option D: நான்குநேரி

  answer

  சேரன்மாதேவி

  question 6

  ஆஷ் கொலை வழக்கில் வா வே சு ஐயர் எத்தனை ஆண்டு சிறை தண்டனை பெற்றார்?

  • Option A: 10 ஆண்டுகள்
  • Option B: 14 ஆண்டுகள்
  • Option C: 20 ஆண்டுகள்
  • Option D: 7 ஆண்டுகள்

  answer

  7 ஆண்டுகள்

  question 7

  வா வே சு ஐயரால் நடத்தப்பட்ட பத்திரிகை எது?

  • Option A: பால பாரதம்
  • Option B: சூரிய உதயம்
  • Option C: விவேகபானு
  • Option D: சுதேசமித்திரன்

  answer

  பால பாரதம்

  question 8

  பாரதமாதா சங்கத்தை தோற்றுவித்தவர் யார்?

  • Option A: வா வே சு ஐயர்
  • Option B: வாஞ்சிநாதன்
  • Option C: நீலகண்ட பிரம்மச்சாரி
  • Option D: நீலகண்ட ஆச்சாரியார்

  answer

  நீலகண்ட பிரம்மச்சாரி

  question 9

  நீலகண்ட பிரம்மச்சாரி நடத்திய பத்திரிக்கை எது?

  • Option A: பிரபஞ்ச மித்திரன்
  • Option B: சூரியோதயம்
  • Option C: புரட்சி பாரதம்
  • Option D: வேள்வி

  answer

  சூரியோதயம்

  question 10

  ப்ரோ இந்தியா இதழின் ஆசிரியர் யார்?

  • Option A: சுப்பிரமணிய சிவா
  • Option B: வா வே சு ஐயர்
  • Option C: அன்னிபெசன்ட் அம்மையார்
  • Option D: எம்டன் செண்பகராமன்

  answer

  எம்டன் செண்பகராமன்

  You can practice this lesson
  here
  Would you like to read similar lesson? Please go to unit 8 lessons

  Leave a Reply


  Please send your report

  latest lessons

  {{message}}