tamiltutor

TAMIL TUTOR இணையத்தில் ஒரு
கல்வி பாசறை

நீங்கள் உறங்கும் போது வருவது அல்ல கனவு, உங்களை உறங்க விடாமல் செய்வதே கனவு. -- அப்துல் கலாம்

குடியரசுத் தலைவரின் பணிகள் மற்றும் அதிகாரங்கள் பகுதி 2

சென்ற பகுதியில் குடியரசுத் தலைவர் மற்றும் துணை குடியரசுத் தலைவரின் பணிகள் மற்றும் அதிகாரங்கள் குறித்து பார்த்தோம். இந்தப் பகுதி அதன் தொடர்ச்சியாக பத்து கேள்விகளை கொண்டுள்ளது. இந்த வினாக்களுக்கு உங்களால் விடை அளிக்க முடியுமா? பத்திற்குப் பத்து எடுத்துக் காட்டுங்கள் பார்க்கலாம்.

Go to quiz

question 1

சட்டப்பிரிவு 111 இல் கூறப்பட்டுள்ளது யாது?

  • Option 1: குடியரசு தலைவரை பதவி நீக்கம் செய்யும் நடைமுறைகள் பற்றி
  • Option 2: மாநிலங்கள் மீதான குடியரசுத் தலைவரின் அதிகாரங்கள் பற்றி
  • Option 3: பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் மசோதாவின் மீது குடியரசுத் தலைவருக்கு உள்ள அதிகாரத்தைப் பற்றி
  • Option 4: தீர்ப்பாயங்கள் அமைப்பது பற்றி

answer

பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் மசோதாவின் மீது குடியரசுத் தலைவருக்கு உள்ள அதிகாரத்தைப் பற்றி

question 2

சட்டப்பிரிவு 123 இன் கூறப்பட்டுள்ளது யாது?

  • Option 1: ஒரு மாநிலத்தில் அவசர நிலையை கொண்டுவருவதற்கு குடியரசுத் தலைவருக்கு அதிகாரம் உண்டு
  • Option 2: நாட்டின் அனைத்து நீதிமன்றங்களும் உச்ச நீதிமன்றத்தின் கட்டுப்பாட்டில் செயல்படுகின்றன
  • Option 3: நாட்டின் ஒரு சில பகுதிகளை சிறப்பு அதிகாரம் பெற்ற பகுதிகளாக குடியரசு தலைவர் அறிவிக்கலாம்
  • Option 4: மாநில அவை மக்களவை அல்லது ஏதாவது ஒன்று நடைமுறையில் இல்லாத பொழுது குடியரசு தலைவர் தற்காலிக சட்டம் கொண்டு வரலாம்

answer

மாநில அவை மக்களவை அல்லது ஏதாவது ஒன்று நடைமுறையில் இல்லாத பொழுது குடியரசு தலைவர் தற்காலிக சட்டம் கொண்டு வரலாம்

question 3

குற்றவாளிகளுக்கு மாநில ஆளுநரால் மன்னிப்பு வழங்க முடியுமா? அவ்வாறு வழங்க முடியும் எனில் அது எந்த சரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது?

  • Option 1: வழங்கமுடியும் சட்டப்பிரிவு 168
  • Option 2: வழங்க முடியாது
  • Option 3: வழங்கக் கூடாது என்று சட்டப்பிரிவு 86 குறிப்பிடுகின்றது
  • Option 4: வழங்க முடியும் சட்டப்பிரிவு 161

answer

வழங்க முடியும் சட்டப்பிரிவு 161

question 4

குடியரசுத் தலைவர் யாருடைய அறிவுரையின் பெயரில் அவருடைய முடிவுகளை செயல்படுவார்?

  • Option 1: பிரதமர் மற்றும் அமைச்சர்களின் அறிவுரையின் பேரில் செயல்படுத்துவார்
  • Option 2: உச்சநீதிமன்ற நீதிபதியின் அறிவுரையின் பேரில்
  • Option 3: மாநில ஆளுநர்களின் அறிவுரையின் பேரில்
  • Option 4: அவரின் உதவிக்காக அமைக்கப்பட்டுள்ள குழுக்கள் மற்றும் செயலாளர்களின் அறிவுரையின் பேரில்

answer

பிரதமர் மற்றும் அமைச்சர்களின் அறிவுரையின் பேரில் செயல்படுத்துவார்

question 5

குடியரசுத் தலைவர் எப்பொழுது அமைச்சர் அவையை கலைக்கலாம்?

  • Option 1: நாட்டில் பாதிக்கும் மேற்பட்ட மாநிலங்களில் அனுமதி கிடைக்கும் போது
  • Option 2: நாட்டின் நிதி நிலைமை மிகவும் மோசமாக உள்ளபோது
  • Option 3: உச்சநீதிமன்றத்தின் உத்தரவின்படி
  • Option 4: மக்களவையில் பெரும்பான்மை இல்லாத பொழுது

answer

மக்களவையில் பெரும்பான்மை இல்லாத பொழுது

question 6

துணை குடியரசு தலைவர் என்ற பதவி எந்த நாட்டை மாதிரியாக வைத்து உருவாக்கப்பட்டது?

  • Option 1: கனடா
  • Option 2: அமெரிக்கா
  • Option 3: நார்வே
  • Option 4: இங்கிலாந்து

answer

அமெரிக்கா

question 7

துணை குடியரசுத் தலைவர் தேர்தலில் மாநில சட்டமன்ற உறுப்பினர்கள் வாக்களிக்க இயலுமா?

  • Option 1: இயலாது
  • Option 2: இயலும்
  • Option 3: சட்டமன்ற மேலவையில் உள்ளவர்கள் மட்டும் வாக்களிக்க இயலும்
  • Option 4: சட்டமன்ற மேலவையில் உள்ளவர்களால் மட்டும் வாக்களிக்க இயலாது

answer

இயலாது

question 8

துணை குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடுவதற்கான தகுதிகள் ஏதேனும் ஒன்றைக் குறிப்பிடுக?

  • Option 1: நாடாளுமன்றம் அல்லது சட்டமன்றம் ஆகியவற்றில் உறுப்பினராக இருந்த முன்னனுபவம் வேண்டும்
  • Option 2: நாடாளுமன்றத்தின் ஏதாவது ஒரு அவையில் உறுப்பினராக இருக்க வேண்டும்
  • Option 3: 35 வயதுக்கு மேல் இருக்க வேண்டும்
  • Option 4: ஏற்கனவே குடியரசுத் தலைவராக பதவி வகித்து இருக்கக் கூடாது

answer

35 வயதுக்கு மேல் இருக்க வேண்டும்

question 9

குடியரசுத் தலைவரை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்றால் எத்தனை நாளுக்கு முன்பாக அவருக்குத் தெரிவிக்கப்பட வேண்டும்?

  • Option 1: 5 நாட்களுக்கு முன்பாக
  • Option 2: 5 வாரங்களுக்கு முன்பாக
  • Option 3: ஒரு மாதத்திற்கு முன்பாகவே தெரிவிக்கப்பட வேண்டும்
  • Option 4: 2 வாரங்களுக்கு முன்பாகவே தெரிவிக்கப்பட வேண்டும்

answer

2 வாரங்களுக்கு முன்பாகவே தெரிவிக்கப்பட வேண்டும்

question 10

அரசியலமைப்பு சட்டப்பிரிவு 66 எதைப் பற்றி கூறுகிறது?

  • Option 1: துணை குடியரசுத் தலைவரின் தேர்தலைப் பற்றி கூறுகிறது
  • Option 2: குடியரசுத் தலைவரின் அதிகாரங்கள் பற்றி கூறுகிறது
  • Option 3: அமைச்சர்கள் நாடாளுமன்றத்திற்கு பொறுப்புடையவர்கள் என்பதைக் குறிப்பிடுகின்றது
  • Option 4: நாடாளுமன்ற நடவடிக்கைகள் பற்றி கூறுகின்றது

answer

துணை குடியரசுத் தலைவரின் தேர்தலைப் பற்றி கூறுகிறது

சிறுபாணாற்றுப்படை சார்ந்த முக்கிய கேள்விகள் மற்றும் தேர்வில் அதிகம் கேட்க வாய்ப்பிருக்கும், முக்கிய கேள்விகள் இங்கு தரப்பட்டிருக்கிறது. இதில் நீங்கள் பத்துக்கு பத்து எடுக்க எங்களுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்!
Next: தமிழ் இலக்கிய வரலாறு, பத்துப்பாட்டு, சிறுபாணாற்றுப்படை வினா விடைகள், for upsc,tnpsc
Would you like to read similar lesson? Please go to polity lessons

Leave a Reply


Please send your report

latest lessons

{{message}}