tamiltutor

TAMIL TUTOR இணையத்தில் ஒரு
கல்வி பாசறை

நீங்கள் உறங்கும் போது வருவது அல்ல கனவு, உங்களை உறங்க விடாமல் செய்வதே கனவு. -- அப்துல் கலாம்

குடிமையியல் அலகு 4 - மனித உரிமைகளும் ஐக்கிய நாடுகல் சபையும், 8 ஆம் வகுப்பு சமூக அறிவியல் பகுதி 1

எங்களுக்கு தொடர்ந்து ஆதரவளித்து வரும் உங்கள் அனைவருக்கும், முதலில் எங்களுடைய மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம். அறிமுகம்: பிறப்பால் அனைவரும் சமம். உலகில் உள்ள ஒவ்வொரு தனிமனிதனுக்கும் தன் விருப்பப்படி வாழ உரிமை உண்டு. மனித உரிமைகளானது தனிநபர்கள் மற்றும் சமூகம் தொடர்பானவை. மனித உரிமைகள் மக்கள் சுதந்திரமாக மற்றும் விருப்பப்படி வாழ்வதை உறுதிசெய்வதுடன் இயல்பாக பெறும் அனைத்து உரிமைகளையும் குறிப்பிடுகிறது. மக்களின் சமஉரிமைகளை ஒவ்வொரு நாடும் உறுதி செய்கிறது. மனித உரிமைகள் என்றால் என்ன? மனித உரிமைகள் என்பது இனம், பாலினம், தேசிய இனம், இனக்குழுக்களின் தன்மை, மொழி மற்றும் சமய வேறுபாடின்றி அனைத்து மனிதர்களுக்குமான இயல்பாந உரிமைகள் ஆகும். மனித உரிமைகளில் அடிமைத்தனம் மற்றும் சித்திரவதைகளிலிருந்து சுதந்திரம், கருத்து மற்றும் கருத்துச் சுதந்திரம் மற்றும் நியாயமான விசாரணை, வாழ்வதற்கான உரிமை. வேலை மற்றும் கல்விபெறும் உரிமை ஆகியவை அடங்கும். மறவாமல் இந்த பதிவை உங்களுடைய நண்பர்களுக்கும் பகிர்ந்து உதவுங்கள். நீங்கள் விரைவில் ஒரு அரசு அதிகாரியாக ஆக, எங்களுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்! நாமும் படிப்போம், படித்த சமுதாயத்தை உருவாக்குவோம். 8th social science, குடிமையியல் அலகு 4 - மனித உரிமைகளும் ஐக்கிய நாடுகல் சபையும், பகுதி 1, for tnpsc, trb, tet, net, set

Go to quiz

question 1

இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் .........மனித உரிமைகளைப் பாதுகாக்க பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

  • Option 1: ஐ.நா.சபை
  • Option 2: உச்ச நீதிமன்றம்
  • Option 3: சர்வதேச நீதிமன்றம்
  • Option 4: இவைகளின் எதுவுமில்லை

answer

ஐ.நா.சபை

question 2

1995 ஆம் ஆண்டில் உலகம் முழுவதிலும் இருந்து பெண்கள் ....... இல் கூடினர்.

  • Option 1: பெய்ஜிங்
  • Option 2: நியூயார்க்
  • Option 3: டெல்லி
  • Option 4: எதுவுமில்லை

answer

பெய்ஜிங்

question 3

தேசிய மனித உரிமைகள் ஆணையம் நிறுவப்பட்ட ஆண்டு

  • Option 1: 1990
  • Option 2: 1993
  • Option 3: 1978
  • Option 4: 1979

answer

1993

question 4

ஐ.நா. சபை 1979 ஆம் ஆண்டை............சர்வதேச ஆண்டாக அறிவித்தது .

  • Option 1: பெண்குழந்தைகள்
  • Option 2: குழந்தைகள்
  • Option 3: பெண்கள்
  • Option 4: இவற்றில் எதுவுமில்லை

answer

குழந்தைகள்

question 5

உலக மனித உரிமைகள் தினமாக அனுசரிக்கப்படும் நாள் எது ?

  • Option 1: டிசம்பர் 9
  • Option 2: டிசம்பர் 10
  • Option 3: டிசம்பர் 11
  • Option 4: டிசம்பர் 12

answer

டிசம்பர் 10

question 6

மனித உரிமைகளின் நவீன சர்வதேச மகாசாசனம் என அழைக்கப்படுவது எது

  • Option 1: மனித உரிமைகளுக்கான உலகளாவிய அறிவிப்பு (UDHRC)
  • Option 2: தேசிய மனித உரிமைகள் ஆணையம்(NHRC)
  • Option 3: மாநில மனிதஉரிமைகள்ஆணையம்(SHRC)
  • Option 4: சர்வதேச பெண்கள் ஆண்டு

answer

மனித உரிமைகளுக்கான உலகளாவிய அறிவிப்பு (UDHRC)

question 7

தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்படுபவர் யார்

  • Option 1: ஒய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி
  • Option 2: ஒய்வு பெற்ற உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி
  • Option 3: குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படும் ஏதேனும் ஒருவர்
  • Option 4: ஏதேனும் ஒரு நீதிமன்றத்தில் ஒரளவு பெற்ற தலைமை நீதிபதி

answer

ஒய்வு பெற்ற உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி

question 8

உலக மனித உரிமைகள் அறிவிப்பில் உள்ள சட்டப்பிரிவுகளின் எண்ணிக்கை யாவை

  • Option 1: 20
  • Option 2: 30
  • Option 3: 40
  • Option 4: 50

answer

30

question 9

தேசிய மனித உரிமைகள் ஆணையத் தலைவரின் பதவிக் காலம் என்ன

  • Option 1: 8 ஆண்டுகள் அல்லது 62 வயது வரை
  • Option 2: 5 ஆண்டுகள் அல்லது 65 வயது வரை
  • Option 3: 8 ஆண்டுகள் அல்லது 68 வயது வரை
  • Option 4: 5 ஆண்டுகள் அல்லது 70 வயது வரை

answer

5 ஆண்டுகள் அல்லது 70 வயது வரை

question 10

தேசிய மனித உரிமைகள் ஆணைய தலைமையகம் அமைந்துள்ள இடம் எது

  • Option 1: புது டெல்லி
  • Option 2: மும்பை
  • Option 3: அகமதாபாத
  • Option 4: கொல்கத்தா

answer

புது டெல்லி

தமிழக பள்ளி பாடப்புத்தகத்தில் இருந்து, தேர்வில் கேட்க அதிக வாய்ப்புள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட தரமான கேள்விகள் இதோ, உங்களுக்காக தரப்பட்டிருக்கிறது. முடிந்தால்? முழு மதிப்பெண் எடுத்துக் காட்டுங்கள். உங்களுக்கு எங்களுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்!
Next: 8 ஆம் வகுப்பு சமூக அறிவியல் குடிமையியல், அலகு 4 - மனித உரிமைகளும் ஐக்கிய நாடுகல் சபையும் பகுதி 2
Would you like to read similar lesson? Please go to School books lessons

Leave a Reply


Please send your report

latest lessons

{{message}}